சிவாயநம
*சிவ அன்பர்கள் கேக் வெட்டி கொண்டாடலாமா?*
சமீப காலமாக முகநூலிலும் , வாட்ஸ் அப்பிலும்
*உலக அறிவில் இருக்கும் தான் சிவ அன்பர்கள் – அடியார்கள் என்று தன் பெயருக்கு முன்னால் போட்டுக் கொள்ளும் அன்பர்கள் தனக்கு பிறந்த நாள் வந்தால் கேக் வெட்டி கொண்டாடி வருகின்றனர்*
இதனால் புதியதாக வரும் தொண்டர்களும் கேக் வெட்டி கொண்டாடுவதற்கு வழி வகுக்கும்.
ஆங்கில கலாச்சாரத்தில் ஊறிய இத்தகைய *உலக அறிவு* சிவ தொண்டர்கள் நமது சிவ வழிபாட்டிற்கு அப்புறமாக விளங்குகிறார்கள்..
இவர்களை நாம் எப்படி சிவத்தொண்டர்கள் என்று அழைப்பது..
*நமது சைவ நெறியில் இல்லாத ஒன்றாகும் கேக் வெட்டி கொண்டாடுவது.*
சில அன்பர்கள் சைவ கேக் என்று சொல்லுகிறார்கள். இத் அவர்களின் தனிபட்ட கருத்து..
*இருப்பினும் சைவ நெறியில் இல்லாததை ஏன் அன்பர்கள் செய்யினும்..*
*சைவ நெறியில் பிறந்த நாள் எப்படி கொண்டாடுவது ?*
*1. காலையில் நித்திய கடன்களை செய்து . முதலில் தாய் தந்தையிடம் வாழ்த்து பெற வேண்டும்*
*2. திருக்கோயிலுக்கு சென்று இறைவனை வழிபாடு செய்ய வேண்டும்.*
*3. வயது முதியவர்களிடம் வாழ்த்துக்கள் பெற வேண்டும்*
*4. தான தர்மம் செய்து புண்ணியம் பெற வேண்டும்.*
*5. சிவ அடியார்களிடம் சென்று திரு நீறு பிரசாதம் பெற வேண்டும்*
*6. முப்போது திருமேனி தீண்டும் ஆதி சைவ சிவாச்சாரியார்களிடம் இறை பிரசாதத்தை பெற வேண்டும்*
*7. திருமுறையை பண்ணிசையோடு பாடும் ஓதுவார் மூர்த்திகளிடம் சென்று வாழ்த்து பெற வேண்டும்..*
*8. வசதியாக இருக்கும் அன்பர்கள் யாகம் செய்து வழிபடலாம்.*
*9. சிவனடியார்களை – ஓதுவார்களை இல்லத்துக்கு அழைத்து வஸ்திரங்கள் மற்றும் உணவு கொடுத்து வழிபடுங்கள்*
*10. இறை தொண்டுகளை செய்யவும்*
*11. பசு – யானை – அஸ்வம் பூஜைகளை செய்து வழிபடுங்கள்.. இதனால் ராஜ வசிகம் உண்டாகும்*
*12. தனது நண்பர்களுக்கு சர்க்கரை பொங்கல் , பருப்பு பாயாசம் ஆகியவை வழங்குங்கள். இவையே பாரம்பரியமாக செய்து வருகின்றனர்.*
*13. இறை சிந்தனையோடு இருங்கள்.*
மேற் குறிப்பிட்ட தகவல்கள் நமது சைவ நெறியில் சிவனடியார்கள் மற்றும் பாரம்பரியமாக உள்ள சைவ குடும்பங்கள் காலங்காலமாக செய்து வருகின்றனர்..
இவையே நமது சைவ கலாச்சாரமாம்..
*இதைவிட்டுவிட்டு ஆங்கிலேயர்கள் கொண்டாடும் மெழுகுவர்த்தியை அனைத்து
கேக் வெட்டி
ஆங்கில பாடல்களை பாடி
மற்றவர்களுக்குஊட்டி விடும் பழக்கம் இல்லை நம் சைவ நெறியில்.*
*ஆகவே உலக அறிவில் மிதக்கும் இத்தகைய கலியுக சிவ அன்பர்களே இத்தகைய செயல்களை செய்யாமல் இருக்குமாறு வேண்டுகிறேன்..*
நன்றி.
சிவதில்லை ராமசாமி. சைவத்துக்கு உண்மையாக.
சிவாயநம