நீங்கள் வெளியில் தகட்டில் எழுதும் யந்திரங்களையும் அதில் எழுதும் அட்சரங்களையும் முதலில் உங்கள் மனதில் தியானித்து அந்த யந்திரத்தை மனக்கண்ணால் பார்த்தவாறே ஆத்மாவில் வரையவும். ஒவ்வொரு கோடாக ஒவ்வொரு அட்சரமாக மனக்கண்ணில் பார்த்தவண்ணம் ஆழ்மனதால் தியானித்து உங்கள் மார்பின் உள்பகுதியில் எழுதுவதாக பாவித்துக் கொள்ளவும்.யந்திரம் முழுமை பெற்றபின் சற்று நேரம் அந்த யந்திரத்தின் மூல மந்திரங்களை செபிக்கவும். அதன்பிறகு தயாராக வைத்துள்ள யந்திர தகட்டில் எழுதுகோல் துணையுடன் எழுதவும். இவ்வாறு செய்யும்போது ஆத்ம சக்கரம் முழுவலிமையுடன் அப்படியே யந்திர தகட்டில் பதியும். அந்த யந்திரமே பலன் கொடுக்கும்.
ஆதிசங்கரர்கூட இந்த முறையை கடைபிடித்தே சக்கர ஸ்தாபிதம் செய்தார். ஒரு யந்திரம் எழுதுகிறீர்கள் என்றால் அதை முதலில் மனப்பாடம் செய்துகொள்ளுங்கள். இன்னொரு வரைபடத்தை பார்த்து பார்த்து வரைவது முழுபலன் தராது. கவனம் மற்றும் கருத்து சிதறல் உண்டாகும். ஆன்மிகர்கள் உண்மையிலேயே மந்திர சித்தி செய்திருந்தால் ஆரம்ப சித்திகளை செய்திருந்தால் மனப்பாட சக்தி தன்னால் தன்னிடம் இருக்கும். எனவே அதைக்கொண்டு யந்திர வரைபடத்தை பார்த்து அதன் கோடுகள் அட்சரங்கள் என முழுவதையும் சற்றுநேரம் உற்றுபார்த்து மனப்பாடம் செய்துகொண்டு பிறகு மனதியானம் செய்து அடுத்து வெளியில் யந்திரம் எழுதி பின் நன்னீரால் சுத்தப்படுத்தி மீண்டும் மந்திரம் செபித்து உரியவரிடம் சேர்பிக்க வேண்டும். இதுவே யந்திரம் சித்தியாகி வலிமையுடன் பலன் கொடுக்கும்.
யந்திரங்கள் வரைவதற்கான சில பொது விதிமுறைகள் இருக்கிறது அவற்றை பார்க்கலாம்.
அட்ஷரம் கீறும் முறை – பொதுமுறை
1. செம்புத்தகடாக இருக்க வேண்டும்.
2. குறைந்த பட்சம் 5” x 5” அங்குலமாக இருக்கவேண்டும்.
3. இருப்பு ஆனியினால் கீற வேண்டும்.
4. தகட்டில் காயம் ஏதும் வரக்கூடாது.
5. கீறும்போது சிறுதவறு ஏற்பட்டாலும் திருத்தம் செய்யக்கூடாது. மீண்டும் புதிய தகட்டில் கீறவும்.
6. கோடுகள் தெளிவாக இருக்கவேண்டும்.
7. எழுத்துக்கள் அல்லது இலக்கங்கள் சற்று அழுத்தமாக இருக்க வேண்டும்.
8. சமச்சீர் சரியாக இருக்க வேண்டும்.
9. கோணங்கள் சரியாக இருக்க வேண்டும்.
10. வாசல் மற்றும் மூலை நேராக வர வேண்டும்.
11. விந்து என்னும் வட்டம் மையத்தில் அமைய வேண்டும்.
12. ஓங்காரம் சுற்றும்போது சரியாக அட்ஷரம் அதனுள் அமையவேண்டும்.
இந்த விதிமுறைகளை சரியாக கடைப்பிடித்தால் அட்ஷரங்கள் சரியான பலன் கிடைக்கும் என்பதில் ஐயம் இல்லை
First meditate in your mind, the machines that you write in the outside, and the signs you write in your mind, and draw it in your soul. Meditate the color that every line is seen in every line, remember that it is written in the inner part of your mar.After the machinery is complete, please tell the original mantras of the machine for a while. After that write with the pencil support in the yandra, ready. While doing this, the soul will be full strength and will be posted in the yandra. That machine will give benefit.Even adi shankar made a wheel stachive this time. If you are writing a machinery then remember it first. Looking at another map doesn’t make a full benefit. Attention and comment may be scattered. If the spiritual people really have really magical pictures, the power of mindset would have done with him. So, look at the map of the yandra map and remember all its lines, and then you should do mental meditation and then write the next outside and then clean it with the mantra again and add mantra again. This is the only thing that will benefit from the world.
There are some common terms to draw machines. See them.
Adshram scratch mode – general mode
Must be 1. Sema book.
2. MUST BE AT LEAST 5 “X 5” Inch.
3. Need to scratch the stock.
There should be no injury in 4.
5. You should not edit even if there is a small mistake during scratch. Scratch again in a new post.
6. Lines should be clear.
7. Letters or digits should be slightly stressed.
8. Symmetry to be correct.
9. Angles must be correct.
10. The door and corner should come straight.
11. Must be located at the center of sperm.
12. When roaming around the omkar, exactly the adshram should be within it.
If you shop these terms properly, there is no doubt that the admissions will get the right result.