*சிவ சிவ!🙏*
*ஓம் அகத்தீசாய நம!🙏*
- *🌸”அனைவரும் நிச்சயம் செய்ய வேண்டியது”* என அகத்திய மாமுனிவர் (குருநாதர்) உத்தரவாக அளித்த ஜீவநாடி வாக்கு :
1. பல வகையான கீரைகளை எடுத்துக் காெள்ள வேண்டும்.
2. வெள்ளை கரிசலாங்கண்ணி, மஞ்சள் கரசலாங்கண்ணி, பாென்னாங்கண்ணி, முருங்கை இலை, முடக்கத்தான் மூலிகை, பச்சையான நெல்லிக்கனி, பச்சை காய்கறிகள், இவற்றையெல்லாம் உண்டு வர நன்று.
சாெல்லிவிட்டேன்! இதை நிச்சயம் நீங்கள் செய்து வர வேண்டும்.
3. ஓரிதழ் தாமரை இலைகளை உண்டு வர, உடல் இரும்பு பாேல் பலம் பெருகும். முழுபலன் பச்சை இலைகளுக்கே உண்டு.
4. அதிகாலையிலும், மாலை வேளைகளிலும் சூரிய ஔியில் உடம்பை வைத்திருக்க வேண்டும்.
5. நிமிர்ந்து நிற்க வேண்டும்.
6. சில சில வழிகளில் உடற்பயிற்சியை மேற்காெள்ள வேண்டும்.
7. அனுதினமும் பூமி சர்க்கரை கிழங்கை உண்டு வருதல் இன்னும் பலமப்பா.
8. பூமியில் ஒளிந்துள்ள பொருட்களை அதாவது மண்ணிற்கு உள்ளே விளையும் கிழங்கு வகைகளை உட்கொள்ள இன்னும் சக்திகளப்பா.
இவ்வாறு அகத்திய மாமுனிவர் (குருநாதர்) ஜீவநாடியில் உரைத்துள்ளார்.
*🙏-சுபம்-🙏*
*வாக்கு உரைத்த இடம் :* சூரத், குஜராத் மாநிலம்.