நமக்கு கண்ணுக்குத் தெரிந்த தோஷங்கள் சிலவகை தான். அதற்கான பரிகாரத்தை செய்து விடுவோம். ஆனால், கண்ணுக்கே தெரியாத பல தோஷங்கள் இருக்கத்தான் செய்கிறது. அதன் மூலம், பாதிப்புகளும் அதிகமாகத்தான் இருக்கிறது. அதை குறைக்க என்ன செய்ய வேண்டும். சர்வ தோஷமும் நிவர்த்தி ஆக உங்களுக்கான பரிகாரம் இதோ!
நாயுருவி குச்சியை வாங்கி சிறிய துண்டு, இரண்டு இன்ச் அளவு உடைத்து, மஞ்சள் நிறத் துணியில் வைத்து, ஐந்து வண்ண நூலை கொண்டு கட்ட வேண்டும். எப்படி வேண்டும் என்றாலும் உங்கள் சௌகரியத்துக்கு கட்டிக்கொள்ளுங்கள். ஆனால், நிறம் மட்டும் மஞ்சள் நிறத் துணி, நூல் ஐந்து வண்ண நூல். வர்ணம் உங்க இஷ்டம் தான்! ஒரு கருப்பு நிற நூல் மட்டும் கட்டாயம் இருக்க வேண்டும். மற்ற நான்கு நிறங்கள் வேறு எதுவாக வேண்டுமென்றாலும் இருக்கலாம். இந்த முடிச்சை கட்டி தயார் செய்து பூஜை அறையில் வைத்து விட்டு, ஒரு தீபம் ஏற்றி பின்வரும் மந்திரத்தை 108 முறை உச்சரியுங்கள்! உங்களுக்கான மந்திரம் இதோ!
ஓம் ஹரி ஹரி சிவ சிவா
ஹரி ஓம் சிவா!
அதன் பின்பாக, இந்த முடிச்சை உங்கள் பாக்கெட்டிலோ அல்லது பார்சிலோனா வைத்துக்கொள்ளலாம். சிறிய அளவில் தயார் செய்து வைத்துக்கொள்ளுங்கள். 48 நாட்கள் இதை உங்கள் கைகளிலேயே வைத்துக் கொண்டிருந்தால், கண்ணுக்குத் தெரியாத எந்த தோஷமாக இருந்தாலும் அது நிவர்த்தி ஆகி விடும் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு வரக்கூடிய பிரச்சினைகளுக்குக் காரண காரியம் தெரியவில்லை ஆனால், பிரச்சனை மட்டும் வந்துகொண்டே இருக்கின்றது என்ற மனக்குழப்பத்தில் நீங்கள், இருப்பவர்களாக இருந்தால், வரக்கூடிய பிரச்சினைகள் எல்லாம், ஏதோ ஒரு தோஷம் தான் காரணமாக இருக்கும் என்ற எண்ணம் உங்களிடத்தில் இருந்தால், இந்த பரிகாரத்தை முயற்சி செய்து பார்க்கலாம். எந்த தோஷமும் இல்லை என்றாலும், இந்த பரிகாரத்தை செய்வதன் மூலம் எந்த ஒரு பாதிப்பும் ஏற்படாது.