மாதம்தோறும் வரும் ஒவ்வொரு பவுர்ணமிக்கும் ஒவ்வொரு சிறப்பு உள்ளது. அவை என்னவென்று விரிவாக அறிந்து கொள்ளலாம்.
சித்ரா பவுர்ணமி – சித்ரகுப்தன் அவதரித்த நாள்.
வைகாசி பவுர்ணமி – முருகன் அவதார தினம்.
ஆனி பவுர்ணமி – இறைவனுக்கு கனிகளை படைக்கும் நாள்.
ஆடி பவுர்ணமி – திருமால் வழிபாடு
ஆவணிப் பவுர்ணமி – ஓணம், ரக்ஷா பந்தன்
புரட்டாசி பவுர்ணமி – உமா மகேசுவர பூஜை
ஐப்பசி பவுர்ணமி – சிவனுக்கு அன்னாபிஷேகம்
கார்த்திகை பவுர்ணமி – திருமால், பிரம்மா ஆகியோர் சிவபெருமானின் அடிமுடி காண முயன்ற நிகழ்வு
மார்கழி பவுர்ணமி – சிவபெருமான் நடராஜராக ஆனந்ததாண்டவம் ஆடிய நாள்
தை பவுர்ணமி – சிவபெருமானுக்கு பெருவிழா நடத்தும் நாள்
மாசி பவுர்ணமி – பிரம்மனின் படைப்பு தொழில் தொடங்கிய நாள்
பங்குனி பவுர்ணமி – சிவபெருமான் உமையம்மை திருமண நாள்