தீப பரிகாரம்
ஜலம் என்றால் தண்ணீர் என்று பொருள்படும். ஜல தீபம் என்பது தண்ணிரை கொண்டு ஏற்றக் கூடிய ஒரு தீபம் ஆகும். நீரினால் நெருப்பை கொண்டு விளக்கேற்றி வைப்பதால் பஞ்ச பூதங்களின் ஆற்றலும் இந்த தீபத்திற்கு இருக்கும். ஜல தீபம் குபேரனுக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். எனவே இது குபேர ஜல தீபம் என்றும் போற்றப்படுகிறது. இந்த விளைக்கை ஏற்றுவதால் இல்லத்தில் செல்வம் தங்கும். எதிர்மறை சக்திகள் அண்டாது. குடும்பத்தில் அமைதி நிலவும்.
ஒரு அழகிய தட்டை எடுத்து மலர்களால் அலங்கரித்து கொள்ளவும். அதன் மேல் கண்ணடியாலான சிறிய அளவிலான பவுல் அல்லது மட்பாண்டத்தாலான சிறிய பானையை வைத்து கொள்ளலாம். அதில் ஜலம் இரண்டு பங்கு ஊற்றி கொண்டு அதன் மேல் நல்லெண்ணை ஒரு பங்கு ஊற்றவும். நல்லெண்ணை இல்லையேல் நீங்கள் உபயோகிக்கும் பூஜைக்கு உகந்த எண்ணெயை ஊற்றி கொள்ளலாம்.
இப்போது எண்ணெய் பிரிந்து மேலே மிதக்கும். நீரும் எண்ணெயும் சேராது அல்லவா? அதன் மேல் பஞ்சு திரி இரண்டை ஒன்றாக திரித்து எண்ணெயில் தோய்த்து வைத்து கொள்ளவும். திரி மூழ்காமல் இருக்க வெற்றிலை வைக்கலாம். அந்த வெற்றிலையின் மேல் திரியை வைத்து பின்னர் தீபம் ஏற்றலாம். அல்லது ஜல தீபதிற்கு என்றே பிரத்யேகமாக தயாரிக்கப்படும் திரிகளை வாங்கி வைத்து கொண்டு அதிலும் ஏற்றலாம். திரி நீரில் மூழ்காமல் இருக்கவே இந்த வழி முறைகளை கையாள்கிறோம்.
இந்த தீபத்தை வியாழன் அன்று மாலை ஏற்றுவது சிறந்தது. குபேர பகவானுக்கு உகந்த கிழமை வியாழன் ஆகும். எனவே வியாழன் மாலை ஏற்றி விட்டு அதனை வெள்ளி, சனி வரை அணையாமல் மூன்று நாட்கள் தொடர்ந்து எரியும்படி பார்த்து கொள்ளவும். சனிக்கிழமை மாலை பூஜை முடிந்தவுடன் நீக்கி விடலாம். அந்த ஜோதியின் நிழல் இல்லத்தில் இருக்கும் எல்லா கெட்ட சக்திகளையும் ஒழித்து விடும். அனைத்து தேவதைகளின் அருளும் கிட்டும். நீரின்றி எதுவும் இல்லை. அத்தகைய நீரில் ஏற்றும் தீபமானது சிறப்பு வாய்ந்தது தான். மிகவும் எளிமையாக அனைவரும் பின்பற்றக் கூடிய சிறப்பு மிகு வழிமுறையும் தான்.
இவ்வாறு உங்களால் முடிந்த அளவிற்கு தொடர்ந்து செய்வதால் எண்ணற்ற பலன்கள் உங்கள் குடும்பத்திற்கு கிடைக்கப் பெரும். வீட்டில் இறையருள் முழுமையாக நிறைந்திருக்கும். அந்த ஜோதியை பார்ப்பதால் மனதில் ஒருவித சாந்தம் குடிகொள்ளும். மனம் ஒருநிலைபடும். மன இறுக்கம் தளர்ந்துவிடுவதை நீங்களே உணர்வீர்கள். குடும்பத்தில் எல்லா பிரச்சனைகளும் நீங்கி சுபீட்க்ஷம் உண்டாகும். லக்ஷ்மி குபேர பூஜை நீங்கள் செய்வதானால் அந்த பூஜையில் சிறப்பம்சமாக இந்த விளக்கை ஏற்றி வழிபடலாம்.
எந்த பூஜையையும் நாம் முழு மனதுடன் ஆத்மார்த்தமாக பக்தி சிரத்தையுடன் மேற்கொள்வதால் மட்டுமே அதன் முழு பலனை அனுபவிக்க முடியும். மனதில் நல்ல எண்ணங்கள் விதைத்து தன்னலம் கருதாமல் இல்லத்தில் மகிழ்ச்சி நிலவ வேண்டும். குடும்பம் நோய் நொடி இன்றி நலமுடன் இருக்க வேண்டும். மனித உயிர் ஒவ்வொன்றும் இறையருள் பெற்று சகல வளமும் பெற வேண்டும் என்று வேண்டிக்கொண்டு விளக்கேற்றுங்கள். வளம் பெறுங்கள்.
குபேர ஐலதீப திரி
Hi, i would like to buy this product – https://www.shop.sarvamangalam.info/product/குபேர-ஐலதீப-திரி-குடும்ப/
மனதால் கூட பாவம் செய்யக்கூடாது. பிறருக்கு தீங்கு செய்யவும் நினைக்கக்கூடாது என்று நம் முன்னோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். ஆனால் பாவங்கள் அதிகரித்து வரும் யுகமாக, இந்த கலியுகம் இருக்கிறது. அப்படி நாம் அறியாமல் செய்யும் பாவங்களுக்கு பரிகாரமாக, தீபங்களை ஏற்றி தினமும் வழிபாடு செய்ய ஆலயங்களை நோக்கியும் மக்கள் அடியெடுத்து வைக்கின்றனர்.
தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவங்கள் அகல, திருக்கார்த்திகைக்கு முந்திய நாளான பரணி நட்சத்திரமன்று (28.11.2020) அன்று மாலையில் இல்லம் எங்கும் விளக்கேற்றி, இறைவன் சன்னிதியிலும் விளக்கேற்றி வழிபட வேண்டும்.
அகல் விளக்குகளை வீட்டின் வாசல் படிகளிலும், உள்ளே உள்ள வாசல்களிலும் படிக்கு மூன்று வீதம் ஏற்றி வைப்பது மரபு. வீட்டில் நல்லெண்ணெயிலும், முருகன் முன்னிலையில் இலுப்பெண்ணையிலும் விளக்கேற்றி வழிபடுவது நல்லது. அப்பொழுதுதான் அஷ்டலட்சுமியும் உங்கள் வீட்டில் அடியெடுத்து வைக்கும். ஐஸ்வர்யம் பெருகும்.
1. ராகு தோஷம் – 21 தீபங்கள்
2. சனி தோஷம் – 9 தீபங்கள்
3. குரு தோஷம் – 33 தீபங்கள்
4. துர்க்கைக்கு – 9 தீபங்கள்
5. ஈஸ்வரனுக்கு – 11 தீபங்கள்
6. திருமண தோஷம் – 21 தீபங்கள்
7. புத்திர தோஷம் – 51 தீபங்கள்
8. சர்ப்ப தோஷம் – 48 தீபங்கள்
9. காலசர்ப்ப தோஷம்- 21 தீபங்கள்
10. களத்திர தோஷம் -108 தீபங்கள்
பைரவ வழிபாட்டின் போது பயன்படுத்தும் ஒவ்வொரு பழத்திற்கும், காய்கறிக்கும் மகத்தான சக்தியும், வெவ்வேறு பலன்களும் உண்டு.
1.தேங்காய் – குடும்ப சுபிட்சம், கணவன் மனைவி ஒற்றுமை உண் டாகும்.
2.துரைஞ்சி நாரத்தை ராஜகனி – நரம்பு வியாதி திருமணம் தடை நீங்கும்.
3.கொடை மிளகாய் – புற்று நோய், மாரடைப்பு போன்ற நோய்கள் தீரும்.
4.கொய்யா பழம்/ கத்திரிக்காய் – நீரழிவு நோய், இருதய நோய், கிட்னி நோய்கள் குணமாகும்.
5.பீட்ருட் – ரத்தம் சம்பந்தமான நோய்கள், எதிரிகள் நீங்கும். சகோதர ஒற்றுமை ஏற்படும்.
6.பாகற்காய் – சனி பாதிப்பு நீங்கு, கர்ம தோஷம் நீங்கும், வம்சாவழி தோஷம் நீங்கும்.
7.வில்வபழம்/ மாதுளம் – லட்சுமி கடாட்சம் உண்டாகும். வசீகரம் ஏற்படும்.
8.ஆரஞ்சு பழம் – தொழில் விருத்தி ஏற்படும்.
9.அன்னாசிப்பழம் – சத்ரு சம்ஹாரம் பலன் கிடைக்கும்.
10.பப்பாளி பழம் – திடீர் அதிர்ஷ்டம் கிடைக்கும்.
11.இளநீர் – ரத்தம் சம்பந்தமான நோய் விலகும்.
12.வெள்ளரிக்காய் – சுகமான வாழ்க்கைஅமையும்.
13.மூங்கில் தண்டில் மிளகு தீபம் ஏற்றி வழிபட்டால் கணவர்- மனைவி ஒற்றுமை ஏற்படும்.
விளக்கு ஏற்றுவது என்பது செல்வத்தை வாரி வழங்கும் மஹாலட்சுமி தாயின் உருவத்தை உணர்த்துவது. காலை, மாலை இரு நேரமும் விளக்கு ஏற்றப்படும். விளக்கு ஏற்றுவது என்பது அங்கு இறை சக்தியினை கொண்டு வருவதாக சொல்லப்படுகின்றது.
அதிலும் நெல்லிக்காயில் நெய் விளக்கு ஏற்றுவது அவ்வளவு நல்லதாம். ஏன் தெரியுமா? நெல்லிக்காயில் விளக்கு ஏற்றுவதால் “நம் துன்பங்கள் நீங்கி இழந்த அனைத்தும் மீண்டும் வரும்” என்பது ஜதீகம். எவ்வாறு நெல்லிக்காய் விளக்கு ஏற்றுவது. முதலில் காட்டு நெல்லிக்காயை வாங்கி மேற்புறமாக சற்று பள்ளமாக தோண்டி கொள்ளுங்கள்.
அதே போன்று கீழ்புறமும் சற்று தட்டையாக இருக்கும் அளவிற்கு வெட்டி எடுத்து விடுங்கள். பின்னர் காட்டன் திரி கொண்டு நெய்யில் நனைந்து, பின்னர் அதனை நெல்லிக்காயில் வைத்து விளக்கேற்றுங்கள். இவ்வாறு விசேஷ நாட்களில் இது போன்று விளக்கு ஏற்றினால், இழந்ததை மீண்டும் பெற முடியும் என்பது ஐதீகம்.
நம்மால் உணர முடியாத பல நுட்பமான தீய அதிர்வுகள் வீட்டில் நிறைந்திருந்தால் எந்நேரமும் காரணமின்றி சண்டை சச்சரவுகள், வாக்குவாதங்கள் ஏற்படும் என்று நமது முன்னோர்கள் அடிக்கடி நம்மிடம் கூறுவார்கள். ஆன்மீகப்படி இத்தகைய பிரச்சனைகள் நீங்கி குடும்ப ஒற்றுமையும், மகிழ்ச்சியும் ஏற்படுவதற்கான ஒரு பரிகார முறை ஒன்று உள்ளது. தற்போது இந்த பரிகார முறையை பற்றி இங்கு பார்ப்போம்.
தினமும் மாலை வேளைகளில் சிறிது மஞ்சள் எடுத்து, வீட்டு வாசல் படியின் இரண்டு புறத்திலும் இரண்டு சதுரங்களை வரைந்து கொள்ள வேண்டும்.
அந்த இரண்டு சதுரங்களிலும் ஒரு வேப்பிலையை வைக்க வேண்டும். வேப்பிலையின் நுனி கிழக்கு அல்லது வடக்கு திசையை பார்த்தவாறு இருப்பது நல்லது.
பிறகு அதன் மீது மண்ணால் செய்யப்பட்ட அகல் விளக்குகளை வைத்து, எண்ணெய் ஊற்றி, மஞ்சள் நிற திரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.
மேற்கண்ட முறையில் தினமும் மாலை வேளைகளில் தீபம் ஏற்றி வந்தால் அந்த வீட்டில் இருக்கின்ற எதிர்மறையான விஷயங்கள் அனைத்தும் விரைவிலேயே நேர்மறையான ஆற்றல்களாக மாறுவதை நாம் காணலாம்.
குடும்பத்தில் நீடித்து வந்த சண்டை சச்சரவுகள், மனஸ்தாபங்கள் போன்றவை நீங்கும்.
பிறருடன் விரோதம் ஏற்படுவது, எதிரிகளால் நமக்கு பாதிப்புகள் ஏற்படுவது போன்ற பிரச்சனைகள் நீங்கும்.
கணவன் மனைவி ஒற்றுமை அதிகரிக்கும். பிரிந்துவாழும் தம்பதியர்கள் இந்த பரிகாரம் செய்வதால் கூடிய விரைவில் ஒன்றிணைந்து வாழ ஆரம்பிப்பார்கள்.
வாஸ்து தோஷம் , முச்சந்தி வீடு , இடுகாட்டுக்கு அருகில் உள்ள வீடு , அல்லது ஒரு சிலருக்கு புதியதாக வீடு குடி போனதில் இருந்து எதுவுமே துலங்காமல் இருக்கும். எப்பவும் கெட்ட சம்பவங்கள் அல்லது சகுனங்கள் நடந்து கொண்டே இருக்கும் நல்ல விசயமே நடக்காது , எவ்வளவோ பரிகாரம் செய்தும் நீங்கியிருக்காது.
இப்படிபட்ட அமைப்பில் உள்ள வீடுகளில் எப்போதும் ஏதாவது குறையோ தோஷமோ இருந்து கொண்டே இருக்கும். இப்படிபட்ட தோஷங்கள், குறைகள் நீங்க வீட்டின் நான்கு மூலையிலும் ஒரு விளக்கு என நான்கு விளக்கு பைரவரை நினைத்து கொண்டு 90 நாட்களுக்கு விளக்கு ஏற்ற வேண்டும் .
90 நாள் என்பது ஒரு கணக்கு தான் நமக்கு இப்போ ஓரளவு பரவாயில்லை பிரச்னை இல்லை அப்படின்னு நாம் உணரும் வரை விளக்கு போட்டு வரலாம். வாழ்நாள் முழுமையும் கூட விளக்கு போடலாம்.
ஒருவேளை வீட்டுக்கு காம்பவுண்ட் சுவற்றுக்குள் விளக்கு போட்டால் யாரவது எதாவது நினைப்பார்கள் என்று நினைத்தால், வீட்டுக்கு உள்ளேயே நான்கு மூலைக்கும் விளக்கு ஏற்றலாம் , விளக்கு எரிந்து முடியும் வரை கவனமாக இருக்க வேண்டும்.
விளக்கு ஏற்றும் போது பைரவர் கவசம் / பைரவர் காயத்ரி / பைரவர் ஸ்லோகம் / ஸ்துதி / பைரவர் போற்றி என ஏதாவது ஒன்றை சொல்லிக்கொண்டே விளக்கு ஏற்றலாம்.
இவ்வழிபாட்டினை ஆரம்பிக்கும் முன் பைரவர் கோவிலுக்கு சென்று அங்கு விநாயகருக்கு ஒரு விளக்கு ஏற்றி பிறகு பைரவருக்கு ஒரு விளக்கேற்றி அனுமதியும் ஆசிர்வாதமும் பெற்று பிறகு வீட்டிற்கு வந்து விநாயகரை வணங்கி அவருக்கும் ஒரு விளக்கேற்றிய பிறகே பைரவரை நினைத்து விளக்கு போட வேண்டும்.
இந்த வழிபாட்டினை செய்ய ஆரம்பிக்க மிகவும் உகந்த நாள் தேய்பிறை அஷ்டமி , வாஸ்து நாள் ,பௌர்ணமி தினங்களாகும்.
ஒருவரின் ஜென்ம நட்சத்திரம் எந்த அளவிற்கு பிரகாசமாக இருக்கிறதோ, அந்த அளவே அவரது வாழ்க்கை பிரகாசமும் இருக்கும். எனவே, தங்களது ஜென்ம நட்சத்திரம் வரும் நாளில் ஒரு தீபமாவது ஏற்றி இறைவனை வழிபட வேண்டும்.
இதனால் எவ்வளவு பெரிய திருஷ்டியும் நிவர்த்தியாகி அவர்களது நட்சத்திரம் பிரகாசமாகி வாழ்க்கையும் பிரகாசமாக அமையும். வீடுகளில் ஏற்படுகின்ற தீபங்கள் இருளை போக்குவதோடு மட்டுமல்லாமல் இடர்பாடுகளை தருகின்ற தீவினைகளையும், தீயசக்திகளையும் பஸ்மம் செய்கிறது. ஆலயங்களில், இல்லங்களில், அலுவலகங்களில் தீபங்களை ஏற்றி ஒளிமயமான வாழ்க்கையையும், பலவித திருஷ்டி தோஷங்களின் நிவர்த்திகளையும் பெறலாம்.
ஒரு வீட்டில் எந்த அளவில் அதிக எண்ணிக்கையிலான தீபங்கள், எவ்வளவு நேரம் ஏற்றி ஒளிர செய்யப்படுகிறதோ அந்த அளவிற்கு திருஷ்டிகள் விலகி நன்மைகள் உண்டாகும். தீப ஜோதி சுடர்கள் எத்தகைய திருஷ்டி தோஷ கதிர்களையும் இழுத்து பஸ்மம் செய்கிறது. தீபங்களின் சுடர்களை உற்றுநோக்கி குறைந்தது ஒரு நாளைக்கு 5 நிமிடங்களாவது தொடர்ந்து தரிசிக்க வேண்டும்.
இவ்வாறு செய்வதனால் நம்மில் ஏற்பட்டுள்ள பலவித திருஷ்டி தோஷங்கள் கழிக்கப்படுவதோடு மட்டுமல்லாமல் மனதின் மாசுகள் பஸ்மம் செய்யப்படுகின்றன. மேலும் மனதின் புத்திகூர்மை அதிகரிக்கிறது. முகத்தில் தேஜஸ் உண்டாகிறது. எத்தகைய திருஷ்டி தோஷங்களுக்கும் சரியான, முறையான பலமான பரிகாரம் தீப ஜோதி வழிபாடுதான்.
கல்விக்கும், தொழிலுக்கும், அதிபதியாக இருக்கும் புதன் பகவானுக்கு, நாகப்பட்டினம் மாவட்டம் திருவெண்காடு ஸ்வேதாரண்யேஸ்வரர் திருக்கோவிலில் தனி ஆலயம் உண்டு. இந்தக் கோவிலில் இருக்கும் ருத்ர பாதத்தினை விரதம் இருந்து வழிபட்டால் 21 தலைமுறையினர் செய்த பாவத்தை போக்கிக் கொள்ளலாம் என்று சொல்கிறது சாஸ்திரம்.
மனிதனாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும் புதன் திசை என்பது 17 ஆண்டுகள் வரும். இதனால்தான் திருவெண்காட்டில் இருக்கும் புதன் பகவானுக்கு, 17 அகல் தீபங்கள் ஏற்றி வைத்து வழிபட வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. இந்த முறைப்படி விரதம் இருந்து புதன் பகவானுக்கு இத்திருத்தலத்தில் தீபமேற்றி வழிபட்ட பின்பு, அடுத்து வரும் கால கட்டங்களில் உங்களுக்கு நடக்கப்போகும் புதன் திசையானது அதிர்ஷ்டத்தை ஏற்படுத்தி தரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
தொழிலில் சிறந்து விளங்க வேண்டும் என்றாலும், கல்வியில் நல்ல முன்னேற்றம் அடைய வேண்டும் என்றாலும், கடன் தொல்லை, தீராத நோய் தீர, குழந்தை வரம் பெற, திருமண யோகம் வர, தீராத பாவங்கள் தீர இத்திருத்தலத்தில் இருக்கும் புதன் பகவானுக்கு 17 தீபங்களை ஏற்றினாலே போதும். எதிர்பாராத அதிர்ஷ்டம் உங்களை தேடி வரும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை.
சிலபேருக்கு இத்திருத்தலத்திற்கு சென்று புதன் பகவானுக்கு தீபம் ஏற்றினால் யோகம் வரும் என்று தெரிந்திருக்கும். இதைத் தெரிந்து, இந்த கோவிலுக்கு செல்பவர்கள், நேராக புதன் பகவானை தரிசனம் செய்ய சென்று விடுவார்கள். ஆனால், இது மிகப்பெரிய தவறு. முதலில் விநாயகப் பெருமானை வழிபட்டுவிட்டு, அதன் பின்பு மூலவரையும் பின்பு அம்பாள், அகோரமூர்த்தி, இறுதியாகத் தான் புதன் பகவானை வழிபட்டு 17 தீபங்கள் ஏற்றி மனதார பிரார்த்தனை செய்து கொண்டு செல்ல வேண்டும்.