திருச்சிற்றம்பலம்
தினம் ஒரு திருமுறை!!,,
எங்கும் சிவம்,எதிலும் சிவம்!!,,
தொடர்:-4வது மாதம்,26.04.2022!!,,
8ம் திருமுறை!!..
பாடல்:-
தனித்துணை நீ நிற்க யான தருக்கித்தலையால் நடந்த!!,,
வினைத்துணையேனை விடுதி கண்டாய் வினையேனுடைய!!,,
மனத்துணையே என் தன் வாழ்முகவே எனக்கு எய்ப்பில் வைப்பே!!,,
தினைத்துணை யேனும் பொறேன் துயர் ஆக்கையின் திண்வலையே!!..
பொருள்:-
எனது உயிருக்கு உயிராய் இருக்கும் கடவுளே!!
தளர்வுற்ற காலத்தில் உதவும் கருணைக்கடலே!!
எல்லாவற்றையும் நடத்துபவன் நீ என்பதை மறந்து யாவும் என்னால் நடக்கின்றன என்று வாழ்ந்த என்னை விட்டுவிடாதே,
நீ இன்றி யார் துணை எனக்கு,
துன்பத்திற்கு இருப்பிடமாகிய இவ்வுலக வாழ்க்கையை விரும்பகில்லேன் யான்,
உன் அருளிலேயே இருக்கும் அருளைப்புரிவாய்,
தேவரீர் பெருங்கருணைக்கு வந்தனம்!!
,வந்தனம்!!
நாணயம் உள்ளவனிடம் நல்லொழுக்கம் காணப்படும்!!..
திருச்சிற்றம்பலம்
நாளைத்தொடரும்,
என்றும் இறைப்பணியில்
Category: