** சிவாய நம…
யார் ஒருவர் அனுதினமும்
சூரியன் உதிப்பதற்கு முன்னால் எழுந்து மனத் தூய்மையோடு ருத்ர ஜெபம் செய்கிறாரோ’ அவர் இந்த உலகில் இருக்கும் எல்லா வகையான இன்பங்களையும் அடைவது நிச்சயம் என்கிறார்.. மகாபாரதத்தை எழுதிய மகரிஷி வேதவியாசர்.
அதுமட்டுமல்ல…”ஓம் நமசிவாய ” என்ற
சிவ நாமத்தை உள்ளன்போடு நாம் உச்சரித்தாலே பல பிறவிகளில் செய்த பாவம் விலகும். சிவன் கோயிலில் எரிந்து கொண்டிருந்த விளக்குத் திரியை தூண்டி விட்ட காரணத்தினால் அளவில்லாத புண்ணியம் பெற்ற சாதாரண எலி, மறுபிறவியில் மகாபலி சக்கரவர்த்தியாக பிறந்ததை புராணங்கள் தெரிவிக்கின்றன.
இந்த உலகத்தில் பிறவி எடுத்தவர்கள் நல் வழியைப் பெறுவதற்கு துணையாக சிவமந்திரம், சிவதரிசனம், சிவவழிபாடு ஆகிய இம்மூன்றும் ஒவ்வொருவருடைய வாழ்கையிலும் மிகவும் இன்றியமையாதவை. மேலும் எல்லா உயிர்களுக்கும் முதன்மையானவன் சிவபெருமான். இதனால் தான்..
எல்லாம் சிவமயம்,
எங்கும் சிவமயம்,
எதிலும் சிவமயம் என்பதே
ஆன்றோர் கொள்கையாக இருக்கிறது.
ஆகவே ஒவ்வொருவரு நாளும்
போற்றுவோம் சிவனடியை…!
ஒப்புனக் கில்லா ஒருவனே அடியேன்
உள்ளத்துள் ஒளிர்கின்ற ஒளியே
மெய்ப்பதம் அறியா வீறிலியேற்கு
விழுமிய தளித்ததோர் அன்பே
செப்புதற் கரிய செழுந்சுடர் மூர்த்தீ
செல்வமே சிவபெருமானே
எய்ப்பிடத் துன்னைச் சிக்கெனப்
பிடித்தேன் எங்கெழுந் தருளுவதினியே..!
பிடித்தப்பத்து.
ஓம் நமச்சிவாய.