தொழில் அல்லது வியாபாரம் செய்பவர்கள் நிச்சயம் மகாலட்சுமியை வணங்க வேண்டும். மகாலட்சுமி படம் ஒன்று உங்களிடம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமி படத்தை வைத்து பூஜை செய்வதால் தொழில் மற்றும் வியாபாரம் செழித்து வளரும். விருத்தியடையும். வீட்டில் செல்வவளம் நிலைத்திருக்க, உழைக்கின்ற பணம் வீண் விரயம் ஆகாமல் இருக்க மகாலட்சுமி பூஜை செய்யலாம். இவை வெள்ளிக்கிழமை கட்டாயம் வழக்கமான பூஜைகளின் பொழுது செய்து வந்தால் நீங்கள் எதிர்பார்க்காத மாற்றம் நிச்சயம் உங்கள் வாழ்க்கையில் நிகழும். மகாலட்சுமி படம் இல்லாதவர்கள் அதற்கு பதிலாக கலசம் வைத்து வழிபடலாம். இந்த மகாலட்சுமி பூஜை எப்படி செய்வது என்பதை இப்பதிவின் மூலம் தெரிந்து கொள்ளுங்கள்.
வெள்ளிக்கிழமை வழக்கமாக நீங்கள் செய்யும் பூஜைக்கு முன்னர் சுப ஓரை பார்த்து மகாலட்சுமி படத்தை பிரதானமாக ஒரு தாம்பூலத்தில் வைத்து அதில் உதிரி பூக்கள் போட்டு படத்தை வைத்து அதற்கு செவ்வரளி மாலை சூட்டுங்கள். மகாலட்சுமி படம் இல்லாதவர்கள் பூஜைக்கு பயன்படுத்தும் கலசம் வைத்து, அதனுள் தண்ணீர் மற்றும் பச்சை கற்பூரம், 2 ஏலக்காய், 2 கிராம்பு, சிறிதளவு துளசி இலைகள் சேர்த்து அதன்மீது மாவிலை வைத்து தாமரை மலரை மகாலட்சுமியாக ஆவாகனம் செய்ய வேண்டும். கலசத்திற்கு செவ்வரளிப்பூ மாலை சூட்டுங்கள். அதன் முன்பு கோலத்தால் சுபம், லாபம் என்ற சுவஸ்திக் சின்னம் வரைந்துக் கொள்ளுங்கள். மகாலட்சுமி பூஜை செய்யும் பொழுது நிச்சயம் வீட்டில் நிலை வாசலுக்கு குங்குமம் இட வேண்டும், மாக்கோலம், மாவிலை தோரணம் கட்ட வேண்டும்.
நிவேதனமாக சக்கரை பொங்கலும், கற்கண்டும் வைக்கலாம். உங்களால் முடியும் என்றால் மகாலட்சுமிக்கு பிடித்த மற்ற சில உணவு பதார்த்தங்களையும் வைக்கலாம். ஒரு தாம்பூலத்தட்டில் அட்சதை தயார் செய்து அதில் கொஞ்சம் உதிரிப்பூக்கள் வைத்துக் கொள்ளுங்கள். அதே தட்டில் ஐந்து ரூபாய் நாணயங்கள் ஒற்றைப்படை எண்ணிக்கையில் உங்கள் இருப்பிற்கு ஏற்றவாறு 11, 21, 51, 101 என்கிற ஏதேனும் ஒரு எண்ணிக்கையில் வைத்துக் கொள்ளுங்கள்.
மற்றொரு தாம்பூலத்தில் மங்கலப் பொருட்களான வெற்றிலை, கொட்டை பாக்கு, பூ, பழம், தேங்காய், மஞ்சள், குங்குமம், மஞ்சள் கயிறு, பழங்கள் போன்றவற்றில் உங்களிடம் என்ன இருக்கிறதோ அதை வைத்துக் கொள்ளுங்கள். அரிசி அளக்கும் அரிசிப்படியில் தலை தட்டாமல் கல் உப்பை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது குத்துவிளக்கை ஐந்து திரிகள் கொண்டு, மஞ்சள் குங்குமம் இட்டு, பூ சாற்றி வையுங்கள். வெள்ளிக்கிழமையில் எப்போதும் ஐந்து முகம் கொண்ட குத்து விளக்கில் தீபம் ஏற்றுவது சகல சவுபாக்கியங்களையும் உங்களுக்குப் பெற்றுத் தரும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.
எந்த ஒரு பூஜை ஆரம்பிக்கும் பொழுதும் விநாயகரை முதன்மையாக வழிபட வேண்டும். உங்களிடம் விநாயகர் விக்ரஹம் சிறிய அளவில் இருந்தால் அதை மகாலட்சுமி கலசத்திற்கு முன்பு சிறிய தட்டில் வைத்துக் கொள்ளுங்கள். இல்லையென்றால் மஞ்சலில் விநாயகரை பிடித்து வையுங்கள். உதிரிப்பூக்கள் போட்டுக் கொள்ளுங்கள். முதலில் இப்போது கணபதியை வணங்கி விடவேண்டும். குங்குமம் கைகளில் எடுத்துக் கொண்டு விநாயகருக்கு குங்கும அர்ச்சனை செய்ய வேண்டும். ”ஓம் கம் கணபதயே நமஹ!” இந்த மந்திரத்தை உச்சரித்துக் கொண்டே மூன்று முறை குங்குமார்ச்சனை செய்து கொள்ளுங்கள். அதன்பின் தொடர்ந்து நீங்கள் தாம்பூலத்தில் எடுத்து வைத்திருக்கும் உதிரிப்பூக்கள் அட்சதை போன்றவற்றை சிறிதளவு கையில் எடுத்துக் கொண்டு மகாலட்சுமிக்கு உங்கள் நாணயங்களுக்கு ஏற்ப, ”ஓம் மகாலட்சுமியே போற்றி!” சொல்லி ஒவ்வொன்றாக அர்ச்சிக்க வேண்டும்.