கஷ்டங்கள் தீர,எதிரிகளை வெல்ல ஸ்ரீ பகளாமுகி மாலா மந்த்ரம்
ஸ்ரீ பகளாமுகி தேவியின் மாலா மந்திரத்தைத் தினமும் ஜெபித்து வர ஆயுள் கூடும்,அடிக்கடி விபத்துக்கள், நோய்கள் ஏற்படாது.எதிரிகளின் கெட்ட செயல்கள் நம்மிடம் பலிக்காது.பித்ரு தோஷம்,கிரக தோஷம் ,மாந்த்ரீக பாதிப்புகள் நீங்கும். கீழ்க்கண்ட ஏதேனும் ஒரு பிரயோகத்தைச் செய்ய நிறைவான பலன் கிடைக்கும்.
பிரயோகம் 1:-
மஞ்சள் கிழங்கை எடுத்து “ஓம் ஹ்ரீம் பகளாமுகி ஸ்வாஹா “ என்று ஜெபித்தபடியே அரைத்து அந்த விழுதை ஒரு மஞ்சள் நூலில் தடவி மந்திரத்தை 21 தடவை ஜெபித்து அந்தக் கயிற்றை ரக்ஷையாக அணிந்து கொள்ள மேற்கண்ட பலன்கள் கிட்டும்.
பிரயோகம் 2:-
மஞ்சள் கிழங்கை எடுத்து “ஓம் ஹ்ரீம் பகளாமுகி ஸ்வாஹா ” என்று ஜெபித்தபடியே அரைத்து அந்த விழுதை ஒரு வெற்றிலையில் வைத்துக் கொண்டு மந்திரத்தை 21 தடவை ஜெபித்து முடித்த பின் அந்த மஞ்சள் விழுதை ஒரு செம்பில் நீர் வைத்து அதில் கரைத்து வீட்டின் மேலும், வீட்டில் உள்ளோர் மீதும் தெளித்து விட மேற்கண்ட பலன்கள் கிட்டும்.
பிரயோகம் 3 :- இதை உடற்கட்டு மந்திரமாகவும் பயன்படுத்தலாம்.ஏதேனும் பூஜை செய்யும் முன் அல்லது காடு,பயங்கரமான இடங்களுக்குச் செல்லும் பொழுது இதை ஆபத்து ஏதும் ஏற்படாது காக்கும்.பயந்தவர்களுக்கு இதை 3 தடவை ஜெபித்துத் தண்ணீரில் 3 தடவை ஊதி அந்தத் தண்ணீரால் முகத்தில் தெளிக்கப் பயந்ததால் உண்டான பாதிப்புகள் நீங்கும்.
ஸ்ரீ பகளாமுகி மாலா மந்திரம்:-
ஓம் நமோ பகவதி | ஓம் நமோ வீரப்ரதாப விஜய பகவதி பகளாமுகி | மம சர்வ நிந்தகானாம் சர்வ துஷ்டானாம் வாசம் முகம் பதம் ஸ்தம்பய | ஜிஹ்வாம் முத்ரய முத்ரய | புத்திம் விநாசய விநாசய |அபாரபுத்திம் குரு குரு ||ஆத்ம விரோதினாம் சத்ரூனாம் சிரோ லலாடம் முகம் நேத்ர கர்ண நாசிகோரு பாத அன்னு அன்னு |தந்தோஷ்டஹ ஜிஹ்வாம் தாலு குஹ்ய குதா கட்டி ஜானு சர்வாங்கேஷு கேசாதி பாதானாம் பாதாதி கேச பர்யந்தம் ஸ்தம்பய ஸ்தம்பய | கேம் கீம் மாரய மாரய |பரமந்திர பரயந்திர பரதந்த்ராணி ச்சேதய ச்சேதய |ஆத்ம மந்தர தந்த்ராணி ரக்ஷ ரக்ஷ | க்ரஹம் நிவாரய நிவாரய |வ்யாதிம் விநாசய விநாசய |துக்கம் ஹர ஹர | தாரித்ர்யம் நிவாரய நிவாரய |சர்வ மந்த்ரஸ்வரூபிணி துஷ்ட க்ரஹ பூத க்ரஹ பாஷான் சர்வ சாண்டாள க்ரஹ யக்ஷ கின்னர கிம்புருஷ க்ரஹ பூத பிரேத பிசாசானாம் சாகினி டாகினி க்ரஹானாம் |பூர்வ திஷம் பந்தய பந்தய வார்த்தாளி மாம் ரக்ஷ ரக்ஷ | தக்ஷிண திஷம் பந்தய பந்தய ஸ்வப்ன வார்த்தாளி மாம் ரக்ஷ ரக்ஷ |பச்சிம திஷம் பந்தய பந்தய உக்ரகாளி மாம் ரக்ஷ ரக்ஷ |பாதாள திஷம் பந்தய பந்தய பகளா பரமேஸ்வரி மாம் ரக்ஷ ரக்ஷ |சகல ரோகான் விநாசய விநாசய | சத்ரு பலாயணம் பஞ்சயோஜன்மாதயே ராஜஜன ஸ்வபக்ஷம் குரு குரு |சத்ரூன் டஹ டஹ பச பச ஸ்தம்பய ஸ்தம்பய மோஹய மோஹய ஆகர்ஷய ஆகர்ஷய |மம சத்ரூன் உச்சாடய உச்சாடய ஹ்லீம் பட் ஸ்வாஹா ||