*விதை தூங்காது.*✍️✍️✍️✍️✍️✍️✍️✍️✍️
*என்னுடைய மனதைப் போட்டு குழப்பும் பிரச்சனை விரைவில் சரியாகிவிடும் என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிவிட்டு*
வேலையைப் பாருங்கள்.*
விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படப் போகும் அதிசயங்களுக்கு நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிக் கொண்டே இருந்தால் போதும்.
அது எப்படி சரி ஆகும், சரி ஆகும் வழிகளைப் பற்றியெல்லாம் நீங்கள் ஆராய வேண்டாம்.
நமக்கு ஒரு சில வழிகள் தான் தெரியும், ஆனால் பிரபஞ்சத்திற்கு ஆயிரம் வழிகள் இருக்கும். அது எப்படியும் சரி செய்து விடும்.
நம் வார்த்தைகள் மற்றும் எண்ணங்கள் பிரபஞ்சத்திற்கு கட்டளைகளாக அனுப்பப்பட்டு எல்லாவற்றையும் விரைவில் சரி செய்துவிடும்…
*நம்மைச் சுற்றி எதிராக நடப்பதைப் பற்றி கவலைப் படவேண்டாம்*.
நமக்கு எதிராக எத்தனை பேர் செயல்படுகிறார்கள் என்பதைப் பற்றி பொருட்படுத்த வேண்டாம்.
*பயம் மற்றும் குழப்பங்கள் வரும் போது பதட்டமில்லாமல் ஆழ்ந்த அமைதியாக இருக்கக் கற்று கொள்ளுங்கள்*.
நான் மிகுந்த நம்பிக்கையாக இருக்கிறேன், விரைவில் அதிசயம் நடக்கும், ஏற்படப் போகும் எல்லா அதிசயங்களுக்கும் நன்றி, பிரபஞ்சத்திற்கும் நன்றி என்று மட்டும் ஆழமாக மனதில் சொல்லிக் கொண்டே இருங்கள். நிறுத்தாமல் சொல்லிக் கொண்டே இருங்கள். (சத்தியமாக சக்தி வாய்ந்த செயல்முறை)
*நமது வார்த்தைகள், சந்தோஷமான மற்றும் நம்பிக்கையான உணர்வுகள் மற்றும் எண்ணங்கள் போதும் எல்லாவற்றையும் சரி செய்துவிடும்..*.
*நமது நேர்மறையான சக்தி இந்த பிரபஞ்சத்தைக் காட்டிலும் சக்தி வாய்ந்தது என்பதை மட்டும் உணருங்கள்*.
விதைத்தவன் தூங்கி விடுவான் விதை தூங்காது .
எண்ணியவன் தூங்கி விடுவான் எண்ணம் தூங்காது .
எண்ணம்போல் வாழ்க்கை
*எண்ணுவதெல்லாம் உயர்வுள்ளல். நற்பவி நற்பவி நற்பவி உள்முகபயணத்தில் உங்களின்நான்*
நற்பவி
நற்பவி என்று சொல்லுங்கள்- நல்லதை அடையுங்கள்
நற்பவி என்றால் மிக உயர்ந்த மந்திரம் ஆகும். இந்த மந்திரத்தை அருளியது காகபுஜண்ட மகரிஷி. பண்டைய நூல்களில் இந்த மந்திரம் பற்றி சொல்லப்பட்டுள்ளது என்னவென்றால் இது ஒரு மோகன மந்திரம் ஆகும் நற்பவி நற்பவி நற்பவி என்று சொல்லிக்கொண்டே இருக்க உங்கள் கஷ்டங்கள் மட்டுமல்லாது உலக மக்கள் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. நற்பவி என்றால் நல்லது உண்டாகட்டும் நல்லது நடக்கட்டும் என அர்த்தம் ஆகும்.
உங்களுக்கு நேரம் கிடைக்கும்போதெல்லாம் இந்த மந்திரத்தை சொன்னால் உங்கள் கஷ்டங்கள் அடியோடு விலகுவதோடு பணக்கஷ்டம், மனக்கஷ்டம் அனைத்தும் விலகி நிம்மதி பிறக்கும் என்பதாக சொல்லப்பட்டுள்ளது.
கஷ்டப்படும் நேரங்களில் இந்த நற்பவி மந்திரம் மிகச்சிறந்த அஸ்திரம் என சொல்லப்படுகிறது. நற்பவி ஜெபித்தும் அதை பலமுறை எழுதியும் கஷ்டங்களில் இருந்து விடுபட்டோர் ஏராளம்.
இந்த மோசமான காலகட்டங்களில் நற்பவி மந்திரம் ஜெபித்து நல்ல அதிர்வலைகளை உண்டாக்குவ்வோம்.வாழ்வில் வெற்றி பெறுவோம்.
இது நிர்விகல்பசமாதியில் இருந்து கிடைத்த ஒரு மோகன மந்திரம் இதை சப்தத்தோடு உச்சரிக்க சொந்த கஷ்டங்கள் மட்டும் இன்றி உலக மக்களின் கஷ்டங்களும் விலகும் என்பது நம்பிக்கை.