🌲🌲🌲🌲🌲🌲🌲🌲🌲
*மரம் வளர்ப்போம்..,*
*மழை பெறுவோம்..,* *இயற்கையை காப்போம்…..*
*இன்றைய நற்செய்தி*
11-6-2022
*ஆரோக்கிய மேன்மைக்காக அமெரிக்காவில் நடைபெற்ற கணக்கெடுப்பில் மனம் அமைதியாக இருப்பவர்கள் நீண்ட காலம் வாழ்வார்கள் என்று அவர்களின் ஆராய்ச்சியில் தெரிவிக்கப்பட்டது….*
*மனம் வருத்தமடைந்தால், தேவையற்ற யோசனைகள் இடம் பெற்றுக் கொண்டு, அவற்றிலிருந்து வெளியேறுவதற்க்கு பல தகாத பழக்கவழக்கங்களுக்கு ஆளாகி, தன்னைத் தானே அழித்துக் கொள்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறியிருக்கின்றனர்..,*
*சமீபகாலத்தில் உலகம் முழுவதிலும் மருத்துவர்கள் முக்கிய நோய்களுக்கு மருந்துகள் அளிப்பதை குறைத்து, வாழ்க்கை முறையை சரி செய்யும் செயலில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றனர்..*
*அதன்மூலம் தொடர்ச்சியான நோய்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கும் முறையை மாற்றி கொண்டனர்…..*
*உணவில் மாற்றமும்.., எண்ணங்களில் மாற்றமும் பற்றி அறிவுரை கூறுகின்றனர்..*
*காலையில் நடைப் பயிற்சியும்., இனிமையான இசை கேட்பதும்.., “ஜிம்”க்கு செல்வதும் அதனுடன் இணைந்து அனைவரும் தவறாமல் “தியானம் சாதனையை கடைபிடிக்க வேண்டும்,” என்று அறிவுறுத்துகின்றனர்….,*
*மொத்தத்தில் உடல்., மனம் வலிமை பெற இவ்வாறு பயிற்சி செய்ய அறிவுறுத்துகின்றார்..,*
*ஜப்பான் விஞ்ஞானிகளின் ஆய்வுகளும், கண்டுபிடிப்புகளும் புத்தம் புதியவை….. இவற்றில் பங்கு பெற்ற விஞ்ஞானிகள் என்ன சொல்கின்றார்களோ பார்ப்போம்…..*
*”மன அழுத்தத்தால்” வாயு தொல்லை..,*
*”கோபதாபங்கள் அதிகரிப்பதால்” உயர் இரத்த அழுத்தம்…..*
*”மிகவும் சோம்பலால்,” கெட்ட கொலஸ்ட்ரால் ..*
*கொழுப்புப்பொருட்களை உண்பவர்களைவிட, ‘சோம்பலால்” கொழுப்பு அதிகமானவர்களிடம் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமாம்!*
*”நீரிழிவு நோய்” பிரச்சினை இனிப்பு பொருட்கள் அதிகமாக உண்பவர்களைவிட “மிகவும் சுயநலம்” “பிடிவாதம்” போன்ற குணங்கள் இருப்பவர்களுக்கு அதிகமாம்!*
*”மிகவும் சோகத்தினால் ” ஆஸ்துமா.,*
*நுரையீரல்களுக்கு காற்று செல்லாததைவிட, மிகவும் சோகத்தாலேயே நுரையீரல்களில் மாற்றங்கள் ஏற்பட்டு ஆஸ்துமா வருமாம்..,*
*”அமைதி இன்மை காரணமாக இருதயநோய்கள்….”*
*மொத்தத்தில் உடலில் ஏற்படும் அனைத்து நோய்களுக்கும் “மூலகாரணங்கள்” நம் எண்ணங்களுடன்*
*1) உணவு பழக்கவழக்கங்கள்..,*
*2)வாழ்க்கை முறை தொடர்புடையது என்பது…. புரிந்து கொள்வீர்….*
*வாழ்க்கை முறையை மாற்றிக்கொண்டு ”தியானம் செய்து, ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்வது” என்று ஜப்பான் விஞ்ஞானிகள் கூறியிருக்கின்றனர்…*
*மேலும் விஞ்ஞானிகளின் குறிப்புகளின் படி நாம் ஆரோக்கியமாக இருக்க வேண்டுமென்றால்….*
-சுயநலம்,
-கோபம்,
-வெறுப்பு,
-விரோதம்,
-சீற்றம்,
-பொறாமை,
-பிடிவாதம்,
-சோம்பல்,
-வருத்தம்.
*போன்ற எதிர்மறை எண்ணங்களில் இருந்து விடுபடவேண்டும் என்று கூறி இருக்கின்றனர்..,*
*மேலும் தியானம் செய்ய வேண்டும்…. தியான சாதனை மட்டுமே அனைத்து மனித சமூகத்தின் நலன் என்றும் தெரிவித்திருக்கின்றனர்….*
*மனிதனின் யோசனைகள் மாறவேண்டும்… அவர்களின் எண்ணங்கள்….*
கருணை,
தியாகம்,
அமைதி,
மன்னிப்பு,
பொதுநலம்,
நட்புணர்வு,
சேவை மனப்பான்மை,
நன்றியுணர்வு,
நகைச்சுவை,
சந்தோஷம்,
நேர்மற
*போன்ற குணங்களை பெருக்கிக் கொள்ள வேண்டும் என்று கூறியிருக்கின்றனர் நண்பர்களே….*
*புரிந்து கொள்ளுங்கள்., ஏற்றுக்கொள்ளுங்கள்., நடைமுறைப்படுத்துங்கள்., ஆரோக்கியமான., ஆனந்தமான வாழ்வை பெருங்கள்…..*
*சர்வே ஜனா சுகிநோ பவந்து….*
*லோகா சமஸ்தா சுகினோ பவந்து…*
******************
*ஆன்மீக முன்னேற்றம் அடைய..,*
*ஆன்மீக அனுபவம் பெற..,,*
*படித்ததில் பிடித்திருந்தால், மற்ற குரூப்புகளுக்கும் அனுப்பலாமே🙏*
🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
மன அமைதிக்கான சில சிந்தனைகள்
மன அமைதிக்கான சில சிந்தனைகள்…
1)தனிமையில் அமர்ந்து எதனால் உங்களுக்கு
பிரச்னைகள் வருகின்றன.அதில் தீர்வு காண என்ன வழி என யோசியுங்கள்.
2)நல்ல மனிதர்களுடனும்,அனுபவம் வாய்ந்த
பெரியவர்களுடனும் ஆலோசனை கேளுங்கள்.
3)ஒருபோதும் மூடர்களின்செயல்களை பார்த்து உங்கள் மகிழ்ச்சியை இழந்துவிடாதீர்கள்.நல்ல மனிதர்களின் அனுபவ அறிவு நிறைந்தவர்கள்
நட்பை இழந்துவிடாதீர்கள்.
4)உங்கள் மனதை எது பாதித்தாலும் அதை
தொலைவில்வையுங்கள்.நினைவில்கொண்டு
வராதீர்கள்.
5)வீட்டிலிருப்பவர்களுடனும்,நண்பர்களுடனும்
பேசுவதற்கு நேரம் ஒதுக்குவதைப் போல, நிச்சயமாக இறைவனுடன் பேசுவதற்கு நேரம்
ஒதுக்குங்கள்.அந்த நேரத்தில் இடையூறு செய்யும் எதுவானாலும் ஒதுக்கி தள்ளுங்கள்.
6)எக்காரணத்தை கொண்டும் பாவம் செய்யும் ஒருவரை பார்க்காதீர்கள்.உங்கள் மனதில்கூட பாவஎண்ணங்கள் வர அனுமதிக்காதீர்கள்.
நிம்மதியை யாருக்காகவும் இழக்காதீர்கள்.
7)நடப்பவை அனைத்தும் நன்மைக்கே என திடமாக நம்புங்கள்.ஒருவேளை மனதிற்கு
பிடிக்காத சம்பவம் வந்தால் அது உங்களிடம்
நிரந்தரமாக விடைபெற்று செல்வதற்காக வந்ததாக மகிழ்ந்து நிரந்தர விடைகொடுத்து அனுப்புங்கள்.
8)வாரம் ஒருமுறை ஆதரவற்றோர் இருப்பிடம்,
அரசு ஆஸ்பத்திரி,முதியோர் இல்லம் சென்று
உங்களால் முடிந்த உதவி செய்யுங்கள்.உடல்
ஊனமுற்றோர் வேலை செய்யும் பொழுதும். கண்பார்வையற்றோர் அகர்பத்தி விற்கும் பொழுதும் இறைவன் உங்களை பூமியில் எந்தவிதமான குறையுமின்றி படைத்ததற்காக நன்றி கூறுங்கள்.
9)தினமும் ஏதாவது ஒன்றை கற்றுக் கொள்ள
முற்படுங்கள்.நேரத்தை விரயம் செய்யும்
எதையும் அனுமதிக்காதீர்கள்.நேரத்தில்
உறங்கி,நேரத்தில் எழுங்கள்.
10)உங்களை பார்ப்பவருக்கு உற்சாகம் வரும்
அளவு உங்கள் தோற்றம் இருக்கட்டும்.ஒரு
செயலை ஆரம்பிக்கும் முன் முடிவை தெரிந்து
கொள்ளுங்கள்.இதன்விளைவு எதில்கொண்டு
சேர்க்கும் என ஆராயுங்கள்.உங்களை புரிந்து மதிப்பவர்களுக்காக கண்டிப்பாக சிறிது நேரம்
ஒதுக்குங்கள்.
11)எல்லாம் உலகில் உங்களுக்கு பிடித்தமாதிரி
நடக்கும் என எதிர்பார்க்காதீர்கள்.இவ்வுலகில்
எவ்விதத்திலும் நீங்கள் எதிர்பார்ப்பது சில நேரங்களில் உங்களை ஏமாற்றத்தில்கொண்டு போய் நிம்மதியை இழக்க செய்துவிடும்.செல்
போனை தேவையானவற்றிற்கு மட்டுமே உபயோகம் செய்யுங்கள்.வீணடிக்காதீர்கள்.
12)எதிலும் நேர்மையாக இருங்கள்.தர்மத்தின்
வழிப்படி நடக்க மறவாதீர்கள்.
இறைவனை சதா சர்வ காலமும் துணைவனாக வையுங்கள்.
மனம் குழம்பும் பொழுது சிறிது நேரம் எதுவும் பேசாமல் இறைவனை நினைத்து அவரிடம் மனம் விட்டு பேசிவிட்டு உங்கள் காரியத்தை துவங்குங்கள்.அமைதி உங்களின் நிரந்தர நண்பனாகிவிடும்.வாழ்த்துக்கள்.