உலகத்தில் மிகப்பழமையான பத்து மொழிகளை *’Worldblaze’* இணையதளம் வரிசைப்படுத்தியிருக்கிறது.
சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் மொழியானது தோன்றியிருந்தாலும், கிட்டத்தட்ட 6000 மொழிகள் தற்போது உலகெங்கும் பேசப்பட்டு வருகின்றன.
இந்த மொழிகளில் பழைய மொழிகள் எவையென்பதைக் கண்டுபிடிப்பதில் பல சிரமங்கள் இருக்கின்றன. எங்களால் உருவாக்கப்பட்ட வரிசை இது.
*10 வது இடத்தில் லத்தீன் மொழி (Lattin)*
ரோம சாம்ராஜ்ஜியத்தில், லத்தீன் மொழி பரவலாகப் பேசப்படதாகக் கருதப்படுகிறது. அது கி.மு.75 ஆண்டு அளவுகளில் உருவாகியிருக்கலாம்.
*9 வது இடத்தில் ஆர்மேனியன் மொழி (Armenian)*
இந்தோ-ஐரோப்பிய மொழியாகக் கருதப்படும் ஆர்மேனிய மொழி, கி.மு. 450 வருட அளவில் தோன்றியிருக்கலாம்.
*8 வது இடத்தில் கொரியன் மொழி (Korian)*
கொரியன் மொழி கி.மு.600 ஆண்டளவில் உருவாகியிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
*7 வது இடத்தில் எபிரேய மொழி (Hebrew)*
இஸ்ரேலில் அங்கீகாரமுள்ள மொழியான, எபிரேய மொழி கி.மு.1000 ஆண்டுகள் பழமையானது என்கிறார்கள்.
*6 வது இடத்தில் அராமிக் மொழி (Aramaic)*
அரபு மொழி, எபிரேய மொழி ஆகிய இரண்டுக்கும் அடிவேராக இருந்த மொழி அராமிக் மொழியென்று சொல்கிறார்கள். இது கி.மு.1000 ஆண்டுகளுக்கு முந்தைய காலங்களில் உருவாகியிருக்கிறது.
*5 வது இடத்தில் சீன மொழி (Chinese)*
சீனர்களாலும், சுற்றுப் பிரதேச மக்களாலும் பேசப்பட்டுவந்த இந்தச் சீன மொழி, கி.மு.1200 வருடங்களுக்கு முன்னர் உருவாகியிருக்கலாம்.
*4 வது இடத்தில் கிரீக் (Greek)*
கிரேக்க தேசத்திலும் அதைச் சுற்றியுள்ல பிரதேசங்களிலும் கி.மு.1450 ஆண்டளவுகளில் கிரேக்க மொழி உருவாகியிருக்கலாம்.
*3 வது இடத்தில் எகிப்து மொழி (Egyptian)*
ஆஃப்ரோ-ஆசிய மொழியாகக் கருதப்படும் எகிப்திய மொழி, கி.மு. 2600 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
*2 வது இடத்தில் சமஸ்கிருத மொழி (Sanskrit)*
இந்தியாவில் உருவான சமஸ்கிருத மொழி, பல ஐரோப்பிய மொழிகளுக்கு அடிப்படையானது. ஆனால் இதே மொழி தமிழ் மொழியை அடிப்படையாகக் கொண்டது. இது கி.மு. 3000 ஆண்டளவுகளில் உருவாகியிருக்கலாம்.
*1 வது இடத்தில் தமிழ் மொழி (Tamil)*
5000 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மொழி தமிழ் மொழியாகும். இன்றுவரை உயிர்ப்புடன் இருக்கும் பழைய மொழிகளில் தமிழ் முன்னணியில் உள்ளது.