கடன் சுமை தீர ஸ்ரீ ரிண விமோசன லிங்கம் ! நிறைய நட்புக்களுக்கு இது உதவும்படியான பதிவு.
திருச்சேறை (உடையார் கோவில்) – கடன் நிவர்த்தித்தலம்
இறைவர் திருப்பெயர்: செந்நெறியப்பர், சாரபரமேஸ்வரர்.
இறைவியார் திருப்பெயர்: ஞானவல்லி.
தல மரம்: மாவிலங்கை.
தீர்த்தம் : மார்க்கண்டேய தீர்த்தம்.
வழிபட்டோர்: சம்பந்தர், அப்பர், மார்க்கண்டேயர், தௌமியமுனிவர் ஆகியோர்.
இக்கோயிலில் மார்க்கண்டேயர் வழிபட்ட அமுதகடேஸ்வர லிங்கம் உள்ளது.
அமைவிடம் மாநிலம் : தமிழ் நாடு கும்பகோணத்திலிருந்து 15 கி. மீ. தொலைவில் உள்ளது இத்தலம்; கும்பகோணத்திலிருந்து நகரப் பேருந்துகள் உள்ளன.
தௌமிய முனிவரால் வழிபாடு செய்யப்பட்டதுமான ஸ்ரீ ரிண விமோசன லிங்கம் உள்ளது.
ஸ்ரீ மார்க்கண்டேயர் வழிபட்டு வந்த பிறவிக்கடன் நீங்க அருள் புரிந்த ரிண விமோசன லிங்கேஸ்வரரை 11 திங்கட்கிழமை வழிபட்டு அபிஷேக ஆராதனை செய்தால் நம்முடைய அனைத்து கஷ்டங்களும் நீங்கி அருள் பெறலாம். நமது
வாழ்க்கையில் படுகின்ற கடன்கள், நமது முன்னோர்களால் செய்ய முடியாமல் விடுபட்ட நிவர்த்திக் கடன்களில் இருந்தும் விடுதலை பெறலாம். 1 திங்கட்கிழமை மாலை ( 4 முதல் 6.30 மணிக்குள் )சங்கல்பம் வழிபாடு செய்து மீன்டும் 11 திங்கட்கிழமை வழிபாடு செய்வதால் கடன்களில் இருந்தும் விடுதலை பெறலாம்.
கும்பகோணத்திலிருந்து தென்கிழக்கே நாச்சியார்கோவில் வழியாக குடவாசல் செல்லும் சாலையில் 10 கி.மி. தொலைவில் திருச்சேறை சிவஸ்தலம் இருக்கிறது. கும்பகோணத்திலிருந்து வலங்கைமான் வழியாகவும் திருச்சேறை தலத்தை அடையலாம்.
எங்கும் இல்லாத சிறப்பு அம்சம் இத்தலத்தில் மூன்று துர்க்கைகள் அமைந்துள்ளன. சிவ துர்க்கை, விஷ்னு துர்க்கை, வைஷ்ணவி துர்க்கை என மூன்று வடிவங்களாக ஒரே சந்நிதியில் இத்தலத்தில் காட்சியளிப்பது சிறப்பாகும்.
திருச்சேறையில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான சாரநாதப் பெருமாள் ஆலயமும் உள்ளது.
இவ்வாலயம் தினந்தோறும் காலை 7 மணி முதல் பகல் 12 மணி வரையிலும், மாலை 5 மணி முதல் இரவு 8-30 மணி வரையிலும் திறந்திருக்கும்.