தன்னை காணவரும் பக்தர்களுக்கு ஐயப்பன் சில அறிவுரைகள் வழங்கியுள்ளார். தூய மனத்தில் ஞானம் ஒளிரும்,ஞானம் வாழ்வின் லட்சியம் ஆகும். நற்கருமத்துக்கு இடையூறாவது காமம், வெகுளி, பேராசை ஆகியன இவற்றில் இருந்து விடு பெற கடவுளை நினைத்து தியானம் செய்வது அவசியம்.
தியானத்தில் மனம் நிலை பெறும் போது சாந்தியும், பேரின்பமும் உண்டாகும். கடவுளிடம் சரணாகதி அடைவதே பக்தியின் இறுதிமொழி. `சரணம் ஐயப்பா’ என்ற சரணாகதி மந்திரத்தை தூய மனதுடன் ஓதுகிறவன் முக்தி பெறுவான். பதினெட்டு படியேறி தரும சாஸ்தாவின் சந்நிதி எட்டியதும் கடவுள் தரிசனம் கிடைக்கிறது.