தற்பொழுது பலருக்கும் ஏழரை சனி மற்றும் அஷ்டம சனி நடைபெறும். இவர்கள் எல்லோரும் கொஞ்சம் கடினமான ஒரு வாழ்வை வாழ்ந்துக்கொண்டு இருக்கலாம். உங்களின் பிரச்சினைக்கு தீர்வு தரும்விதமாக ஒரு சில விஷயங்களை செய்தால் உடனடியாக பலன் கிடைக்கும்.
யாராவது பிச்சை என்று உங்களிடம் கேட்டு வந்தால் அதனை பயன்படுத்திக்கொண்டு அவர்க்கு பிச்சை போடுங்கள். ஒரு சில நேரத்தில் பிச்சை எடுத்து வரும் நபர் சனி ஈஸ்வரராக கூட இருக்கலாம். அதனால் அவர்க்கு உங்களால் முடிந்த பிச்சையை போட்டுவிடுங்கள்.
ஒரு சிலருக்கு மருத்துவசெலவு பிச்சிக்கொண்டு போகும். வாரத்தில் இரண்டு நாட்களுக்கு மருத்துவமனை என்று சென்று வந்துக்கொண்டு இருப்பீர்கள். நீங்கள் செய்யவேண்டியது உங்களின் ஊரில் உள்ள வறுமையில் உள்ள நோயாளிக்கு உங்களின் செலவில் வைத்தியம் பாருங்கள் அல்லது வைத்தியத்திற்க்கு பணம் கொடுங்கள்.
ஒரு சிலருக்கு ஏழரையில் ஜெயிலுக்கு செல்லவேண்டிய ஒரு சூழ்நிலை உருவாகும். பெரிய அரசியல்வாதிகள் எல்லாம் நேரம் சரியில்லை என்றால் திகார் சிறைக்கு சென்று அங்கு பரிமாறப்படும் உணவை வாங்கி சாப்பிட்டுவிட்டு வருவார்கள் என்று கேள்விப்பட்டு இருக்கிறேன். நீங்கள் திகார் ஜெயிலுக்கு எல்லாம் செல்லபோகபோறதில்லை. உங்களின் ஊரில் இருக்கும் சப் ஜெயிலில் ஏதாவது ஒரு ஏற்பாடு செய்து அந்த உணவை வேண்டுமானால் ஒரு முறை சாப்பிடுங்கள்.
தாழ்ந்தப்பட்ட சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு ஒரு உதவியை செய்யுங்கள். அது எப்படிப்பட்ட உதவியாக இருந்தாலும் செய்யலாம். அதுபோல ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யுங்கள். திருநள்ளாறு சென்று அங்குள்ள தீர்த்தத்தில் எண்ணெய் தேய்த்து குளித்துவிட்டு சனியையும் ஈஸ்வரனையும் தரிசனம் செய்துவிட்டு வாருங்கள்.