திருமணம் செய்தபின் அந்த பொண்ணுக்கு தன் கணவன் தான் முழு முதற் கடவுகளாக இருக்கின்றான். அதுபோல திருமணம் செய்த ஆண் தன் அனைத்து முயற்சியும் தன் மனைவி தன் பிள்ளைகாக தான் எடுக்கிறான் மற்றும் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய கடுமையாக உழைப்பவனாக இருக்கிறான்.
அப்படிபட்ட கணவன் தீர்க்க ஆயுளுடன் இருக்க மனைவியாக இருக்கும் சில பெண்கள் பல விரதங்கள், வேண்டுதல்கள் செய்வதுண்டு. கணவன் நீண்ட காலம் வாழ்வதற்காக மஞ்சள் தாலிக்கயிறு மாற்றும் போது என்ன மந்திரம் சொல்ல வேண்டும் என்பதை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
தன் கணவன் தீர்க்க ஆயுளுடன் இருக்க சித்திரை மாதம் மீனாட்சி திருக்கல்யாணம் நடக்கும் நாளில் மஞ்சள் கயிறு அணியும் பெண்கள் தங்களின் பழைய தாலி சரடை மாற்றிக் கொள்வது வழக்கம். பழைய சரடை மாற்றி புதுச்சரடு அணிந்து கொள்ளும் போது, சுமங்கலிகள் இங்கு குறிப்பிட்டுள்ள மந்திரத்தை சொல்லிக் கொண்டே கட்டிக் கொண்டால் கணவன் நீண்ட ஆயுளுடன் இருப்பான்.
தோரம் க்ருஹ்ணாமி சுபகே ஸ்ஹாரித்ரம் தராம்யஹம்
பர்த்து ஆயுஷ்ய ஸித்யர்த்தம் ஸீ ப்ரீதா பவ ஸர்வதா
பதி வ்ரதே மஹா பாகே பர்த்துஸ்ச ப்ரியவாதினீ
அவைதயம் ச ஸெளபாக்யம் தேஹி த்வம் மம ஸுவர்தே
ஸெளபாக்யம் ஸெளமாங்கல்யம் ச தேஹிமே
இந்த மந்திரத்தை சொல்லும் போது கணவனுக்கு நீண்ட ஆயுள் மட்டுமல்லாமல் குடும்பத்தில் அன்பும், மகிழ்ச்சியும் நிறையும். தம்பதியிடையே ஒற்றுமை அதிகரிக்கும். குழந்தை பேறு மற்றும் குழந்தைகளால் நற்பெயரும் கிடைக்கும்.