பெரிய தொழில்களில் மிகுந்த நஷ்டமடைந்து அதனால் கீழ் நிலைக்கு தள்ளப்பட்டு உள்ள தொழிலதிபர்கள் மற்றும் நடுத்தர தொழில் நிறுவனம் நடத்துபவர்களுக்கான யந்திர பரிகாரம்:
சிலருடைய ஜாதக அமைப்பு மற்றும் தசா புத்திகளின் காரணமாக பெரிய பெரிய தொழில் செய்து வந்தவர்கள் எல்லாம் திடீரென்று நஷ்டமடைந்து கீழ் நிலைக்கு தள்ளப்பட்டு கஷ்டப்பட்டு வருவார்கள். இவர்கள் அதிகமான கடன் பிரச்சனைகளில் மாட்டிக்கொண்டு சொத்துக்களை விற்கும் அளவிற்கு துன்பத்தை அனுபவித்து வருவார்கள். இவர்களைப்போன்ற உள்ளவர்களுக்காகவே இந்த சக்திவாய்ந்த “மாயா” யந்திர விதானம்.
இந்த யந்திர சக்தியை பயன்படுத்தும்போது ஏற்கனவே கடன் கொடுத்தவர்கள் உங்களை தொந்தரவு செய்யமாட்டார்கள். மேலும்¸ அதிகமாக பணவசதி படைத்தவர்கள் உங்கள் தொழில் திரும்ப ஏற்றம்பெற தேவையான பண உதவிகளை செய்து கொடுப்பார்கள். மிகவும் சக்திவாய்ந்த யந்திர பூஜை இது.
சுத்தமான கோரோசனை மற்றும் குங்கமப்பூ கலந்து இந்த படத்தில் கொடுத்துள்ள யந்திரத்தை பூர்ஜபத்திரத்தில் வரைந்து உரிய முறையில் ப்ராண ப்ரதிஷ்டை செய்ய வேண்டும். பின்னர்¸ இந்த யந்திரத்தை சுத்தமான ஒரு இடத்தில் வைத்து வாழை இலையில் பாயாசம்¸ தேன்¸ நெய் போன்ற நைவேத்தியங்களை படைத்து துர்க்காதேவியை நினைத்து பூஜிக்க வேண்டும்.
அதன் பின்னர் உங்கள் ஜாதகத்தில் 2ம் இட அதிதேவதை மற்றும் 6ம் இட அதிதேவதை ஆகியவற்றை பூஜித்து ஸ்ரீ தேவி மஹாத்மியம் படித்து வரவும். இது போன்று 7 நாட்கள் தொடர்ந்து செய்துவிட்டு 7ம் நாள் ஸ்ரீ தேவி மஹாத்மியத்தின் ஒவ்வொரு பாடலுக்கும் ஒவ்வொரு ஆகுதி கொடுத்து ஹோமம் செய்ய வேண்டும். ஹோமம் முடிந்ததும் 3 கன்னிப்பெண்களுக்கு உணவு பரிமாறவும். பின்¸ இந்த யந்திரத்தை வெள்ளி¸ தங்கம் மற்றும் தாமிரம் ஆகிய மூன்றும் கலந்த ஒரு தாயத்தில் போட்டு பெண்கள் இடக்கையில் அல்லது ஆண்கள் வலக்கையில் கட்டிக்கொள்ளவும். கழுத்திலும் அணியலாம். தொடர்ந்து “க்லீம்” என்றும் “ஹ்ரீம்” என்றும் ஜபித்து வரவும்.
மிகப்பெரிய அளவில் இலட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் பணம் தேவைப்படுபவர்கள் இந்த வழிமுறையை பின்பற்றி தொழிலில் மேன்மை அடைய முடியும் என்கின்றது மஹா தந்த்ர விதானம் . அனுபவத்தில் சரியாக உள்ளது.