அருள்மிகு மலையாள மகாலட்சுமி கோவில் கேரள மாநிலம் ஆலப்புழை மாவட்டத்தில் இருக்கும் பள்ளிபுரம் என்கிற ஊரில் அமைந்துள்ளது. சுமார் 1000 ஆண்டுகள் பழமையான கோவிலாக இருக்கிறது இந்த மலையாள மகாலட்சுமி கோவில். இக்கோவிலின் பிரதான தெய்வமாக மகாலட்சுமி தாயார் இருக்கிறார். தாயாரை கடவில் மகாலட்சுமி என்றழைக்கின்றனர்.
கேரளாவில் மகாலட்சுமிக்கென்று அமைந்திருக்கும் தனி கோவில் இது தான். லட்சுமி தாயார் இங்கு கிழக்கு திசையை நோக்கி சூரிய நாராயணனை பார்த்தவாறு நின்றிருக்கிறாள். கோவில் சுற்று பிரகாரங்களில் கணபதி, ஐயப்பன், சிவன், கொடுங்காளி, ஷேத்திர பாலகர்கள் வீற்றிருக்கிறார்கள்.
சூரிய உதயத்தின் போது மகாலட்சுமி வந்திறங்கியதாக கருதப்படும் பகுதியில் இருக்கும் நீரை அருந்தி விட்டு, முகம், கை கால்களை கழுவிக்கொண்டு மகாலட்சுமியை நாராயணனுடன் தரிசித்தால் நீண்ட நாட்களாக திருமண தடை, தாமதங்கள் ஏற்பட்டவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு விரைவில் குழந்தை பேறு உண்டாகும்.
கோவில் முகவரி
அருள்மிகு மலையாள மகாலட்சுமி கோவில்
பள்ளிபுரம்
ஆலப்புழை மாவட்டம்
கேரளா – 688541