சனிக் கோளப்பரின் மஹிமையை உரைநடையாக எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்வதும், பிறருக்கும் உணர்த்துவதும் உண்மையாகவே சனீஸ்வரருக்கான ஒரு வகைப் பூஜையே!
🌀 கரிநாள் தின வழிபாடுகள் 9⃣🌀
வாத்தியார் அருளுரையிலிருந்து
தேன் துளிகள்
☑ கரியப்பத் திருநாள் – சனீஸ்வரர் ஆயுள்காரக ஆயுள் விருத்தியைத் தருகின்ற கோளப்ப மூர்த்தி என்பதைப் பலரும் மறந்து விடுகின்றனர்.
☑சனி தசை என்றாலேயே பலருக்கும் பயம் வந்து விடுகின்றது. உண்மையில் இதுவே பயம் கலந்த பக்தி ஆகும்.
☑இறைவன் சாதுவான அவதார மூர்த்தியாகத் தோன்றுகையில் வன்முறையில் வல்லவர்களான அசுரர்கள் கடவுளையே எதிர்த்தனர். எனவே ஸ்ரீதுர்க்கை, ஸ்ரீநரசிம்மர், ஸ்ரீகாளி போன்று ருத்ர, ஆக்ரோஷ அம்சங்களைக் கொண்டே இறைவனும் அசுர சக்திகளைத் தணித்து, மாய்த்து கலியுக மக்களுக்குப் பாடங்களைப் புகட்டுவதாகவே புராண அனுபூதிகள் அமைந்துள்ளன.
☑எனவே புராண சம்பவங்கள் யாவும் இறைவன் அனைவருள்ளும் உய்கின்றார் என்பதை உணர்த்திடவேயாம்.
☑ உருவமற்று, எங்கும் நீக்கமற நிறைந்திருப்பதே அன்பு, பக்தி எனப்படும் இறையருள் ஆகும்.
☑இதனை இவ்வாறு உணர்ந்து நெகிழ்ந்திடவே, மானுடப் பிறவியும் அதியற்புதமாக அமைகின்றது.
☑ஒரு விதத்தில் கர்ம வினைப் பூர்வமாகப் பிறவிகள் அமைகின்றன என்பது உண்மை எனினும், மறுபுறம் மானுட சரீரமே பிறவிக் கடலைத் தாண்ட உதவும் கப்பல் எனவும் ஆகின்றதல்லவா!
☑இந்த மானுட உடலில் உய்யவும், வாழவும் ஆயுள் சக்தி மிகவும் தேவையாகின்றது.
☑ இதனை ஒவ்வொரு நாளும் அளிப்பவரே சனீஸ்வரராவார்.
☑உண்மையில், நாம் ஒவ்வொரு விநாடியும் வாழ்வது சனைஸ்சர மூர்த்தியின் ஆயுள்காரக அருளால்தான்!
☑நம் உடலே ஆத்ம வடிவாக இருப்பதால், நவ கோள்களின் வடிவுகளும் உடலில் செறிகின்றன. எனவே, நாம் வெளிப் பூர்வமாக வணங்குவது நம் உடலில் நம் கண்களுக்கு, அறிவுக்குப் புலப்படாமல் துலங்கும் சனைஸ்சர சக்தியின் வெளித் தோற்றமேயாகும்.
☑விஞ்ஞானம் என்பது அய்ந்து புலன்கள் மூலமாக வெளிப்படையாகத் தென்பட்டு அறிவது. எனவே கல்மிஷமான மனதால் அறிவதால், அறியும் வழிப்பாட்டிலும் பலவும் தவறாக வாய்ப்புண்டு. எனவேதாம் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளும் தாமே தமக்கு முரணாக, குறிப்பாக மருத்துவத்தில் பலவும் தவறாகி, மாறிக் கொண்டே இருக்கின்றன.
☑ஆனால் மெய்ஞானம் என்பது எது சாசுவதம், நிலைத்து நிற்பது என அய்ந்து புலன்களுக்கும் தானாகவே
பூஜா பலன்களால்,
பித்ருக்களின் ஆசையால்,
தியானத்தால்,
யோகத்தால் உணர்விப்பது.
☑எனவே ஆயுள்காரக சக்திகள் ஆயளை அளிப்பது மட்டுமன்றி, அய்ந்து புலன்களாலும் இறைமையை, இறைவனாகிய கடவுளை அறியும், உணரும் தன்மைகளை மேம்படுத்தவும் உதவுவதாகும்.
☑சனீஸ்வரர் அளிக்கும் ஆயுள்காரக சக்திகள் இந்தப் பிறவியின் ஆயுளுக்காக மட்டுமே எனத் தவறாகப் பொருள் கொள்ளப்படுவதால்தான், பலராலும் ஆயுள் சக்தியின் மஹிமையை உணர இயல்வதில்லை.
☑எனவே சனீஸ்வரர் வழிபாடானது முதலில் ஆயுள் பற்றிய அறிவை, ஞானத்தை அளிப்பதாகும்.
☑சனி தசை என்றாலே துன்பங்கள் வரும் என்று பலரும் அஞ்சுவர். உண்மையில், அவரவர் செய்த வினைகளின் விளைவுகளே, துன்பங்களாக வரும் என்பதைப் பலருமே அறிந்தாலும், இந்த விளைவுகள் ஆயுளையும் குறைக்கும் என்பதையும் அறிவதில்லை!
☑துன்பங்களைக் கஷ்டப்பட்டு அனுபவித்துக் கழிக்கும்போதுதான் வினைத் தொல்லைகள் பலவும் குறைவதால், ஆயுளைக் குறைக்கும் இடர்ப்பாடுகளும் தாமாகவே சிறிது சிறிதாக அகல்கின்றன அல்லவா! இதனைச் செய்து அருள்வதும் சனீஸ்வரரே!
☑எனவே சனி தசை, சனி புக்தி என்பது பூர்வ ஜன்மங்களின் வினைத் தன்மைகள் பலவும் ஒட்டு மொத்தமாகக் கழியும் நற்காலமே!
☑வினை விளைவுகளை நஷ்டம், நோய், பிரிவு, துக்கம் எனப் பலவகைகளில் – எவ்வகையில் பிறருக்குத் துன்பங்கள் தந்தனரோ – அதே வகையில் அனுபவித்தாக வேண்டும் என்பதை முதலில் உணர வேண்டும்.
☑எனவே சனீஸ்வரரே துன்பங்களை அளிக்கின்றார் என்ற முற்றிலும் தவறான எண்ணத்தை இனியேனும் திருத்திக் கொள்வீர்களாக!
☑பிள்ளையைத் திருத்த தாயும், மாணவனைத் திருத்த நல்ஆசிரியரும் நன்முறையில் சற்றே திட்டுவதால், அடிப்பதால் ஏற்படும் வலி சற்றே துன்பமுடையதே!
☑ஆனால் இத்துன்பம்தானே பிள்ளையைத் திருத்தி, ஒளி மயமான எதிர்காலத்தைப் பெற நல்அருள் தரும்.
☑எனவே செய்த வினைகளுக்கான விளைவுகளை துன்பங்களாக, தண்டனைகளாக, நியாயமாக, தர்ம ரீதியாக அளித்து,
வினையின் விளைவுகளாகத் துன்பங்களையும் அனுபவிக்க வைத்து,
வினைகளின் வலிமையைத் தணித்து மங்கி இருக்கும் ஆயுள் சக்திகளை பிரகாசம் அடையச் செய்கின்ற காருண்ய மூர்த்தியே சனீஸ்வர மூர்த்தி!
☑இதனை இவ்வகையில் இன்று நன்கு படித்து அறிவதும்,
பிறருக்கு உணர்விப்பதும் சனீஸ்வர வகை வழிபாடுகளில் ஒன்றாகும்.
☑இந்த விளக்கத்தையே இன்று சனீஸ்வரர் சன்னதியில் படிப்பதும் ஞானமார்க வழிபாடாகின்றது.
☑ சுலோகம், துதிகளைப் படிப்பது, சனீஸ்வரரை வலம் வருவது, எள் விளக்கு ஏற்றுவது போன்று, சனிக் கோளப்பரின் மஹிமையை இவ்வாறு உரைநடையாக எளிமையாகப் படித்துப் புரிந்து கொள்வதும், பிறருக்கும் உணர்த்துவதும் உண்மையாகவே சனீஸ்வரருக்கான ஒரு வகைப் பூஜையே!
☑சனி தசை என்றாலே அஞ்சி, அஞ்சி வாழ்வோர்க்கு இவ்வாறு எளிமையான முறையில் சனீஸ்வர மகாத்மியத்தைப் புரிய வைப்பதும் ஓர் அற்பு மருத்துவ ரீதியான இறைப் பணியே!
☑எனவே, இனியேனும் சனீஸ்வரர் ஆயுள்காரகாரகராகவும், ஆயுள் சக்திகளை எதிர்க்கின்ற தீய சக்திகளை வென்று நல்ல ஆயுள் சக்தியை அளிப்பவருமாகவும் என உணர்ந்திடுக!
☑ஆலயத்தில், இல்லத்தில் சனீஸ்வரர் துதிகளை ஓதுகையில் இதனைக் கண்களால் படிக்க உதவும் சீரிய மூர்த்தியின் துணையுடனும், மனதால் அறிவதால் சந்திர மூர்த்தியின் துணையுடனும் சனீஸ்வரரின் அருளைப் பெற முயற்சிக்கின்றோம் என்பது பொருள்.