“தாயா தாராமா”
என வரும் போது என்ன முடிவெடுப்பீர்கள்?
அப்படி வரக்கூடாது.
ஒருவேளை வந்தால்?
தாரம் தான்.
அம்மா எனக்கு சொந்தமல்ல.
அம்மா அப்பாவுக்கு சொந்தம்.
இப்ப கூட, அம்மா அப்பாவை விட்டுட்டு என்கூட வந்துவிடவில்லையே,
ஏன்?
அவர் கணவர் அவருக்கு முக்கியம்.
அதே போல்,
என் மனைவி எனக்கு முக்கியம்.
நான் அழைத்தால் அவள் எங்கும் வருவாள்.
அம்மாவுக்கு நான் செய்ய வேண்டிய கடமை அவர் கடைசி காலத்திலே கவனித்து கொள்வது.
அதை செய்வேன்.
ஆனால் நான் அவருக்கு சொந்தமானவன் அல்ல.
என் மனைவிக்கு என்மேல் உள்ள உரிமையை பாதிக்காதவரை, அம்மாவுக்கு என் மேல் உரிமை உண்டு.
அவருக்கு நான் செய்யவேண்டியது கடமை.
அம்மட்டே.
நான் இல்லைன்னாலும் அவருக்கு ஒரு மகன் உண்டு, மகள் உண்டு.
ஆனால் மனைவிக்கு அப்படி அல்ல.
அவளுக்கு சகலமும் நான்தான்.
ஓரோர் உறவும் ஓரோர் வயதில் முக்கியத்துவம் பெறும்.
சிறுவயதில் அம்மா முக்கியம். கல்யாணம் ஆனபின்னும் அம்மா முந்தானையை பிடித்துக்கொண்டு ஒரு மகன் நடந்தால் அவன் அம்மாவின் வளர்ப்பு முழுமையாக இல்லை என்று பொருள்.
சமயம் வந்ததும் பால் கொடுப்பதை நிறுத்துவது போல சமயம் வந்ததும் (மனைவி வந்ததும்) சிறிது விலகவும் அம்மாவுக்கு தெரிய வேண்டும், மகன் விலகாவிட்டால் விலக்கி விடவும் தெரிய வேண்டும்.
மகனுக்கு அவன் கடமையை சொல்லிக்கொடுப்பவள் தான் உண்மையான முதிர்ந்த அறிவுள்ள தாய்.
தன் சுயநலத்துக்காக மனைவியா நானா என்று முடிவெடு என்று சொல்லும் தாய் நல்ல தாய் அல்ல.
மனைவிக்கு கணவன் சொந்தம் என்று ஏன் புரிய மாட்டேன் என்கிறது?
அப்புறம் எதுக்கு கல்யாணம்பண்ணி வச்சீங்க?
சீதனம் கொண்டு பொண்ணுக்கு கல்யாணம் பண்ணிடவா?
இல்லை அடுப்படியில் ஒரு எடுபிடி வேண்டும் என்றா?
மகன் வாழ்க்கையை துவக்கவேண்டும் என்று தானே கல்யாணம் செஞ்சீங்க?
அப்புறம் தாயா தாரமான்னு கேட்டா என்ன பைத்தியக்காரத் தனமான கேள்வி இது?
இந்தியாவில்/subcontinentடில் மட்டும் தான், தாயின் மீதுள்ள அன்பை மகன் நிரூபிக்க மனைவியின் உரிமைகளை விட்டுதர வேண்டும் என்று நினைக்கும் மனோபாவம் உள்ளது.
இது தப்பு.
இருவருக்கும் என் மேல் உரிமை இருந்தாலும்,
மனைவிக்கு தான் நான் சொந்தம்.
தாய் என்னிடம் இருந்து கடைசி காலத்தில் பராமரிப்பை எதிர்பார்க்கலாம்.
அவ்வளவே.
அந்த கடமையை பங்குபோட்டுக் கொள்ள 3 பேர் இருக்கிறோம்.
என் மனைவிக்கு நான் ஒருத்தன் தான் கணவன்.
அதனால்,
என் ஓட்டு மனைவிக்கே.
Category: