உங்கள் நட்சத்திரத்தின்படி ருத்ராட்சம் !!
சிவசக்தி ரூபங்களுக்கு வணக்கம் , சிவனின் அடையாளமான ருத்ராட்சம் உங்கள் கழுத்தில் அணிந்து இருந்தால் சகல தோஷமும் நீங்கி உங்கள் இல்லங்களில் லட்சுமி கடாட்சம் பெருகும் . மேலும் ருத்ராட்சம் உங்கள் நட்சத்திரத்தின்படி அணிந்து கொண்டால் இன்னும் அதிக பலன் உண்டு . 1 முதல் 27 முக ருத்ராட்சத்தின் எதை அணிந்தால் அதிக நன்மை உண்டு என பலர்க்கு கேள்விகள் எழும் . அதற்க்கு இந்த இடுகை உதவியாக இருக்கும் !!
கார்த்திகை , உத்திரம் , உத்ராடம் — 1–10–19 முகம்
ரோகிணி , அஸ்தம் , திருவோணம் — 2– 11–20-முகம்
புனர்பூசம் , விசாகம் , பூரட்டாதி — 3– 12– 21 முகம்
திருவாதிரை , சுவாதி , சதயம் —–4–13–22 முகம்
ஆயில்யம் , கேட்டை , ரேவதி ——-5—14–23 முகம்
பரணி , பூரம் , பூராடம் —————-6—15–24 முகம்
அசுவினி , மகம் , மூலம் —————7—16 25 முகம்
பூசம் , அனுஷம் , உத்திரட்டாதி —–8—17–26 முகம்
மிருகசீரிஷம் ,சித்திரை , அவிட்டம் – 9–18–27 முகம்
___________________________________________________________
உங்கள் ராசியின்படி
சிம்மம் — 1— 10 —19 — முகம்
கடகம் —– 2— 11—-20 முகம்
தனுசு , மீனம் — 3–12—21 முகம்
மிதுனம் ,கன்னி — 5– 14— 23 முகம்
ரிஷபம் ,துலாம் —- 6–15 — 24 முகம்
மகரம் , கும்பம் —– 8— 17— 26 முகம்
மேஷம் , விருச்சிகம் — 9 — 18 — 26 முகம்
——————————————————————— ஜாதகம் இல்லாதோர் தங்களின் பிறந்த தேதியின் படி அதிஸ்ட்ட எண் தேர்வு செய்து அந்த எண்ணுக்கு உரிய முக ருத்ராட்சம் பயன்படுத்தலாம் ,
திருமணம் ஆகாதோர் தனி ருத்ராட்சமும் , திருமணம் முடிந்தோர் ருத்ராச்சத்தில் உங்கள் ராசிக்கு உரிய உலோகம் சேர்த்து இடுதல் வேண்டும் ,
******* ஜாதகத்தில் செவ்வாய் தோஷம் உள்ளோர் , திருமண தடை உள்ளோர் , மாங்கல்ய பாக்கிய குறைபாடு உள்ளோர் , பூர்வீக சொத்தில் வில்லங்கம் உள்ளோர் , பிரிந்து இருக்கும் கணவன் மனைவி சேர்வதற்கு — 9– 18 — 27 முக ருத்ராச்சம் அணிந்து சிவசக்தியை வழிபாடு செய்தால் இந்த குறைபாடுகள் நீங்கும் .
******* ஜாதகத்தில் ராகு கேது தோஷம் உள்ளோர் — ( 4,13, 22 ) ( 7, 16 , 25 ) , முகமுள்ள இரண்டு ருத்ராட்சம் சேர்த்து அணியனும்
****** ருத்ராட்சம் , நெற்றி போட்டு , தொண்டைக்குழி , நெஞ்சுக்குழி , தொப்பில்குழி , அருணான் கட்டும் இடம் , இவற்றில் தொடும் படி அணிதல் வேண்டும் .
9 முகத்திற்கு மேல் உள்ள ருத்ராட்சம் கிடைக்காதோர் 9 முகம் வரை உள்ள ருத்ராட்சம் அணியலாம் !! ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய,
—————————————————
மேலும் உங்களின் எண்ணங்கள் ஈடேற !!!
, அருள் வளம் செல்வ வளம் , எல்லாம் இருக்கும் ஆனால் மன நிம்மதி இருக்காது , நீங்கள் சம்பாதித்த செல்வம் உங்களால் அனுபவிக்கும் சூழ்நிலை இருக்காது ,
உடலிலோ மனதிலோ ஜாதகத்திலோ எந்த குறைபாடும் இருக்காது ஆனால் பலர்க்கு
— திருமணம் தடைபடும் , !!
— காரணமின்றி மண முறிவு ஏற்ப்படும் !!
— கணவன் மனைவிக்குள் அன்யோன்யம் இருக்காது !!
— குழந்தை பாக்கியம் இருக்காது !!
— மண நோய் , காரணமில்லாத மண அழுத்தம் இவற்றால் தாம்பத்யம் பாதிக்கும் !!
— பல தார வாய்ப்பு , கலப்பு திருமணம் , தந்தைக்கு பல தாரங்கள் , ஏற்ப்படும் !!!
— திருமணத்திற்கு பின் விரக்தியின் அடிப்படையில் மனம் ஆன்மிகம் செல்லும் !!
— இல்லற வாழ்க்கையை காட்டிலும் பரதேச வாழ்க்கையை மனம் விரும்பி ஏற்கும் !!
— நல்ல செல்வவளம் , இருக்கும் , அழகான மனைவி , அன்பான குழந்தைகள் இருக்கும் இருப்பினும்
அவற்றை அனுபவிக்கும் சூழ்நிலை இருக்காது ,
— தானம், தர்மம் ஆன்மீகப்பணி செய்தும் ஊனமுற்ற வாரிசு உருவாகும் !!
— அடிக்கடி கரு மறைவு ஏற்ப்படும் !! குழந்தை பாக்கியம் தாமதமாகும் !!
— நிரந்தர பணியும் பணியில் நிம்மதியும் இருக்காது !!
— கடன் தீராது , குடுத்த பணம் வராது , , சொந்த சொத்துக்களையே விற்க இயலாது !!
— மனதில் எதோ இனம் புரியாத கவலை !!
இவற்றுக்கெல்லாம் காரணம் பித்ரு தோஷம்–,தேக– ஜீவ– ஞான — தெய்வ தோஷங்கள் ஆகும் ,, , ஜாதகத்தில் இந்த தோஷம் தெரிந்தால் சரி செய்யலாம் , ஜாதகம் சரியாய் இருப்போர்க்கும் இந்தநிலை இருக்கும் , இந்த பித்ரு தோஷம்– தேக ஜீவ ஞான தெய்வ தோஷம் , ஜாதகத்தில் ஒரு சில தலைமுறைக்கு மட்டுமே காண்பிக்கும் , பல தலைமுறை கடந்து விட்டால் கிரக சுழற்சி காரணமாக ஜாதகத்தில் அது மறைவு செய்யப்பட்டு தோஷங்கள் மட்டும் தொடரும் !!
————————————————–
இவற்றை சரிசெய்யும் வழிகள்
— ஆடி அமாவாசையில் நீர்நிலை அருகில் உள்ள ஆலயங்களில் தில பரிகாரம் செய்தல் !!
— வருடம் 7 முறை குலதெய்வ வழிபாடு( 48 நாளுக்கு ஒரு முறை)குலதெய்வ கோவில் அபிவிருத்தி பணிகள் செய்தல் !!
— தினமும் நாள் தவறாமல் வீட்டில் திருவிளக்கு ஏற்றுதல் , அந்த விளக்கு ஒளியை ஆதி
சிவரூபமாய் நினைத்து வழிபடுதல் !!!
— விளக்கு ஏற்ற வசதி இல்லா ஆலயங்களுக்கு விளக்கு நெய் வாங்கி கொடுத்தல் !!!
— வாரிசு இல்லாத தாய் தந்தைக்கு உடன் பிறந்தவர்களுக்கு சேவை மற்றும் ஈமக்கிரியை செய்தல் !!
— ஞான மார்க்கத்தில் 7 தலைமுறை பாபங்களையும் போக்கும் பிரம்ம யோகா செய்தல் !!
உங்களது நட்சத்திரதின்படி தேவ விருட்ச பரிகாரம் செய்தல் ,!!
உங்கள் நட்சதிரதின்படி பஞ்சபூத ஸ்தல பரிகாரம் செய்தல் !!
இது போன்ற காரியங்களால் இதை நிவர்த்தி செய்யலாம் !