கோரக்கர் சித்தரின் ஜீவ சமாதிகள்
நாட்டில் பல்வேறு ஜீவசமாதிகள் இருந்தாலும் முதுபெரும் ஞானிகளின் ஜீவசமாதிகளுக்கு மட்டும் தனிப்பெரும் மகிமை உண்டு .
அதன்படி மகான் இராமகிருஷ்ண பரமஹம்சரின் உபதேசத்தின்படி கடவுளின் அனுக்கிரகத்தை பெற வேண்டுமானால் மகான்களின் ஜீவ சமாதியில் மூன்று நாட்கள் அதாவது ( 72 மணி நேரங்கள் ) தங்கி மகான்களின் மந்திரங்களை தொடர்ந்து படித்துவந்தால் மாகனின் அருள் உடன் கிடைக்கும் என்று கூறுகின்றார் .
மேலும்
குருவாரம் ,பௌர்ணமி,அமாவாசை போன்ற நாட்களில் மகான்களின் ஜீவ சமாதிகளில் அற்புதமான சக்தி கிடைக்கும்.அந்த நாட்களில் சென்று வழிபடுவது நல்லது .
ஆகவே சமாதிக்குள்ளிருந்து சுக்குமதேகத்துடன் மகான்கள் வெளிவருவது உண்மை.அவர்கள் நம்முடன் பேசுவதும் உண்மை அவர்கள் மீண்டும் சமாதிக்குள் சென்று விடுவதும் உண்மை.
எனவே சித்தர்கள் மண்ணுக்குள் சில காலம் தங்கியிருந்து வெளியே வந்தால் அதீதமான சக்தி ஏற்படுகிறதென்று அறிகிறோம்.
எனவே மகான்கள் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் சமாதிநிலை அடைத்துள்ளார்கள்.மேலும் அட்டாங்க சித்தியோகம் அறிந்த சித்தர்கள் அதிக பட்சமாக 64 இடங்களில் சமாதி அடையமுடியும் என்று தெரிகிறது.
எனவே மகான் கோரக்கர் மண்ணில் இருந்து எவ்வித பாதிப்புமின்றி ஞானியாய் சதுரகிரியில் தனது குகையில் வாழ்ந்து வருகிறார்.
மேலும் பக்தர்களின் மனப் பக்குவத்திற்கேற்ப இன்றும் அவர் காட்சி தருகிறார் .
இதனையே காலங்கிநாதரும் மற்றும் அகத்தியரும் தனது பாடலில் மகான் கோரக்கர் உயிருடன் தனது குகையில் இருப்பதாக தெரிவித்துள்ளார்கள்.
முகாசபரூர் மகான் ஸ்ரீ கோரக்கர் ஜீவ சமாதி
( விருத்தாசலம் வட்டம்,கடலூர் மாவட்டம்,தமிழ்நாடு )
ஆகிட இந்நூல்களைச் சித்தன் யானும்
அறிந்த மட்டும் காவேரியின் நதி பாங்குற்று
மோகிதமாய்ச் சோழநாட்டின் கொள்ளிடப்பால்
முத்தர நதிதீரம்( மணிமுத்தாறு ) பரூர்பட்டி சிற்றூர்
ஏகிநிறை சமாதியுற்றேன். ( தனிதொகுப்புநூல் 4 )
என்ற பாடலுக்கு ஏற்ப மகான் கோரக்கர் சித்தர் முகாசபருரில் ஹரிக்கும் சிவனுக்கும் இடையே அமர்ந்தநிலை சமாதியாகியுள்ளார்.
கடந்த காலங்களில் மனிதன் நடமாட்டமற்ற முள் நிறைந்த காடாக இருந்த இடமாகும்.
அப்போது மகான் அங்கிருந்த ஒரு பெரிய மரத்தினடியில் தியானம் செய்யும்போது சிவனும் உமையால் ஆகியோர் அவரது தியான நிலையை பாராட்டி சிரஞ்சீவி வரம் கொடுத்து மறைந்தனர்.
பின்னர் மகான் இங்கு அமர்ந்த நிலை சமாதியாகயுள்ளார் எனவே கோரக்கரின் அருள் நிறைந்த பூரண பொக்கிஷம் பரூர் மண்ணில் உள்ளது என்பது தெரியவந்துள்ளது.
மகான் கோரக்கருக்கு இடதுபுறம் காசி விஸ்வநாதர் மற்றும் அன்னபூரணி ( நின்ற நிலையில் ) ஆலயங்கள் உள்ளது.
குருவாரத்தில் ( வியாழக்கிழமை ) வழிபாடு செய்து வருகிறார்கள்.பிரதி பௌர்ணமி தோறும் சிறப்பு பூஜைகள் மற்றும் அன்னதானமும் வழங்கபடுகிறது.
ஆண்டுதோறும் கார்த்திகை மாதம் ஆயில்யை நட்சத்திரத்தில் குருபூஜை நடத்தப்படுகிறது.எனவே நீங்களும் ஒரு முறை பரூரிற்கு வந்து மகான் அருள் பெற வேண்டுகிறோம்.
#குருஅருள் ஜீவசமாதி குருபூஜை