அன்பு குழந்தையே…
உனக்குள் நான் இருக்கும் போது நீ எதற்கு யாரும் இல்லை என்று புலம்புகிறாய். அந்த எண்ணம் தவறானது. ஆபத்தானதும் கூட.
எல்லாச் சுமைகளையும் என்னிடம் கொட்டி விட்டாய் அல்லவா பிறகு ஏன் இன்னும் வருத்தப்பட்டுக் கொண்டே இருக்கிறாய்.
உலகில் உள்ள அனைவருக்கும் ஒவ்வொரு விதமான சுமைகள் இருந்து கொண்டே தான் இருக்கும்.
உனக்கு சிறியதாக தெரியும் பிரச்சனை பிறர்க்கு பெரியதாக இருக்கும். அவர்களுக்கு சிறியதாக தெரியும் பிரச்சனை உனக்கு தலையாய பிரச்சனையாக இருக்கும்.
உன் வாழ்வில் நீ தைரியமாக உன்னை சூழ்ந்துள்ள துயரங்களை எதிர்த்து நின்றால் தான் அதை வெற்றி காண முடியும்.
நீ போகும் பாதையில் மோசமான மனிதர்கள் ரூபத்திலோ அல்லது வேறு ஏதேனும் ஒரு வழியிலோ உனக்கு தடைகள் வரும். அதைக் கண்டு் எல்லாம் அஞ்சாதே.
தைரியமாகவும் நம்பிக்கையுடன் உன் இலக்கை நோக்கி போய்க் கொண்டே இரு,
கடமைகளில் இருந்து ஒரு நாளும் தவறாதே.
பிறகு பார் இதுவரை சந்தித்த வேதனைகள் எல்லாம் காணாமல் போய் விடும்.நீ நினைத்து வியக்கும் அளவிற்கு நிச்சயம் மாறுதல்கள் நடைபெறும்.
நம்பிக்கையோடு நான் கூறும் வார்த்தைகளை பின்பற்று. நீ எதையெல்லாம் இழந்தாயோ நான் அதை விட அதிகமாக உன்னை வந்து சேரும் படி செய்வேன்
எல்லாம் தெளிவு பெற்று நீ உன் வாழ்வில் முன்னோக்கி மகிழ்ச்சியாய் செல்லும் காலம் வந்துவிட்டது. இது என் சத்திய வாக்கு
நான் பார்த்துக் கொள்கிறேன், நீ வெற்றியின் உச்சத்தை நிச்சயம் அடைவாய். நீ என் அருளும் அன்பும் பெற்ற என் செல்ல பிள்ளை.
ஓம் ஸ்ரீ சாய் ராம்…