*கடவுள் நம்பிக்கை இல்லன்னாலும் பரவாயில்ல..மனசு அமைதியாக கோவிலுக்கு போங்க..அறிவியல் சொல்லும் உண்மை..*
நமது முன்னோர்கள் பழமைவாதிகள் அல்ல. மூத்த விஞ்ஞானிகள் மனம், உடல், ஆன்மா அனைத்தையும் அடக்கி வைக்கும் சூட்சுமம் தெரிந்தவர்கள் என்றே சொல்ல வேண்டும். அவர்களது வாழ்க்கை முறை ஒவ்வொன்றுமே அறிவியலோடு தொடர்பு கொண்டவை என்பதை மறுக்க முடியாது. அறிவியலை ஆன்மிகத்தில் நுழைத்து கொண்டவர்கள். அதில் முக்கியமான ஒன்றுதான் வழிபாடு.
மனம் அமைதியாக இருக்க வேண்டும் என்று விஞ்ஞானத்தோடு அமைத்த இடங்கள் தான் ஆலயங்கள். அப்படி அமைத்த கோவில்கள் எல்லாமே வெறும் கட்டடங்கள் என்று சொல்லிவிட முடியாது. அவையெல்லாமே பூமியின் காந்த அலை பாதை அடர்த்தியாக கடந்து செல்லும் இடங்கள். இந்த அலைகளை நேர்மறை ஆற்றலாக மாற்றுவதற்கு தான் சடங்குகளும் சம்பிரதாயங்களும் அமைக்கப்பட்டிருக்கிறது என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
குறிப்பாக கருவறை இருக்கும் இடம். அதனால் தான் கோயில் எழுப்பும் போது மூலவரை அமைத்து அதன் பிறகு கோவிலின் மூலச்சுவர்களை எழுப்புக்றார்கள். இந்த கருவறையில் இருக்கும் மூலவரின் சிலைக்கு அடியில் தான் செப்பு கலந்த தகடு வைத்திருப்பார்கள். இந்த தகடுதான் பூமிக்கு அடியில் இருக்கும் காந்த அலைகளை உறிஞ்சு கொண்டு அருகில் இருப்பவர்களுக்கு வெளிப்படுத்தும். இதை உள்வாங்கி கொள்ளவே இரண்டு கைகூப்பிஅதை வணங்கி உடலுக்குள் வாங்கி கொள்கிறோம்.
அது போன்றுதான் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படும் புனித நீரும் அபிஷேகம் செய்யும் போது நேர்மறை ஆற்றலுடன் செயல்படுகிறது. வெற்றுகால்களில் கோவில் பிரகாரத்தை வலம் வரும்போது நேர்ம்றை ஆற்றல்கள் பாதங்கள் வழியாக உடலுக்குள் ஊடுருவுகிறது.ஆலய மணியின் ஓசைகள் கூட நம் மூளையின் இடது வலது புற மூளையை சோர்விலிருந்து தட்டி எழுப்புகிறது. அதனால் தான் வாரந்தோறும் ஆலயம் செல்வதை வழக்கமாக வைத்திருந்தார்கள் நம் முன்னோர்கள்.
இறை நம்பிக்கை இல்லையென்றால் என்ன கோவிலுக்கு சென்று வந்தாலே உடல், மனம் இரண்டுமே பேரமைதிக்கு உள்ளாகும். முயற்சி செய்துதான் பாருங்களேன்.