மனிதர்கள் யாவரும் ஏதாவது ஒரு திதியில் நட்சத்திரத்தில் பிறந்திருப் பார்கள். இதை அவரவர் ஜாதகத்தில் அறியலாம். பலருக்கும் தன் பாவ வினையால் எவ்வளவு முயற்சித்தும் தெய்வ அருளை பெறமுடியாமல் இருப்பார்கள். அவர்கள் அவர்கள் தன் திதியிலோ அல்லது நட்சத்திரத்திலோ அல்லது நட்சத்திரத்திலோ பிறந்த சித்தர்களைக் கண்டு வணங்கினால் பிரச்சனை தீர வழிபிறக்கும். ஒரு முறையாவது உங்கள் சித்தர் ஜீவ சமாதி நேரில் சென்று ஜென்ம நட்சத்திரத்திலோ, திதியிலோ சென்று தரிசித்துவிட்டு பின்பு வீட்டிலேயே மறுமுறையில் அந்த குறிப்பிட்ட நாளில் மாதாமாதம் உபவாசம் இருந்து வணங்கிவந்தால் பல மாறுதலான வாழ்வு தங்களுக்கு அமையும்.
வெகு தொலைவில் சில ஜீவ சமாதிகள் அமைந்துள்ளதால் அங்கு சென்றுவர இயலாதவர்கள் வீட்டிலேயே ஒரு வெள்ளை விரிப்பின்மீது அமர்ந்து உங்கள் சித்தரின் பெயரை உச்சரித்து முடிந்தால் அவரின் மந்திரங்களைக்கூறி தியானம் செய்யுங்கள். நல்லதே நடக்கும்.
திதியில் பிறந்தவர்களே அனைவரும் எனவே திதி இல்லாமல் விதி அமையாது. உங்கள் நட்சத்திர நாளை பார்த்து பூஜிக்க முடியாவிட்டாலும் உங்கள் திதி நாளில் பூஜிக்கலாம். அதுவும் முடியாவிட்டால் அமாவாசை பௌர்ணமி திதிகளில் வழிபாடு செய்யலாம். சில சித்தர்களின் ஜீவ சமாதி எங்குள்ளது என்று தெரியாமலேயே இருக்கிறது. சிலர் அங்குள்ளது இங்குள்ளது எனவும் தன் ஊரை வளர வைக்க எத்தனித்து இங்குதான் சமாதி உள்ளது. ஓலைச்சுவடி ஆதாரம் உள்ளது என ஒரு கதையையும் உருவாக்கிய சம்பவம் நிறைய உள்ளது. எது எப்படியோ நம்பிக்கையே தெய்வம். அந்த நம்பிக்கையோடு இருக்கும் இடத்தை நாடிச்சென்று வழிபாடு செய்யுங்கள்.
சித்தர்கள் எந்த திதியில் பிறந்தார்கள் என்பதை வரலாறு சரியாக அனைவருக்கும் குறிப்பிடவில்லை. ஆனால் நட்சத்திரங்களையும் பிறந்த தமிழ் மாதங்களையும் குறிப்பிட்டுள்ளார்கள். கீழே எந்தெந்த நட்சத்திரத்தில் சித்தர்கள் பிறந்தார்கள் அவர்கள் ஜீவ சமாதி எங்குள்ளது. அவர்களுக்கான மந்திரம் ஆகியவை கொடுக்கப்பட்டுள்ளது பயன்படுத்தி வளம் காணுங்கள்.
அசுவினி நட்சத்திர சித்தர் பெயர் காளங்கிநாதர் ஆவார். இவர் சமாதி மற்றும் சக்தி அலைகள் கஞ்சமலை மற்றும் திருக்கடையூர் ஆகிய தலங்களில் உள்ளது. அவரவருக்குபெயரே மந்திரம். எனவே சித்தர்களின் பெயரை மரியாதையாக உச்சரித்தலே போதும். ஓம் குருவே சரணம் என மூன்றுமுறை கூறி ஓம் ஸ்ரீ காளங்கி நாதர் சித்த குருசுவாமியே சரணம் சரணம் என முடிந்தளவு மனம் விரும்பும் வரை கூறலாம். மற்ற நட்சத்திரக்காரருக்கும் இதே முறையில் தான் மந்திரம் கூற வேண்டும். காளங்கிநாதர் என்ற பெயரை நீக்கி உங்கள் சித்தர் பெயரை சேர்த்துக்கொள்ளவும்
அடுத்து
பரணி நட்சத்திரம் சித்தர் போகர் ஆவார். இவர் பழனி முருகன் சன்னதியில் சமாதி உள்ளது.
அடுத்து
கிருத்திகை நட்சத்திரம் ரோமரிஷி சித்தர்ஆவார். இவருக்கு சமாதியும் இல்லை. இவர் உடல் அழியவும் இல்லை. நேரே கைலாயத்திற்கு சென்றுவிட்டார் என வரலாறு கூறுகிறது. இவரை திங்கள்கிழமை வெள்ளை ஆடை அணிந்து வடக்கு நோக்கி திருக்கயிலை இருப்பதாக பாவித்து வணங்கவும்.
அடுத்து
ரோகிணி நட்சத்திரம் சித்தர் மச்சமுனி ஆவார். இவர் ஜீவ சமாதி திருப்பரங்குன்றத்தில் உள்ளது.
அடுத்து
மிருகசீரிடம் நட்சத்திரம் சித்தர் பாம்பாட்டி சித்தர் ஜீவ சமாதி சங்கரன் கோயில் என்ற ஊரில் உள்ளது. இன்னொருவர் சட்டமுனி சித்தராவார். ஊர் திருவரங்கம் ஆகும். சில நட்சத்திரக்காரர்களுக்கு மட்டும் இரண்டு சித்தர் வருவர்.
அடுத்து
திருவாதிரை நட்சத்திரம் சித்தர் இடைக்காடார்ஜீவ சமாதி திருவண்ணாமலை.
அடுத்து
புனர்பூச நட்சத்திரம் சித்தர் தன்வந்தரி ஆவார். இவர் வைதீஸ்வரன் கோவிலில் ஜீவ சமாதி ஆனவர்.
அடுத்து
பூசம் நட்சத்திரம் கமல முனி சித்தர் ஆவார். இவர் திருவாரூர் என்ற ஊரில் ஜீவ சமாதி உள்ளது.
அடுத்து
ஆயில்யம் நட்சத்திரம் இதற்கான சித்தர் அகத்தியர். இவர் ஒளிவட்டம் குற்றால பொதிகைமலையில் உள்ளது. சமாதி கேரள தலைநகரம் திருவனந்தபுரம் இங்கு உள்ளது.
அடுத்து
மகம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் அவதரித்தவர் சிவ வாக்கிய சித்தர் ஆவார். இவர் ஜீவ சமாதி கும்பகோணத்தில் உள்ளது. பெரும்பாலும் சித்தர்கள் ஜீவ சமாதி சிவாலயமாகவே இருக்கும்.
அடுத்து
பூரம் நட்சத்திரம் இவர் சக்தியின் அருளைப் பெற்ற நட்சத்திரமாகும். இந்த நட்சத்திரத்தில் அவதரித்த தெய்வ பெண்மணி ஸ்ரீ ஆண்டாள் ஆவார். இவர் பூமாதேவி அம்சமாக உள்ளார். இவரை வணங்க ஏற்ற இடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மட்டுமே.ஏனெனில் இவர் தோன்றிய இடமே அங்குதான். அடுத்து ராமதேவ சித்தரும் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர்தான். இவர் மாற்று பெயர் யாகோப்பு என்றும் உள்ளது. இவர் ஜீவசமாதி அரபு நாடான மெக்காவில் உள்ளது. இவர் ஒளி வந்துபோகும் இடம் அழகர் மலையாகும். இவரை வழிபட நம் நாட்டினர் அழகர் மலைக்குத்தான் செல்கிறார்கள்.அடுத்து
உத்திரம் நட்சத்திரம் இதில் அவதரித்த சித்தர் காகபுஜண்டர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் திருச்சி உறையூரில் உள்ளது.
அடுத்து
அஸ்தம் நட்சத்திரம் சித்தர் கருவூரார் ஆவார். இவர் சமாதி கரூரில் உள்ளது. அடுத்து இவர் ஒளிவட்டம் வந்து செல்லும் இடம் தஞ்சாவூர் பெரிய கோயில் ஆகும்.
அடுத்து
சித்திரை நட்சத்திரம் இதற்கான சித்தர் புண்ணாக்கீசர் ஆவார். நண்ணா சேர் என்ற இடத்தில் இவர் ஜீவ சமாதி உள்ளது.
அடுத்து
சுவாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் புலிப்பாணி ஆவார். சமாதி பழனி அருகில் வைகாவூர் என்ற இடத்தில் உள்ளது.
அடுத்து
விசாகம் நட்சத்திரம் இதற்கான சித்தர் நந்தீசர் மற்றும் குதம்பை சித்தர் ஆவார். நந்தீசர் காசி நகரத்திலும் (பனாரஸ்), குதம்பை சித்தர் மாயவரத்திலும் ஜீவசமாதி உள்ளது.
அடுத்து
அனுஷம் நட்சத்திரம் சித்தர் வால்மீகி அல்லது வான்மீகர் என்று அழைக்கப்படுபவராவார். இவர் எட்டுக்குடியில் ஜீவசமாதி உள்ளது.
அடுத்து
கேட்டை நட்சத்திரம் இதற்கான சித்தர் பகவான் வியாசர் ஆவார். இவர் உடல் அழிவற்றது. எனவே காற்றோடு காற்றாக கலந்து இருப்பார். இவரை நினைத்தாலே போதும். அவ்விடம் வருவார்.
அடுத்து
மூலம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பதஞ்சலி ஆவார். இவர் சமாதி ராமேஷ்வரத்தில் உள்ளது.
அடுத்து
பூராடம் நட்சத்திரம் இதற்கான சித்தர் பூரம்நட்சத்திரத்திற்கு சொல்லப்பட்ட ராமதேவர் எனும் யாகோப்பு சித்தரே ஆவார். அழகர்மலை மற்றும் மெக்காவில் ஜீவ ஒளி உள்ளது.
அடுத்து
உத்திராடம் நட்சத்திரம் இதற்கான சித்தபிரான் கொங்கணர். இவர் ஜீவசமாதி திருப்பதி ஆகும்.
அடுத்து
திருவோணம் நட்சத்திரம் இதற்கான சித்தர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள் ஆவார். இவர் சமாதி பாண்டிச்சேரி அடுத்து உள்ள பள்ளித்தென்னல் என்ற இடத்தில் உள்ளது.
அடுத்து
அவிட்டம் நட்சத்திரம் இதற்கான சித்தர் திருமூலர் ஆவார். இவர் சிதம்பரத்தில் ஜீவசமாதி உள்ளது.
அடுத்து
சதயம் நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் கௌபாலர் ஆவார். இவரின் சமாதி இங்குதான் என வரலாறு தெளிவாக குறிக்கவில்லை. எனினும் மன ஒழுக்கத்தோடு இவரை நினைத்தாலே தேடிவந்து அருள்புரிவார் எனக் குறிப்பு உள்ளது.
அடுத்து
பூராட்டாதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சோதிமுனி ஆவார். இவர் ஜோதி வடிவிலே ஜீவனாக உள்ளவர். அதனால் இவருக்கு தீபம் ஏற்றி வழிபட்டால் அங்கு அருள்பாலிப்பார். தனித்து சமாதி என்று குறிப்பிடும்படியாக தெரிவிக்கவில்லை.
அடுத்து
உத்திரட்டாதி நட்சத்திரம் இந்த நட்சத்திரத்தில் பிறந்தவர் டமரகர் சித்தர் ஆவார். இவரும் நேரிடையாக காற்றில் ஐக்கியமாகி கலந்துவிட்டதென வரலாறு கூறுகிறது. இவரை சிவாலயத்தில் ஒலிக்கும் இசை வாத்தியங்களில் ஏழாம் ஓசையில் ஒலியாக வந்து இறைவனுக்கு இசை முழக்கத்தால் சேவை செய்வார் எனக் குறிப்பிடுகிறார்கள். இவரை வீட்டிலேயே சிறுமணி ஓசையில் வரவழைத்து அவர் அங்கு வந்ததாக பாவித்து வணங்கலாம்.
அடுத்து
ரேவதி நட்சத்திரம் இதற்கான சித்தர் சுந்தரானந்தர் ஆவார். இவர் ஜீவசமாதி கோயில் மதுரையில் உள்ளது, அறிக.
மனத்தூய்மையும், உடல் தூய்மையும், கர்ம தூய்மையும் (பாவமற்ற கர்மாவைத் தொடர்தல்) தனிஅறையும் கொண்டு, ஒற்றை தீபம் மற்றும் ஏற்றி மன ஒருநிலைப்பாட்டோடு உங்கள் சித்தரை வணங்கி வாருங்கள். நிச்சயம் அவர்கள் அருளை தர தவறமாட்டார்கள். உங்களிடம் உள்ள பாவ கர்மாவிற்கு தயங்கி தெய்வம் துணைக்கு எளிதில் வரமாட்டார்கள். ஆனால் சித்தர்கள் அவ்வாறில்லை. தன்னை அழைத்தவர்களுக்கு எதாவது ஒரு வழியில் வழிகாட்ட தயங்கமாட்டார்கள். எனவே ஒரு தினத்தில் சில நிமிடங்களை யாவது சித்தர் வழிபாட்டிற்கு செலவிடுங்கள்.
சித்தர் பூஜை செய்பவர்கள் நீத்தாருக்கு திதி பார்த்து தெவசம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை. குறைந்தது சித்த தியானத்திற்கு அரைமணி நேரமாவது ஒரு நிலையில் அமர வேண்டும். இந்த வழிமுறையை கடைபிடித்து உங்கள் கஷ்டத்தையும், வறுமையையும் போக்கிக் கொள்ளுங்கள்
27 நட்சத்திரம்
27 நட்சத்திரங்களும் 4 பாதங்களைக் கொண்டுள்ளது. ஆக மொத்தம் 108 நற்பண்புகள் உள்ளன. அவை 12 வகைகளாக பிறிக்கப்படுகிறது. அதுவே 12 இராசி மண்டலமாகும். அவை :
* மேஷம்
* ரிஷபம்
* மிதுனம்
* கடகம்
* சிம்மம்
* கன்னி
* துலாம்
* விருச்சிகம்
* தனுசு
* மகரம்
* கும்பம்
* மீனம்
ஒவ்வொரு இராசி மண்டலமும் தனித்துவம் வாய்ந்தவை. அதன் சிறப்பம்சங்களை பட்டியலாக கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மேஷம்
————–
1. வைராக்கியம் (Assertiveness)
2. தேசநலன் (Citizenship)
3. நிறைவேற்றுதல் (Chivalry)
4. துணிச்சல் (Courage)
5. கீழ்படிதல் (Obedience)
6. வெளிப்படையாக (Openness)
7. ஒழுங்குமுறை (Order)
8. ஏற்றுக்கொள்ளுதல் (Acceptance)
9. ஆன்மிகம் (Spirituality)
#மேஷராசி மண்டலமானது ஜீரண மண்டலத்தின் ஆதாரமாகும்
ரிஷபம்
————-
1. கருணை (Mercy)
2. இரக்கம் (Compassion)
3. காரணம் அறிதல் (Consideration)
4. அக்கறையுடன் (Mindfulness)
5. பெருந்தன்மை (Endurance)
6. பண்புடைமை (Piety)
7. அஹிம்சை (Non violence)
8. துணையாக (Subsidiarity)
9. சகிப்புத்தன்மை (Tolerance)
#ரிஷபராசி மண்டலமானது சிறுநீரக மண்டலத்தின் ஆதாரமாகும்
மிதுனம்
—————
1. ஆர்வம் (Curiosity)
2. வளைந்து கொடுத்தல் (Flexibility)
3. நகைச்சுவை (Humor)
4. படைப்பிக்கும் கலை (Inventiveness)
5. வழிமுறை (Logic)
6. எழுத்து கற்க பிரியம் (Philomathy)
7. காரணம் (Reason)
8. தந்திரமாக (Tactfulness)
9. புரிந்து கொள்ளுதல் (Understanding)
#மிதுனராசி மண்டலமானது நரம்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
கடகம்
————
1. பிறர் நலம் பேணுதல் ( Altruism )
2. நன்மை செய்ய விரும்புதல் (Benevolence)
3. அறம் (Charity)
4. உதவுகின்ற (Helpfulness)
5. தயாராக இருப்பது (Readiness)
6. ஞாபகம் வைத்தல் (Remembrance)
7. தொண்டு செய்தல் (Service)
8. ஞாபகசக்தி (Tenacity)
9. மன்னித்தல் (Forgiveness)
#கடகராசி மண்டலமானது ஐம்புலன் மண்டலத்தின் ஆதாரமாகும்.
சிம்மம்
————-
1. வாக்குறுதி (Commitment)
2. ஒத்துழைப்பு (Cooperativeness)
3. சுதந்திரம் (Freedom)
4. ஒருங்கிணைத்தல் (Integrity)
5. பொறுப்பு (Responsibility)
6. ஒற்றுமை (Unity)
7. தயாள குணம் (Generosity)
8. இனிமை (Kindness)
9. பகிர்ந்து கொள்ளுதல் (Sharing)
#சிம்மராசி மண்டலமானது தசை மண்டலத்தின் ஆதாரமாகும்.
கன்னி
————-
1. சுத்தமாயிருத்தல் (Cleanliness)
2. அருள் (Charisma)
3. தனித்திருத்தல் (Detachment)
4. சுதந்திரமான நிலை (Independent)
5. தனிநபர் உரிமை (Individualism)
6. தூய்மை (Purity)
7. உண்மையாக (Sincerity)
8. ஸ்திரத்தன்மை (Stability)
9. நல்ஒழுக்கம் (Virtue ethics)
#கன்னிராசி மண்டலமானது தோல் மண்டலத்தின் ஆதாரமாகும்.
துலாம்
————-
1. சமநிலை காத்தல் (Balance)
2. பாரபட்சமின்மை (Candor)
3. மனஉணர்வு (Conscientiousness)
4. உள்ளத்தின் சமநிலை (Equanimity)
5. நியாயம் (Fairness)
6. நடுநிலையாக (Impartiality)
7. நீதி (Justice)
8. நன்னெறி (Morality)
9. நேர்மை (Honesty)
#துலாராசி மண்டலமானது சுவாச மண்டலத்தின் ஆதாரமாகும்.
விருச்சிகம்
——————–
1. கவனமாக இருத்தல்(Attention)
2. விழிப்புணர்வுடன் இருத்தல் (Awareness)
3. எச்சரிக்கையாக இருத்தல் (Cautiousness)
4. சீரிய யோசனை (Consideration)
5. பகுத்தரிதல் (Discernment)
6. உள் உணர்வு (Intuition)
7. சிந்தனைமிகுந்த (Thoughtfulness)
8. கண்காணிப்பு (Vigilence)
9. அறிவுநுட்பம் (Wisdom)
#விருச்சகராசி மண்டலமானது நிணநீர் மண்டலத்தின் ஆதாரமாகும்.
தனுசு
———–
1. லட்சியம் (Ambition)
2. திடமான நோக்கம் (Determination)
3. உழைப்பை நேசிப்பது (Diligence)
4. நம்பிக்கையுடன் (Faithfulness)
5. விடாமுயற்சி (Persistence)
6. சாத்தியமாகின்ற (Potential)
7. நம்பிக்கைக்குரிய (Trustworthiness)
8. உறுதி (Confidence)
9. ஊக்கத்துடன் முயற்சி (Perseverance)
#தனுசு ராசி மண்டலமானது எலும்பு மண்டலத்தின் ஆதாரமாகும்.
மகரம்
————
1. கண்ணியம் (Diginity)
2. சாந்த குணம் (Gentleness)
3. அடக்கம் (Moderation)
4. அமைதி (Peacefulness)
5. சாதுவான (Meekness)
6. மீளும் தன்மை (Resilience)
7. மௌனம் (Silence)
8. பொறுமை (Patience)
9. செழுமை (Wealth)
#மகரராசி மண்டலமானது நாளமுள்ள சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
கும்பம்
————
1. சுய அதிகாரம் (Autonomy)
2. திருப்தி (Contentment)
3. மரியாதை (Honor)
4. மதிப்புமிக்க (Respectfulness)
5. கட்டுப்படுத்துதல் (Restraint)
6. பொது கட்டுப்பாடு (Solidarity)
7. புலனடக்கம் (Chasity)
8. தற்சார்பு (Self Reliance)
9. சுயமரியாதை (Self-Respect)
#கும்பராசி மண்டலமானது நாளமிள்ளா சுரப்பி மண்டலத்தின் ஆதாரமாகும்.
மீனம்
———-
1. உருவாக்கும் கலை (Creativity)
2. சார்ந்திருத்தல் (Dependability)
3. முன்னறிவு (Foresight)
4. நற்குணம் (Goodness)
5. சந்தோஷம் (Happiness)
6. ஞானம் (Knowledge)
7. நேர்மறை சிந்தனை (Optimism)
8. முன்யோசனை (Prudence)
9. விருந்தோம்பல் (Hospitality)
#மீனராசி மண்டலமானது இரத்த ஒட்ட மண்டலத்தின் ஆதாரமாகும்.
ராசி மந்திரம் யந்திரம் மூலிகை!!!
———————————————————
ராசிக்கு உரிய மந்திரங்கள் யந்திரங்கள் மூலிகைகள்….
ஒவ்வொரு மனிதனும் நல்லநேரம் வரும்பொழுது நன்மையும், கெட்டநேரம் செயல்படும் பொழுது கெட்டவையே நடக்கும். எனினும் இராசி மூலிகையும், சக்கரமும் . மந்திரமும் பயன்படுத்தினால் கெட்ட நேரத்தையும் நன்மையாக வசியப்படுத்த முடியும். அனுபவத்தில் இம்முறைகள் சிறப்பாக செயல்படுகின்றன. ஒவ்வொன்றிற்கும் மந்திரம் உண்டு யந்திரத்தை 9 க்கு 9 இன்ச் அளவு செம்பு தகட்டில் எழுதி அதற்கான மந்திரத்தை 1008 முறை உரு ஏற்றி பிறகு நினைத்த காரியம் நடக்க வேண்டி பிறகு பயன்படுத்துங்கள். மிக அற்புத பலனை கொடுக்கும் மிக எளிய முறை இதுவாகும். யந்திரத்துடன் மூலிகையும் சிறிது பயன்படுத்தவும். அதை பிரேம் உள்ளே வைத்து யந்திரத்தை மேலே வைத்து சட்டம் அடித்து பொட்டு வைத்து வணங்கச் சொல்லவும். பிரேம் செய்யும்பொழுது பின்பக்கம் பழைய ஒரு ரூபாய் அளவிற்கு ஒரு ஓட்டை போட்டு அட்டையோ தகடோ பொருத்தச் சொல்லவும்.
மேஷ ராசி:
மேஷ ராசியில் பிறந்தவர்கள் கீழ்க்கண்ட சுலோகத்தை 27 முறை கூறி முருகனுக்கு சகஸ்ர நாம அர்ச்சனை செய்தால் துன்பங்கள் நீங்கும் !
ஓம் ஸம் சரஹனபவாய ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ
யந்திரம் : பால ஷண்முக ஷடாஷர யந்திரம்
மூலிகை : வைகுண்ட மூலிகை.
ரிஷப ராசி:
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் மகாலட்சுமி பூஜை செய்தும், வெள்ளிக்கிழமை விரதம் இருந்து கீழ்க் கண்ட சுலோகத்தைத் தினசரி 11முறை கூறி வந்தால் சகல செல்வங்களும் கிடைக்கும்.
ஸ்ரீ லக்ஷிமீம் கமல தாரிண்யை
ஸிம்ஹ வாஹின்யை ஸ்வாஹ
யந்திரம் : மஹாலட்சுமி யந்திரம்.
மூலிகை : அம்மான் மூலிகை.
மிதுன ராசி:
மிதுன ராசியில் பிறந்தவர்கள் விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 54முறை தினசரி கூறி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
ஓம் க்லீம் ஸ்ரீ கிருஷ்ணாய நமஹ
யந்திரம் : ஸ்ரீ தன ஆகர்ஷனயந்திரம்
மூலிகை : அற்ற இலை ஒட்டி.
கடக ராசி:
கடக ராசியில் பிறந்தவர்கள் பவுர்ணமி தோறும் அம்பாளுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து விரதம் இருந்து, கீழ்க்கண்ட மந்திரத்தை 21முறை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம் ஐம் க்லீம் ஸோமாய நமஹ
யந்திரம் : ஸ்ரீ துர்கா யந்திரம்
மூலிகை : நத்தைசூரி மூலிகை.
சிம்ம ராசி:
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு ஞாயிற்றுக்கிழமை சூரியனுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சூர்யாய நமஹ
யந்திரம் : ஸ்ரீ சிதம்பர சக்கரம்
மூலிகை : ஸ்ரீ விஷ்ணு மூலி.
கன்னி ராசி:
கன்னி ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு புதன்கிழமை விஷ்ணுவுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம்-ஐம்-ஸ்ரீம்-ஸ்ரீம்-புதாய நமஹ
யந்திரம் : ஸ்ரீ சுதர்ஸன யந்திரம்
மூலிகை : துளசி.
துலா ராசி:
துலா ராசியில் பிறந்தவர்கள் மாதம் ஒரு முறை பவுர்ணமி நாள் அன்று விரதம் இருந்து சத்யநாராயண பூஜை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம்-ஹ்ரீம்-ஸ்ரீம்-சுக்ராய நமஹ
யந்திரம் : ஸ்ரீ சூலினியந்திரம்
மூலிகை : செந்நாயுருவி.
விருச்சிக ராசி:
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் செவ்வாய்க்கிழமை விரதம் இருந்து துர்க்கையை பூஜித்து வணங்கி கீழ்க்கண்ட சுலோகத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன் ஏற்படும்.
ஓம் ஹ்ரீம் தும் துர்காயை நமஹ
யந்திரம் : பாலசண்முக ஷாடத்ச்சர யந்திரம்
மூலிகை : மஞ்சை கிளுகிளிப்பை.
தனுசு ராசி:
தனுசு ராசியில் பிறந்தவர்கள் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தி கடவுளுக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல நன்மைகள் உண்டாகும்.
ஓம் ஐம் க்லீம் பிரஹஸ்பதயே நமஹ
யந்திரம் : தன சக்ர யந்திரம்
மூலிகை : சிவனார் மூலி.
மகர ராசி:
மகர ராசியில் பிறந்தவர்கள் சனிக்கிழமை விரதம் இருந்து சனீஸ்வர பகவானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் சகல காரியங்களும் சித்தி அடையும்.
ஓம் ஐம் ஹ்ரீம் ஸ்ரீம் சனீஸ்வராய நமஹ
யந்திரம் : ஸ்ரீ பைரவ யந்திரம்
மூலிகை : யானை வணங்கி.
கும்ப ராசி:
கும்ப ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வாரமும் சனிக்கிழமை ஆஞ்சநேயருக்கு அர்ச்சனை செய்து கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் நல்ல பலன்கள் உண்டாகும்.
ஓம் ஸ்ரீம் ஸ்ரீ உபேந்திராய அச்சுதாய நமோ நமஹ
யந்திரம் : ஸ்ரீ கணபதி யந்திரம்
மூலிகை : தகரை மூலிகை.
மீன ராசி:
மீன ராசியில் பிறந்தவர்கள் ஒவ்வொரு வியாழக்கிழமை சிவபெருமானுக்கு சகஸ்ரநாம அர்ச்சனை செய்து, கீழ்க்கண்ட மந்திரத்தை பாராயணம் செய்து வந்தால் துன்பங்கள் நீங்கும்.
ஓம் க்லீம் ஸ்ரீ உத்ராய உத்தாரணே நமஹ
யந்திரம் : ஸ்ரீ குபேர தன ஆகர்ஷண யந்திரம
மூலிகை : குப்பைமேனி.
1. செவ்வாய்க்கிரகம் ஒரு ராசியில் சுமார் 45 நாட்கள் தங்குகிறார். ஒருமுறை ராசி சக்கரத்தைச் சுற்றிவர 18 மாதங்களாகின்றன.
2. அங்காரகன் நவக்கிரகங்களில் மூன்றாவதாக குறிப்பிடப்படுபவர்.
3. இவருக்கு சக்திதரன், குமாரன், மகாகாயன், மங்கலன், தனப்பிரதன், லோகிதாங்கன், ரத்தாயதேஷணன், ரத்தர்ணன், ஹோமகுண்டலி, ரோகநாசனை, ரக்தவஸ்ரன் என்ற பிற பெயர்களும் உண்டு.
4. பரத்வாஜ முனிவரின் மகனாகப் பிறந்து பூமாதேவியால் வளர்க்கப்பட்டதால் அங்ககாரகன் என்றும், அதுவே சுருக்கமாக அங்காரகன் என்றும் கூறப்படுகிறது.
5. செவ்வாய் கிரகத்துக்கு மாலினி, சுசீலின் என்று இரண்டு மனைவிகள் உண்டு.
6. துர்க்கையை வழிபட்டு வந்தாலும் செவ்வாயின் அருள் பெறலாம்.
7. வைத்தீஸ்வரன்கோயில் சென்று செவ்வாயை வழிபட செவ்வாயின் தீய தசாபுத்தி நடப்பவர்கள் அது நீங்கி சுகம் பெறலாம். மயிலாடுதுறையில் இருந்து 15 கி.மீ. தொலைவில் வைத்தீஸ்வரன் கோவில் உள்ளது.
8. செவ்வாய்க்கிழமை தோறும் அங்காரகன் இரவில் ஆடு வாகனத்தில் வலம் வந்து ஆண்டவனை வணங்குவதாக கூறப்படுகிறது.
9. செவ்வாய் தோசம் வந்தால் சகோதர, சகோதரிகளின் வெறுப்புக்கு ஆளாகுதல், வேலைக்காரர்களால் அவமானப் படுதல், பூர்வீக பூமியை விற்று, குடி, சூது, பெண் என்று அலைதல் போன்றவை களுக்கும் காரணமாகி விடும். குடியிருக்க வசதியான வீடு கூட, செவ்வாய் தோசம் வந்தால் அமையாது.
10. செவ்வாய் தோஷம் பரம்பரையாக வரும் தன்மை கொண்டது.
11. ஒரு மனிதனின் ஆற்றல் செவ்வாய் ஜாதகத்தில் அமைந்த விதத்தில்தான் அமையும்.
12. வெளிநாட்டு ஆதிக்கம் இந்தியாவில் பல நூற்றாண்டுகள் இருந்ததற்கு நாட்டின் செவ்வாய் தோஷமே காரணம் ஆகும்.
13. செவ்வாய் தோஷமுள்ள பெண் ஆண்மைக்குணம் அதிகம் உடையவள். செவ்வாய் தோஷம் உள்ள ஆண், பெண் தன்மை உடையவராவார்.
14. செவ்வாய் தோஷம் 7-ம் இடத்திலிருந்தும், 8-ம் இடத்திலிருந்தும் செயல்பட்டால் திருமணம் ஆனவுடன் செயல்பட ஆரம்பிக்கும். 12-ம் இடம், 2-ம் இடம் என்றால் பிறந்தது முதலே இருக்கும். 4-ம் இடம் செவ்வாய் வீடு வாய்க்கும்போதோ, கல்வி கற்கும்போதோ, பயணம் செய்யும் போதோ, உத்யோகம் பெற்ற பின்பு மட்டும் செயல்படும்.
15. செவ்வாய் தோஷத்தை நீக்குவதற்கு செவ்வாய்க் கிழமைகளில் வள்ளலாரின் ‘தெய்வமணிமாலை’, குமர குருபர சுவாமிகள் எழுதிய திருச்செந்தூர் கந்தர் கலிவெண்பா, அருணகிரி நாதரின் திருப்புகழ், குறிப்பாக கந்தரலங்காரம், பாம்பன் சுவாமிகள் அருளிய சண்முக கவசம், கவிதேவராயன் எழுதிய கந்தர்சஷ்டி கவசம் போன்றவைகளை பாராயணம் செய்யலாம்.
16. விஷ்ணு சகஸ்ரநாமம் ஞாயிறு நண்பகல் பாராயணம் செய்து சர்க்கரை பொங்கல் விநியோகம் செய்தால் செவ்வாய் தோஷம் விலகும்.
17. நவக்கிரகங்களின் சன்னதியில் செவ்வாய் ‘காயத்ரி’ மந்திரத்தை 36 முறை உச்சரித்து 9 முறை வலம் வருதலும் செவ்வாய் தோஷத்தின் கடுமையைக் குறைக்கும்.
18. ஆலயங்களில் நெய்தீபம் ஏற்ற உதவி செய்தலும் ஆலயத் திருப்பணிக்கான கட்டிட புனருத்தாரணப் பணிகளுக்கு பொருள்உதவி செய்வதும் கூட செவ்வாய் தோஷம் நிவர்த்திக்கான பரிகாரங்களாகும்.
19. செவ்வாய் கிரகத்தை பலரும் கடவுளாக வணங்குகின்றனர். அவ்வாறு வணங்கினால் தைரியமும், அரச சபையில் பேசும் ஆற்றலும், தோள் வலிமையும், போரில் வெற்றியும் கிடைக்கும்.
20. செவ்வாய் என்று நாம் குறிப்பிடும் அங்காரக பகவான் பூசித்த தலங்கள் பல. அவற்றுள் முக்கியமானவை மூன்று. அவை: 1. திருச்சிறுகுடி, 2. வைத்தீஸ்வரன் கோவில், 3. பழனி.
21. ஜாதகத்தில் செவ்வாய் நல்ல இடத்தில் அமைந்திருந்தால், அங்காரகன் கடன் தொல்லையின்றி, பூமியையும், செல்வத்தையும், வாகன யோகம் மற்றும் புகழையும் அள்ளிக்கொடுப்பார்.
22. 9, 18, 27-ந் தேதிகளில் பிறந்தவர்களுக்கு அங்காரகன் உரிய கிரகமாகும்.
23. ஜாதகத்தில் ஒருவரை சிறந்த தலைவனாக்கக்கூடிய ஆற்றல் உடையவர் அங்காரக பகவான். இவர் அருள் இருப்பவரை யாரும் எளிதில் வெல்ல முடியாது.
24. அவரவர்கள் தங்கள் ஜாதகப்படி செவ்வாய் எந்நிலையில் உள்ளது என்பதை அறிந்து பரிகாரம் செய்துகொள்வது நல்லது.
25.பிரபல நடிகை ஐஸ்வர்யாராய்க்கு செவ்வாய் தோஷத்தால் ஏற்பட உள்ள தீய தாக்கங்களுக்கு தீர்வு காண, அபிஷேக் பச்சனை திருமணம் செய்வதற்கு முன்பு அவர் ஒரு மரத்தை திருமணம் செய்ய வேண்டியிருந்தது.
26.தமிழகத்தை தாண்டி வேறு எந்த மாநிலத்திலும் செவ்வாய் தோஷத்திற்கு இத்தனை முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை.
27. புராதன யுத்தக் கடவுள் என செவ்வாயைப் போற்றி வணங்குகிறார்.
28. செவ்வாய் கிரகத்துக்கு சுய ஒளி கிடையாது. சூரிய ஒளியையே பெற்று பிரதிபலிக்கிறது.
29. செவ்வாய் தாது கிரகம். பூமி நிலை கிரகம், வெப்பம் பொருந்தியது. பஞ்ச பூதங்களில் செவ்வாய் நெருப்பு கிரகமாகும்.
30. செவ்வாய் சிவப்பு நிறம். ஏழு கிரகணங்களைக் கொண்டது.
31. தீயுள்ள இடங்கள், தீயினால் இயக்கப்படும் எந்திரங்கள். மற்றுமுள்ள சாதனங்கள், கொல்லன் பட்டறை, எந்திரக் கருவிகள், ஆயுதக் கிடங்குகள், சூளை, கொலை நடக்குமிடம், போர் மைதானம், போர்ப் பயிற்சிப் பள்ளிகள், பொறியியல் கூடங்கள், அறுவை சிகிச்சை செய்யும் இடங்கள் செவ்வாய் கிரகத்தின் வாசஸ்தலமாகும்.
32. மனித உடலில் முகம், ரத்தம், சுரப்பிகள், விரை, கல்லீரல் இடது காது, எலும்புகளுக்குள்ளிருக்கும் சத்துப் பொருள் இவற்றில் ஆதிக்கம் செலுத்துபவன் செவ்வாயே.
33. செவ்வாய் சகோதரர்களுக்குக் காரகம் பெற்றவன். அதனால் சகோதர காரகன் என்பர்.
34. செவ்வாயால் உஷ்ணக் காய்ச்சல், ரத்தக் கொதிப்பு, ரத்தப் போக்கு, விரைகளில் வலி, வீக்கம், சொறி சிரங்குகள், குஷ்டம், அடிபடுதல், விரோதிகளால் தாக்கப்பட்டுக் காயம் உண்டாகுதல், அங்ககீனம் ஏற்படுதல், பில்லி, சூன்யம், போன்றவற்றால் பாதிப்புக்குள்ளாதல், தீ விபத்துக்குள்ளாதல் அறுவை சிகிச்சை செய்து கொள்வதனால் தொல்லைக் குள்ளாதல் போன்றவை ஏற்படும்.
35. பன்னிரண்டு ராசிகளில் முதல் வீடான மேஷமும் அதற்கு எட்டாமிடமான விருச்சிகமும் செவ்வாய் ஆட்சி பெறும் ஸ்தானங்களாகும்.
36. இருபத்தேழு நட்சத்திரங்களில் மிருக சீரிடம், சித்திரை, அவிட்டம் ஆகிய மூன்றும் செவ்வாய்குரியன.
37. லக்னத்தில் செவ்வாய் இருந்தால் விரும்பிய வாழ்க்கை அமையாது. எடுக்கும் காரியங்களில் தோல்விகளைச் சந்திக்க நேரும்.
38. செவ்வாய்க்கு சூரியன், சந்திரன், குரு நட்பு, கிரகங்களாகும். சுக்கிரன், சனி சமம். புதன், ராகு, கேது பகையாகும்.
39. செவ்வாயின் ஆட்சி வீடுகள் மேஷமும் விருச்சிகமுமாகும். இவற்றில் மேஷத்தில் செவ்வாய் இருக்க நேர்ந்தால் உடல் பலம், மன உறுதி, துணிச்சல் மிக்கவராக இருப்பர். வீரதீர சாகசச் செயல் புரிவதில் வல்லவர். நினைத்தபடி முடிக்கும் ஆற்றல் பெற்றிருப்பர்.
40. செவ்வாய் அங்காரகன்- குஜன்- சேய் எனவும் அழைக்கப்படுகிறார். செவ்வாய் ரத்தக்காரகன், சகோதர காரகன், வீரதைரியகாரகன், நவக்கிரக பரிபாலனத்தில் சேனாதிபதி என்ற பட்டத்தை பெற்றவர்.
41. காவல் துறை, ராணுவம் இவற்றில் ஒருவர் பணிபுரிய வேண்டுமெனில் செவ்வாய் பலம் பெற்று இருக்க வேண்டும்.
42. செவ்வாய்க்குரிய நிறம் சிவப்பு. நம்முடைய காவல் நிலையங்களில் பயன்படுத்தப்படும் நிறம் சிவப்புதான். தீயணைப்பு நிலையங்களிலும் சிவப்புதான் பயன்படுத்தப்படுகிறது.
43. சூரியனி டமிருந்து சுமார் 15 கோடி மைல் தூரத்தில் செவ்வாய் உள்ளது. இதன் குறுக்களவு 4200 மைல்கள். இது சூரியனை 687 நாட்களில் சுற்றி வருகிறது.
44. செவ்வாய் ஒரு ஆண் கிரகம். முக்கோண வடிவம் கொண்டது. செந்நிற மேனி கொண்டவர். தெற்கு திசை நோக்கி அமர்ந்து இருப்பவர்.
45. செவ்வாய் முருகப்பெருமானை தனது அதிதேவதையாக கொண்டவர். செண்பக மலர் இவருக்கு உகந்த மலர். துவரை இவருக்கு மிகவும் பிடித்த தானியம்.
46. செவ்வாய்க்கு துவர்ப்புச் சுவை பிடிக்கும். செம்பு, உலோகம் செவ்வாயின் உலோகம்.
47. செந்நிற ஆடையையே செவ் வாய் பகவான் விரும்பி அணிவார்.
48. நவரத்தினங்களில் இவருக்கு உரியது பவளம் ஆகும்.
49. செவ்வாய்க்கிழமை இவரின் கிழமை, இது இரு கண்களும் இல்லாத குருட்டு கிழமை எனப்படுகிறது. எனவே சுபகாரியங்களுக்கு செவ்வாய்க்கிழமை உகந்தது இல்லை.
50. செவ்வாய் தோஷத்தால் பெற்றோருக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது. அதேபோல் மாமனார், மாமியாரையும் செவ்வாய் தோஷம் பாதிக்காது.
51. தினமும் கந்த சஷ்டி கவசம் பாராயணம் செய்தல் செவ்வாய் தோசத்திற்க்கு ஒரு மிகச் சிறந்த பரிகாரம் ஆகும்.
52. திருமண தாமதத்திற்கு , செவ்வாய் தோஷம் மட்டுமே காரணம் ஆகாது.
53. செவ்வாய் கிழமைக் கும்,செவ்வாய் தோசத்திற்கும் சிறிது கூட சம்பந்தமில்லை.
54. செவ்வாய் தோஷக்காரர்கள் செவ்வாய்க் கிழமையன்று, காலையில் எழுந்ததில் இருந்து 1 மணி நேரம் மவுனம் இருக்க வேண்டும். அப்படி மவுனத்தைக் கடைப்பிடிப்பவர்கள் செவ்வாய் தோஷத்தில் இருந்தே விரைவில் விடுபடுவார்கள்.
55. செவ்வாய் தோஷக் காரர்கள் காலையில் முருகனையும், இரவில் வயிரவனையும் வழிபடுவது சாலச் சிறந்தது.
56. தண்டபாணியாக முருகன் விளங்கும் கோலம் உள்ள ஆலயங்கள் செவ்வாய் தோஷத்தை விரைவில் தீர்க்கும்.
57. செவ்வாய்க் கிரகம் அவரவருடைய ஜாதகத்தில் எந்த இடத்தில் இருக்கிறதோ அந்த இடத்துக்குரிய கிரகங்களின் நாட்களில் பரிகாரம் செய்வது சிறப்பு.
58. தம்பதியருக்கு மூத்த குழந்தை ஆணாக இருந்தால் அந்தக் குழந்தையின் நான்கு, எட்டு, பன்னிரண்டு நட்சத்தி ரங்களிலும் பரிகாரங்கள் செய்து கொள்ளக்கூடாது.
59. செவ்வாய் தோஷத்தை நிவர்த்தி செய்ய செவ்வாய்க்கிழமை விரதம் இருக்கலாம். துவரை சேர்ந்த பலகாரம், பட்சணம், துவர்ப்பு பச்சடி, துவையல் ஆகியவற்றுடன் வெண்ணை சேர்ந்த சாதம், பழம், பாக்கு வெற்றிலை ஒரு தட்டில் வைக்கவும். செவ்வாய் கிரகத்தை மனதில் நினைத்து வானத்தை நோக்கி நைவேத்தியம், சூடம், சாம்பிராணி காட்டவும். நவக்கிரகக் கட்டம் இருந்தால் அதை வைத்து பூஜிக்கலாம்.
60. சரித்திரத்தில் அழியாப் புகழ் பெற்ற பல மாமன்னர்கள், சர்வாதிகாரிகள், மாவீரர்கள் ஆகியோர் செவ்வாயின் தீவிர ஆதிக்கத்தில் பிறந்தவர்கள் தான்…
மேஷராசிக்காரர்கள், தங்கள் கணவன் அல்லது மனைவியிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது, தொழிலில் கூட்டணியில் இருப்பவர்கள் அதிக எச்சரிக்கையாக செயல்பட வேண்டிய காலம் இது,, ஒப்பந்தத்தை முறைப்படுத்தி செய்து கொள்ளுங்கள்,, குடும்பத்தில் மூன்றாவது நபரின் பேச்சை கேட்டால் வில்லங்கம் தான்,
ரிஷப ராசிக்காரர்கள், இருக்கும் வேலையை தக்க வைத்துக் கொள்ளப் பாருங்கள், எந்த வேலையாக இருந்தாலும் பணிகளில் மிகுந்த இடையூறுகள் ஏற்படும், அலைச்சல் டென்ஷன் இதனால் உடல் உபாதைகள் ஏற்படும், ஆரோக்கியம் அவசியம், ஆசையே அலை போலே, என்பதற்கேற்ப தங்கள் ஆசைகளை ஈடேற அதீத முயற்சி தேவை,
மிதுன ராசிக்காரர்கள், ஒரே வரியில் சொல்லவேண்டுமானால் குலதெய்வத்தை அமாவாசை தோறும் வழிபாடு செய்யுங்கள்,,
கடகம் ராசிக்காரர்கள், புதிதாக வண்டி வாகனம் நிலபுலன்கள் வாங்கும் பொழுது டாக்குமெண்ட் சரியாக இருக்கிறதா என்று பார்த்து கொள்வது சிறந்தது, பூர்வீக சொத்துப் பிரிவினை அதாவது பாகப்பிரிவினை ஏற்படும்,, பழைய வண்டிகளை பழுது பார்ப்பது சிறந்தது, தந்தையின் ஆயுள் ஆரோக்கியத்தின் அவசியம் அக்கறை தேவை,
சிம்ம ராசிக்காரர்கள், குருட்டு பூனை விட்டத்தில் பாய்ந்தது போல தடாலடியான முடிவுகளை எடுக்காதீர்கள், சிந்தித்து அனுபவசாலிகள் அவர்களிடம் ஆலோசனை செய்து எந்த ஒரு காரியத்தையும் செய்தால் நன்மை பெறலாம், சிலரின் தாய் தந்தையருக்கு உடல்ரீதியான பிரச்சினைகள் ஏற்படும்
கன்னி ராசிக்காரர்கள், தாங்கள் ஒன்றும் தானம் தர்மம் செய்ய நாட்டின் ராஜா அல்ல, தாங்கள் சம்பாதிக்கும் சொத்துக்கள் அனைத்தையும் சேமித்துவைக்க பாருங்கள், தேவையில்லாத முதலீடு தவிர்க்கவும், கை விரிக்கும், சிலருக்கு சகோதர பகையால் பிரிவினை ஏற்படும்,
துலாம் ராசிக்காரர்கள், தலை மேல் பாரம் விழுந்தது போல இருக்கும், ராமர் பாலம் கட்டிய பொழுது அனுமன் ஒவ்வொரு கல்லிலும் ராமநாமம் எழுதி எளிதாக தூக்கிக் கொண்டு கடலில் போட்டாரோ அதுபோல நேரம் கிடைக்கும் பொழுது எல்லாம் ராமநாமத்தை ஜெபியுங்கள்,, உங்கள் தலை மேல் இருக்கும் பாரம் சுக்குநூறாக உடையும் பொழுது உங்கள் மன பலம் விருத்தியாகும்,
விருச்சிக ராசிக்காரர்கள், கடந்த காலங்கள் கஷ்டப்பட்டேன், இன்னும் நான் கஷ்டப்பட வேண்டுமா..? ? தங்களுக்கு எல்லாமே விரயமாக தான் சென்று கொண்டு இருக்கிறது, குடும்பத்தில் திருமணம் போன்ற நல்லது செய்தாலும் நீங்கள் தான் செலவு செய்ய வேண்டும், தீயது நடந்தாலும் நீங்கள் தான் செலவு செய்ய வேண்டும், இதற்கு ஒரு முடிவே இல்லையா என்று எண்ணங்கள் தோன்றும், செலவுகளை கட்டுக்குள் கொண்டுவர முயற்சி செய்யுங்கள், தடைகளை தடுக்க சிந்தனைகளை மேம்படுத்துங்கள்
தனுசு ராசிக்காரர்கள், நம்ம எப்பொழுதுமே சந்தோசமாக தான் இருப்போம், திடீரென ஏற்படும் இழப்பு பேரிடியாக அமையும், ஆக இந்த காலகட்டத்தில் நாம் எதிலும் எச்சரிக்கையாக செயல்படுவதே நல்லது, கணவன் மனைவி அந்தரங்க விஷயங்கள் ரகசியம் காக்கப்பட வேண்டும், சிலருக்கு கள்ள உறவுகள் வெளிப்பட்டு மாட்டிக்கொள்ள நேரிடும்,
மகர ராசிக்காரர்கள், தொழில் ரீதியான ஒப்பந்தங்கள் சரி பார்த்துக் கொள்வது நல்லது, குடும்பத்திற்காக நாயாய் பேயாய் அலைய வேண்டியது இருக்கும், அதற்கேற்ற வருமானமும் இருக்காது, அவன் பாரு ஒரு வேலை செய்யல நல்லா சம்பாதிக்கிறான், நான் மட்டும் இப்படி இருக்கிறேன் என்ற வருத்தம் தங்களுக்கு இருக்கும், இவை எல்லாம் கொஞ்ச காலம்தான் பொறுத்துக் கொள்ளுங்கள்,
கும்ப ராசிக்காரர்கள், தாங்கள் ஒருபக்கம் கதறிக்கொண்டு குமுறிக் கொண்டு இருப்பது தெளிவாக தெரிகிறது, இதற்க்கு ஒரு தீர்வே இல்லையா,,,? நாராயணா என எப்ப தான் நீ காப்பாத்த போற என்று சதா புலம்பிக் கொண்டே இருக்கும் நேரம் இது, வருகிற வாய்ப்பில்லாமல் அடுத்தவனுக்கு போய்க்கொண்டிருக்கிறது, அவர்களை பார்த்தால் உங்களுக்கு ஒரு பொறாமை வரும் நாம் இன்னும் இப்படியே இருக்கிறோம் என்று, தற்சமயம் பொறுமை தான் அவசியம்,
மீன ராசிக்காரர்கள், ஏன் வாழ்கிறோம் என்றும் தெரியாது ஏன் இருக்கிறோம் என்றும் தெரியாது, இப்படி ஒரு காலகட்டம் இது, தாங்கள் மற்றும் குடும்பத்திலுள்ள வரிகள் உடல் நலனில் அக்கறை காட்டுங்கள், பேராசைப் பட்டு அதை செய்து விடலாம் இதை செய்து விடலாம் என்றாள் அதிலும் நஷ்டம் தான், தங்களுக்கு தேவையானது தற்சமயம் சிறந்த ஆலோசனை, தங்களின் திறமைக்கேற்ப உடையவர்களிடம் ஆலோசனை பெற்று செயல்படுவது நல்லது
எந்த விதத்திலும் பங்கம் ஏற்படாத தசாபுத்திகள் நடப்பவர்களுக்கு சிறிது நன்மையான பலன்கள் கிடைக்கும்
பொதுவாக இந்த ஆறு மாத காலங்கள், உலகில் நாட்டில் பல்வேறு மாற்றங்கள் நிகழலாம், எதிர்பாராத நிகழ்வுகளை காணலாம், நாட்டில் மட்டுமல்ல தங்கள் குடும்பத்திற்குள்ளும் காணலாம்,, இந்த வையகம் நலம்பெற, நாடு நலம் பெற, தங்கள் குடும்பம் நலம் பெற, தயவுசெய்து தங்கள் குல தெய்வத்தையும் இஷ்ட தெய்வத்தையும் பிரார்த்தனை செய்யுங்கள்
உங்கள் நட்சத்திர காயத்ரி மந்திரத்தை மனப்பாடம் செய்து தினமும் குறைந்தது 9 முறையாவது சொல்லுங்கள். வாழ்க்கையில் மிகச்சிறந்த முன்னேற்றம் காணலாம்.
அஸ்வினி
ஓம் ஸ்வேத வர்ண்யை வித்மஹே
சுதாகராயை தீமஹி
தன்னோ அச்வநௌ ப்ரசோதயாத்
பரணி
ஓம் க்ருஷ்ணவர்னாயை வித்மஹே
தண்டதராயை தீமஹி
தன்னோ பரணி ப்ரசோதயாத்
கிருத்திகை
ஓம் வன்னிதேஹாயை வித்மஹே
மஹாதபாயை தீமஹி
தன்னோ க்ருத்திகா ப்ரசோதயாத்
ரோஹிணி
ஓம் ப்ராஜாவிருத்யைச வித்மஹே
விச்வரூபாயை தீமஹி
தன்னோ ரோஹினி ப்ரசோதயாத்
மிருகசீரிடம்
ஓம் சசிசேகராய வித்மஹே
மஹாராஜாய தீமஹி
தன்னோ ம்ருகசீர்ஷா ப்ரசோதயாத்
திருவாதிரை
ஓம் மஹா ச்ரேஷ்டாய வித்மஹே
பசும்தநாய தீமஹி
தன்னோ ஆர்த்ரா ப்ரசோதயாத்
புனர்பூசம்
ஓம் ப்ரஜாவ்ருத்யைச வித்மஹே
அதிதிபுத்ராய த தீமஹி
தன்னோ புனர்வஸு ப்ரசோதயாத்
பூசம்
ஓம் ப்ரம்ம்வர்ச்சஸாய வித்மஹே
மஹா திஷ்யாய தீமஹி
தன்னோ புஷ்ய ப்ரசோதயாத்
ஆயில்யம்
ஓம் ஸர்பராஜாய வித்மஹே
மஹா ரோசனாய தீமஹி
தன்னோ ஆச்லேஷ ப்ரசோதயாத்
மகம்
ஓம் மஹா அனகாய வித்மஹே
பித்ரியா தேவாய தீமஹி
தன்னோ மகஃப்ரசோதயாத்
பூரம்
ஓம் அரியம்நாய வித்மஹே
பசுதேஹாய தீமஹி
தன்னோ பூர்வபால்குநீ ப்ரசோதயாத்
உத்திரம்
ஓம் மஹாபகாயை வித்மஹே
மஹாச்ரேஷ்டாயை தீமஹி
தன்னோ உத்ரபால்குநீ ப்ரசோதயாத்
அஸ்தம்
ஓம் ப்ரயச்சதாயை வித்மஹே
ப்ரக்ருப்ணீதாயை தீமஹி
தன்னோ ஹஸ்தா ப்ரசோதயாத்
சித்திரை
ஓம் மஹா த்வஷ்டாயை வித்மஹே
ப்ரஜாரூபாயை தீமஹி
தன்னோ சைத்ரா ப்ரசோதயாத்
சுவாதி
ஓம் காமசாராயை வித்மஹே
மகாநிஷ்டாயை தீமஹி
தன்னோ சுவாதி ப்ரசோதயாத்
விசாகம்
ஓம் இந்த்ராக்நௌச வித்மஹே
மஹாச்ரேஷ்ட்யைச தீமஹி
தன்னோ விசாகா ப்ரசோதயாத்
அனுஷம்
ஓம் மித்ரதேயாயை வித்மஹே
மஹா மித்ராய தீமஹி
தன்னோ அனுராதா ப்ரசோதயாத்
கேட்டை
ஓம் ஜயேஷ்டாயை வித்மஹே
மகா ஜய்ஷ்ட்யாயை தீமஹி
தன்னோ ஜ்யேஷ்டா ப்ரசோதயாத்
மூலம்
ஓம் ப்ராஜாதிபாயை வித்மஹே
மஹப்ராஜையை தீமஹி
தன்னோ மூலாப் ப்ரசோதயாத்
பூராடம்
ஓம் சமுத்ரகாமாயை வித்மஹே
மஹாபிஜிதாயை தீமஹி
தன்னோ பூர்வாஷாடா ப்ரசோதயாத்
உத்திராடம்
ஓம் விஸ்வேதேவாய வித்மஹே
மஹா ஷாடாய தீமஹி
தன்னோ உத்ராஷாடா ப்ரசோதயாத்
திருவோணம்
ஓம் மஹா ச்ரோணாய வித்மஹே
புண்யஸ்லோகாய தீமஹி
தன்னோ ச்ரோணா ப்ரசோதயாத்
அவிட்டம்
ஓம் அக்ர நாதாய வித்மஹே
வசூபரீதாய தீமஹி
தன்னோ சரவிஹ்டா ப்ரசோதயாத்
சதயம்
ஓம் பேஷஜயா வித்மஹே
வருண தேஹா தீமஹி
தன்னோ சதபிஷக் ப்ரசோதயாத்
பூரட்டாதி
ஓம் தேஜஸ்கராய வித்மஹே
அஜஏகபாதாய தீமஹி
தன்னோ பூர்வப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
உத்திரட்டாதி
ஓம் அஹிர் புத்ந்யாய வித்மஹே
ப்ரதிஷ்டாபநாய தீமஹி
தன்னோ உத்ரப்ப்ரோஷ்டபத ப்ரசோதயாத்
ரேவதி
ஓம் விச்வரூபாய வித்மஹே
பூஷ்ண தேஹாய தீமஹி
தன்னோ ரைய்வதி ப்ரசோதயாத்
செவ்வாய்கிழமை தோறும் வேப்ப மரத்தின் தெற்கு பக்கம் 7 மண் அகல் விளக்கில் நல்லெண்ணை ஊற்றி தீபமேற்றி மரத்திற்கு கற்பூரம் சாம்பிராணி காண்பித்து மனதார வேண்டிக் கொள்ள நீங்கள் பிறருக்கு கடனாக கொடுத்த பணம், நகை விரைவில் திரும்ப கிட்டும். மேலும் நீங்கள் இழந்த பெயர், புகழ், செல்வம் கிட்டும்
புதன் பகவானுக்குரிய மிதுன ராசியில் சூரிய பகவான் பிரவேசிக்கும் மாதம் ஆனி மாதமாகும். தமிழ் மாதங்களில் மூன்றாவது மாதமாக ஆனி மாதம் வருகிறது. ஆனி மாதம் என்றாலே அனைவருக்கும் முதலில் நினைவுக்கு வருவது சிதம்பரத்தில் நடராசப் பெருமானாக ஆக இருக்கும் சிவபெருமானுக்கு செய்யப்படும் ஆனித்திருமஞ்சனம் சிறப்பு பூஜை வழிபாடு தான். அத்தகைய சிறப்பு வாய்ந்த ஆனித் திருமஞ்சனம் ஆனிமாத உத்திர நட்சத்திர தினத்தன்று செய்யப்படுகிறது. அந்த ஆனிமாத உத்திர நட்சத்திர தினத்தன்று நாம் செய்ய வேண்டியது என்ன என்பதையும் அதனால் நமக்கு கிடைக்கும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு தெரிந்து கொள்ளலாம்.
ஒரு வருட காலத்தில் சிவபெருமானுக்கு விரதம் மேற்கொண்டு வழிபடுவதற்கு ஆறு நாட்கள் மிக சிறந்த தினங்களாக கூறப்படுகின்றன. அதில் ஒன்றுதான் ஆனி உத்திர நட்சத்திர தினம். பல சிறப்புகளைக் கொண்ட ஆனி மாதத்தில் வருகின்ற உத்திரம் நட்சத்திர தினத்தன்று, சிவபெருமானுக்கு அபிஷேகங்கள் செய்து வழிபடுவது மிகுந்த நன்மை அளிக்கக் கூடியதாகும்.
தமிழகத்தில் இருக்கும் பல புகழ்பெற்ற சிவாலயங்களில் ஆனிமாத உத்திர நட்சத்திர தினத்தன்று ஆனித் திருமஞ்சனம் மற்றும் நடேசரபிஷேகம் ஆகியவை செய்யப்படுகிறது. இந்த தினத்தில் அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு அருகிலுள்ள சிவாலயங்களுக்கு சென்று, சிவனுக்கு அபிஷேகம் அர்ச்சனை செய்து வழிபடுவதால் உடற்பிணிகள் நீங்கும். வாழ்வில் இருக்கின்ற கஷ்ட நிலை குறைந்து வளமை பொங்கும். உத்திரம் நட்சத்திரம் என்பது சூரிய பகவானுக்குரிய நட்சத்திரமாகும். ஜாதகத்தில் சூரிய கிரகத்தால் ஏற்பட்டிருக்கின்ற தோஷங்களின் பாதிப்புகளைக் குறைத்து நன்மைகளை அதிகரிக்கச் செய்யும்.
மேலும் நாளைய ஆனி உத்திர தினம் முருகப்பெருமானுக்குரிய தினமான சஷ்டி தினத்தில் வருவது கூடுதல் சிறப்பு வாய்ந்ததாகும். இந்த தினத்தில் காலையில் சிவபெருமானை வழிபட்டு முடித்தவர்கள், மாலையில் முருகப்பெருமானுக்கு மலர் மாலைகள் சாற்றி, தீபங்கள் ஏற்றி வழிபாடு செய்வதால் செவ்வாய் கிரக தோஷங்களால் ஏற்படும் பாதிப்புகள் நீங்கி, திருமண பாக்கியம், புத்திர பாக்கியம், வீடு நிலம் போன்ற சொத்துகள் அமைப்பு போன்றவை கிடைக்கப் பெறுவார்கள்.
27 நட்சத்திர வரிசையில் மூன்றாவதாக வருவது கிருத்திகை நட்சத்திரமாகும். நவகிரகங்களில் சூரிய பகவானின் ஆதிக்கத்திற்கு உட்பட்ட நட்சத்திரமாக இருந்தாலும் செவ்வாய் மற்றும் சுக்கிர கிரகங்களின் ஆதிக்கம் ஒரு சேர கொண்ட நட்சத்திரமாக இருக்கிறது கிருத்திகை நட்சத்திரம். இந்நட்சத்திரத்தின் தேவதையாக அக்னி பகவான் இருக்கிறார். கிருத்திகை நட்சத்திரம் தமிழர்களின் கடவுளான முருகப்பெருமானுக்குரிய நட்சத்திரமாகவும் இருக்கிறது.
கிருத்திகை நட்சத்திரக்காரர்களின் தோஷங்கள் நீங்கி நன்மைகள் நடக்க ஒவ்வொரு மாதமும் வருகின்ற கிருத்திகை நட்சத்திர தினத்தன்று முருகப்பெருமான் கோவிலுக்கு சென்று முருகனுக்கு அபிஷேகம் செய்து வழிபடுவது நல்லது. கிருத்திகை நட்சத்திரக்காரர்களுக்கு உரிய தல விருட்சமாக அத்தி மரம் இருக்கிறது. அத்தி மரம் தல விருட்சமாக இருக்கும் கோவில்களுக்கு சென்று அத்தி மரத்தையும், அங்குள்ள இறைவனையும் வழிபடுவது உங்களுடைய வாழ்வில் அதிர்ஷ்டங்கள் பெருகச்செய்யும் சிறந்த பரிகாரமாகும்.
எந்த ஒரு மாதத்திலும் வரும் கிருத்திகை நட்சத்திர தினத்திலோ அல்லது ஆடிக்கிருத்திகை தினத்திலோ உங்கள் சக்திக்கு ஏற்ப வேதமறிந்த பிராமணர்களுக்கு அரிசி, வஸ்திரம் போன்றவற்றை தானம் செய்யலாம். மற்ற எந்த பரிகாரம் செய்யவில்லை என்றாலும் கிருத்திகை நட்சத்திரக்காரர்கள் தினமும் அதிகாலையில் எழுந்து குளித்து முடித்ததும், சூரிய நமஸ்காரம் செய்வதால் வாழ்வில் எப்போதும் நன்மைகள் ஏற்படும். கோயில்களில் நடைபெறும் யாகங்களுக்கு தேவையான பூஜைப் பொருட்களை வாங்கித் தருவதும் கிருத்திகை நட்சத்திரக்காரர்களின் தோஷங்களை போக்குவதற்கான சிறந்த பரிகாரமாகும்.