….. சித்தர்களின் மந்திரத்தை எவர் ஒருவர் ஜெபிக்கிறாரோ அவருக்கு சித்தர்களின் பரிபூரணம் அருள் கிடைக்கும். அந்த வகையில் 18 சித்தர்கள் மந்திரங்கள்அகத்தியர் மூல மந்திரம் :-ஓம் ஸ்ரீம் க்ரீம் ஸ்ரீ அகத்திய சித்த சுவாமியே போற்றி. போகர் மூல மந்திரம் :-ஓம் ஆம் ஊம் ஸ்ரீ மகாபோகர் சித்த சுவாமியே போற்றி. திருமூலர் மூல மந்திரம் :-ஓம் ஸ்ரீம் கெம் ஸ்ரீ மூலநாத சித்த சுவாமியே போற்றி. இடைக்காடர் மூல மந்திரம் :-ஓம் ஸ்ரீம் ருணம் ஸ்ரீ இடைக்காட்டு சித்த சுவாமியே போற்றி. கருவூரார் மூல மந்திரம் :-ஓம் ஸ்ரீம் வம் லம் ஸ்ரீ கருவூர் சித்த சுவாமியே போற்றி. கோரக்கர் மூல மந்திரம் :-ஓம் ஸ்ரீம் க்லம் ஸ்ரீ கோரக்க சித்த சுவாமியே போற்றி. குதம்பை சித்தர் மூல மந்திரம் :-ஓம் ஸ்ரீம் சம் ஸ்ரீ குதம்பைச் சித்த சுவாமியே போற்றி. பாம்பாட்டி சித்தர் மூல மந்திரம் :-ஓம் ஸ்ரீம் வசி ஸ்ரீ பாம்பாட்டி சித்த சுவாமியே போற்றி. சட்டைமுனி மூல மந்திரம் :-ஓம் ஸ்ரீம் சம் வம் சட்டைமுனி சுவாமியே போற்றி. சிவவாக்கியர் மூல மந்திரம் :-ஓம் ஸ்ரீம் லம் ஸ்ரீ சிவவாக்கிய சித்த சுவாமியே போற்றி. சுந்தரானந்தர் மூல மந்திரம் :-ஓம் ஸ்ரீம் ஆம் ஊம் ஸ்ரீ சுந்தரானந்த சித்த சுவாமியே போற்றி. கொங்கணர் மூல மந்திரம் :-ஓம் ஸ்ரீம் நசீம் ஸ்ரீ கொங்கண சித்த சுவாமியே போற்றி. வான்மீகர் மந்திரம் :-ஓம் வான்மீகர் திருவடிகள் போற்றி. கமலமுனி மந்திரம் :-ஓம் கமலமுனி திருவடிகள் போற்றி. மச்சமுனி மந்திரம் :-ஓம் மச்சமுனி திருவடிகள் போற்றி. பதஞ்சலி மந்திரம் :-ஓம் பதஞ்சலி முனிவர் திருவடிகள் போற்றி. இராமத்தேவர் மந்திரம் :-ஓம் இராமத்தேவர் திருவடிகள் போற்றி. தன்வந்த்ரி மந்திரம் :-ஓம் தன்வந்த்ரி திருவடிகள் போற்றி. நன்றி..
சித்தர்கள் வரலாறு
மதுரையை அபிஷேக பாண்டியன் என்ற மன்னன் ஆட்சி செய்து கொண்டிருந்த காலகட்டம் அது. அப்போது சோமசுந்தர கடவுள், சித்தரின் வடிவம் எடுத்து மதுரை மாநகர் முழுவதும் வலம் வந்தார். அந்த நேரத்தில் அவர் பல அதிசயங்களையும் நிகழ்த்தினார். கிழவனை குமரன் ஆக்கினார். ஆணை பெண்ணாக மாற்றினார். ஊமையை பேச வைத்தார். ஊசியை நிறுத்தி அதன் மேல் தன்னுடைய பெருவிரலை மட்டும் ஊன்றி நின்று நடனம் ஆடினார்.
இப்படி பல சித்து வேலைகளைச் செய்து மக்களை ஈர்த்தார். இந்தச் செய்தி மன்னனின் காதுக்கும் சென்றது. மன்னன், “அந்த சித்து விளையாட்டுக்காரரை, அரண்மனைக்கு அழைத்து வாருங்கள்” என்று உத்தரவிட்டான்.
ஆனால் சித்தரை சிறைபிடிக்கச் சென்றவர்கள், அவரது சித்து விளையாட்டில் லயத்து போய் அங்கேயே நின்று விட்டனர். இதை அறிந்ததும் மன்னனே தன்னுடைய பரிவாரங்களுடன் சித்தரைத் தேடி வந்தான். இதுபற்றி அறிந்ததும் சித்தர், மீனாட்சி அம்மன் ஆலயத்தின் வாயு மூலையில் அமர்ந்து யோக தியானத்தில் ஆழ்ந்தார். (இந்த இடம் சுந்தரேஸ்வரர் சன்னிதியின் சுற்றுப்பாதையில் துர்க்கை சன்னிதிக்கு அருகே உள்ளது).
மன்னன் அங்கேயும் வந்துவிட்டான். மன்னனோடு வந்த பாதுகாவலர்கள், சித்தரின் யோகத்தை கலைக்க முற்பட்டு, கையை ஓங்கினர். ஓங்கிய நிலையிலேயே அவர்கள் கைகள் நிலைபெற்று விட்டன. இதனால் மன்னன் அதிர்ந்து போனான்.
பின்னர் சித்தரிடம் பணிவாக பேசினான். “ஐயா, தாங்கள் இப்படி அமர்ந்து கொண்டால், உங்களின் தேவை என்ன என்பதை நான் எப்படி அறிவது? மேலும் நீங்கள் சித்தர்தான் என்பதை நான் எப்படி தெரிந்து கொள்வது?” என்றான்.
கண் விழித்த சித்தர், “மன்னா.. நான்தான் ஆதியும் அந்தமும், நான் எங்கும் சஞ்சரிப்பவன், தற்போது இங்குள்ள மக்களுக்கு சித்து விளையாட்டு காட்டி, அவர்களுக்கு தேவையான வரத்தை அளித்து வருகிறேன். என்பெயர் ‘எல்லாம் வல்ல சித்தர்’ என்பதாகும்” என்று கூறினார்.
அதன்பின்னும் சித்தர் மேல் நம்பிக்கையில்லாத மன்னன், “சித்தரே, தாங்கள் எல்லாம் வல்ல சித்தர் என்றால், இந்தக் கரும்பை இங்குள்ள கல் யானையை தின்னச் செய்யுங்கள்” என்று கூறி கரும்பை நீட்டினான்.
சித்தரும் அமைதியாக அருகில் இருந்த கல் யானையைப் பார்க்க, அது உயிர்ப்பெற்று, மன்னனின் கையில் இருந்த கரும்பை வாங்கித் தின்றது. உண்மையை உணர்ந்த மன்னன், அவரை அங்கேயே தங்கியிருக்கும்படி வேண்டினான். மேலும் தனக்கு குழந்தை பாக்கியம் தந்தருள வேண்டும் என்றும் கேட்டான். எல்லாம் வல்ல சித்தரின் அருளால், மன்னனுக்கு ஆண் குழந்தை பிறந்தது.
புராணங்கள் சொல்லுவதைபோல் சிவன் பார்வதி திருமணத்தில் புரோகிதம் செய்த பிரம்மனின் சுக்கிலம் (விந்து ) கும்ப கலசத்தில் விழ அதிலிருந்து இருந்து பிறந்தவரா?
உண்மையில் சிவன் என்ற ஆதி சித்தர் வாழ்த்த களத்தில் அகத்தியர் வாழ்ந்தாரா.?
அகத்தியர் காலமும் சிவன் காலமும் ஒன்றா?
அகத்தியர் என்றால் என்ன அர்த்தம் என்பதை போன்ற பல கேள்விகளுக்கு விடை தேடும் பதிவு இது.
ஆரியர்களை பற்றி முந்திய ஒரு பதிவில் பேசும் போது
காரணமே புரியாமல் கதறி கண்ணீர் விடும் தாற்குறிகளுக்கு மேலும் இந்த பதிவு சமர்ப்பணம்.
குறிப்பாக வடஇந்திய ஆரிய பிராமணர்கள் வேறு
தென்னிந்திய பார்ப்பனர்கள் வேறு.
தென்னிந்திய பார்ப்பனர்களுக்கு சாதி வெறி இருக்காது,
அவர்களிடம் வேற்றுமையும் அவ்வளவுவாக இருக்காது.
ஆனால் வட இந்திய பிராமணர்கள் இவர்களிடமிருந்து முற்றிலும் வேறுபட்டவர்கள் என்பதை ஆணித்தரமாக சொல்லுவேன்.
அகத்தியர் என்பவர் குடகில் பிறந்தவர் அதனால் அவருக்கு குட முனி என்றும் குள்ளமாக உருவம் கொண்டதால் குள்ள முனி என்றும் அழைப்பார்கள்.
குள்ளமானவர் சரி
சிலர் அவரின் வரலாற்றை திரித்து குடகுநாட்டை சேர்ந்தவர் என்பதை மறைத்து ஒரு மண் குடத்தில் பிறந்தார் என்று கதை கூறிவிட்டார்கள்
அது எப்படி குடத்தில் இருந்து ஒரு மனிதன் பிறக்க முடியும்?
அதுவும் சிவன் பார்வதி திருமணத்தின் போது
அக்கினி குண்டத்தை சிவன் பார்வதி சுற்றி வரும்போது
பார்வதி தனது சேலையை மண்ணில் புரலாதவாறு ஒரு கையால் தூக்கி பிடித்துக்கொண்டு சுற்றி வரும்போது பார்வதியின் தொடை பகுதி பிரம்மனின் கண்ணில் பட
அங்கே பிரம்மன் மோகிக்க
அவரின் இந்திரியம் பீச்சி அடித்து எதிரில் இருந்த கும்ப கலசத்தில் விழ அதிலிருந்து உடனே பிறந்தவர் தான் அகத்தியர் என்று மனுநூல் குறிப்பு கூறுகின்றது
ஆனால் இன்னொரு புராண கதையில்
ஒரு முறை (நெல்லை மாவட்டம்) பொதிகைமலையில் குற்றாலத்தை அகத்தியர் அடைந்தார்.
அங்கு அவரை சுந்தரானந்தர், யூகிமுனி, கொங்கணவர் ஆகியோர் அன்புடன் மனம் மகிழ வரவேற்று சிறப்பித்தனர்.
அப்போது, அவர்கள் தங்களுக்கு, சிவன், பார்வதியின் திருமணத்தை காண வேண்டும் என்ற ஆசையை அகத்தியரிடம் தெரிவிக்க இதைக் கேட்டு அகத்தியர் சித்தர்கள் ரிஷிகள் யோகிகள் என அனைவரையும் சிவ பெருமானின் திருமணத்தை காண செய்தார்.
சிவபெருமானின் திருமணத்தினை காண வந்த முப்பத்து முக்கோடி தேவர்கள் அனைவரும் வடதிசைக்கு வந்தமையால், தென்திசை மலைபோல் மேலோங்கி எழுந்துவிட்டது இதனால் ஏற்பட்ட ஏற்ற தாழ்வுகளை சரி செய்ய அகத்தியர் தெற்கு பகுதியான தமிழம் வந்து நின்று அதை சமன் செய்ததாகவும், சிவசக்தி திருமணத்தினை தமிழகத்திலிருந்து கண்டவராகவும், தமிழை சிவபெருமானிடமிருந்து கற்றவராகவும் போற்றப்படுகிறார்.
நன்றாக கவனியுங்கள்
அவர்கள் புளுகு மூட்டஅவிழ்க்கப்படுவதை.
சிவன் பார்வதி திருமணத்தின் போது தான் பிரம்மனின் சுக்கிலத்தில் இருந்து வந்தார் என்று ஒரு புராண புளுகும்,
அதே சிவன் பார்வதி திருமணத்தை காண வேண்டுமென
சுந்தரனாரும், யோகமுனியும், கொங்கணருக்கு வேண்டியதாகவும்
அவர்களின் வேண்டுகோளுக்கிணங்கி அகத்தியர் ஒப்புக்கொண்டு முப்பது முக்கோடி தேவர்களை அழைத்ததால்
பூமியின் வட திசையில் பாரம் கூடியதாம் தென்திசை மேலே எழும்பி நின்றதாம் அதை சரி செய்ய அகத்தியர் தென் திசை நோக்கி வந்து பூமியின் ஏற்ற தாழ்வுகளை சமன் படுத்திவிட்டு
தமிழகத்தில் இருந்த படியே வடக்கே நடந்த சிவன்-பார்வதி திருமணத்தை தனது ஞான திருஷ்டியால் கண்டதாக சொல்லப்படுகிறது.
எவ்வளவு பெரிய பொய்?
அகத்தியர் பொதிகை மலைக்கு வந்த போது வட திசை எப்படி இருந்ததோ? இது யோசிக்க வேண்டிய இடம் தான்,
ஒருவேளை பூமி அகத்தியர் காலத்தில் தராசு போல இருந்திருக்கும் போல.. பொய்யா இருந்தாலும் அதுல ஒரு நியாம் வேண்டாமா sir?
இதெல்லாம் ஏன்டா வெளியே சொல்ற பெரியாரிஸ்ட், பாவாடை, துலுக்க பயலே இப்படி ஏதாவது ஒன்றை சொல்லி என்னை திட்டினாலும் ஆச்சரியம் ஒன்றுமில்ல
சரி நாம வரலாற்றை தோண்டுவோம் வாங்க
அகத்தியர் என்பதற்கு என்ன பொருள்.? அகம்- என்பது மனம் என்ற பொருள் தரும்
தீ- என்பது வெளிச்சம் என்ற பொருள் தருகிறது
அகம் +தீ – அகம்தீ
அகதீ – அகத்தி என்றானது
அதாவது
அகத்தை அடக்கியவர், அகத்தீயை அடக்கியவர், அகத்தில் அழுக்கில்லாதவர், என அகத்தியரை பற்றி வேதங்களும், புராணங்களும், இலக்கியங்களும், தமிழ் நுால்களும் குறிப்பிடுகின்றன.
ரிக் வேத காலத்திலேயே அதாவது பருத்தி ஆடை நாகரிகம் அல்லாத விலங்குகளை வேட்டையாடியுண்டு அதன் தோல்களை ஆடையாக அணிந்த சிவன் காலமான கி.மு. 25000ஆண்டுகளுக்கு முன்பே அகத்தியரை பற்றிய குறிப்புகள் காணப்படுகின்றன.
சப்த ரிஷிகளில் ஒருவராகவும், அஷ்ட ரிஷிகளில் ஒருவராகவும் அகத்தியர் வணங்கப்படுகிறார்.
ராமாயணம், மகாபாரதம் போன்ற புராணக் கதைகளிலும் கூட அகத்தியரை பற்றி பல்வேறு குறிப்புகள் காணப்படுகின்றன.
அகத்தியர் தமிழ் இலக்கணம் வகுத்தவர்
அவர் ஒரு தமிழர்.
பொதுவாக அகத்தியம் என்றால் ஒரு மரபுவின் குறியீட்டு பெயர்
அகத்தியர் என்பவர் ஒருவர் அல்ல பல அகத்தியர் வாழ்த்த வரலாற்று ஆதாரங்கள் உண்டு
இப்படியாக அகத்தியர் என்ற ஒரு முனிவர் சிவனுக்கு சீடனாக இருந்து அவரிடமிருந்து தமிழ் கற்றதாக சொல்லப்படுகிறது.
அகத்தியம் என்பது இன்று பொது சொல்லாக கவிஞர், அறிஞர், ஞானி என்பதை போல ஒரு மரபு சொல் தான் அகத்தியம் என்பதும்.
அந்த மரபின் முதல் சித்தர் அகத்தியர்.
உடல் கூறுகள், உடல் செயலியல், அறுவை சிகிச்சை, மன நோய்கள், மந்திரம், தந்திரம், வைத்தியம், யோகம், நோய் கணிப்பு, தத்துவம் என அகத்தியர் தொடாத விஷயங்களே இல்லை. இந்திரனின் சாபத்தால் தீ என்ற பூதமானது, கும்பத்தில் கிடந்து, பூமியில் விழுந்து, வாயுவின் துணையால் அகத்தியராக உருவெடுத்தது என்கிறது இன்னொரு புராணக்கதை
எனவே குள்ள முனி எனும் அகத்தியர் கி.மு. 16000 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்ததாக கூறப்படுகிறது.
இந்த காலத்தை முப்புர நிருத்தர் காலம் என்று வரலாறு குறிப்பிடுகிறது.
அதாவது வட நாட்டு கைலாஷதில் இருந்து அகத்தியர் சிவனின் கட்டளைப்படி தென்னாட்டிற்கு சென்று வைத்திய வாத யோக ஞான சாத்திரங்களை கற்றுக்கொடுத்து பல்வேறு தமிழ் நுால்களை இயற்றினார் என்று ஆரிய புராணங்கள் புளுகுகின்றன
அகத்தியர் வட நாட்டில் இருந்து தமிழகம் வந்தவர் எனில் எப்படி அவருக்கு தமிழ் தெரிந்தது?
அதே புராணங்களில் சிவனிடமிருந்து அகத்தியர் தமிழ் கற்றார் என்கிறதே வடதிசையிலும் ஆதியில் தமிழ் மக்களால் பேச பட்டதா?
அல்லது தமிழ்சிவனை வட நாட்டுக்கு கடத்திய சதியின் பிதற்றலா?
புராணங்களில் தெளிவு இல்லை முன்னுக்கு பின்னாக உள்ளதை வைத்து பார்க்கும் பொது சிவன் குமரி கண்ட முதல் தமிழ் சங்க தலைவன் என்பது நிரூபணமாகிறது
சிவனை சொந்தம் கொண்டாடிய ஆரியர்கள் குமரி கண்ட மேருமலை வரலாற்றை மடை மாற்றி இமய மலைக்கும் கடத்திஇருக்கலாம்.
இங்கே சிவனிடம் தமிழ் கற்ற அகத்தியர் முதல் அவரை போன்று பொது பெயரில் அகத்தியர் என்ற பெயர் கொண்ட பல்வேறு சித்தர்கள் இருந்ததாக வரலாறு கருதுகிறது.
பொதிகைமலை அகத்தியர், வாதாபி அகத்தியர், லோபமுத்திரை அகத்தியர், புரோகித அகத்தியர், பாபநாச அகத்தியர், புலவர் அகத்தியர் என்ற பெயரில் சித்தர்கள் இருப்பதாக தெரிய வருகிறது.
அதில்
சில அகதியர்களும் அவர்கள் வாழ்த்த காலங்களும் பார்க்கலாம்
வாங்க
பொதிகை மலை சித்தரகிய குறுமுனி அகத்தியர் கி. மு. 16000ஆண்டுகள்
இந்த கால கட்டத்தை முப்புர நிருத்தர் காலம் என்று குறிக்கப்படுகிறது.
முத்தூர் அகத்தியர்
இவரின் காலம் கி. மு. 14.550ஆண்டுகள் இது பஃறுளியாற்றுத் தலைப்பச்சல் காலம்.
வாதாபி அகத்தியர்
இவர் காலம் கி. மு. 14.058
இது சூரபத்மன் காலம்.
லோப முத்திரை அகத்தியர்
இவர் காலம் கி.மு 8000 ஆண்டுகள்
இது ஆரிய ரிக் வேத காலம்.
மைத்திர வருண அகத்தியர் இவர் காலமும் ஆரிய ரிக் வேத காலம் தான்.
புரோகித அகத்தியர்
கி.மு 7500 ஆண்டுகள்
குடகுமுனி அகத்தியர் காலம் கி.மு.6020 ஆண்டுகள்.
லோப முத்திரை அகத்தியர் காலம்
கி.மு 6010 ஆண்டுகள்.
கோசலை நாட்டு அகத்தியர் காலம் கி.மு 6000 ஆண்டுகள்
ஆரிய இராமாயண கலாம்
(இப்போ புரிகிறதா எந்த அகத்தியரை பற்றிய குறிப்பு இராமாயணத்தில் இருக்கிறது என்று?
இந்த கோசலை நாட்டு அகத்தியர் என்பவர் ஒரு ஆரியர் என்பது குறிப்பிட்டதக்கது)
மலையமலை அகத்தியர் காலமும்
கி.மு 6000 ஆண்டுகள் வாக்கில் தான் இவரும் இராமாயண காலத்தை சேர்த்தவர் தான்
புரோகித அகத்தியர் காலம் கி.மு.6000 ஆண்டுகள் வாக்கில் தமிழகத்தில் வாழ்ந்தவர்
இவர் காலம்
அந்தனகுல பாண்டியன் என்கிற 3றாம் திருவிற்பாண்டியன் காலம் ஆகும்
குஞ்சரகிரி அகத்தியர் காலம்
கி.மு. 3110 இது மகா பாரதகாலம்
துவரபதி அகத்தியர் காலம்
கி.மு. 3110 பாரத காலம் தான்
யசோமதி அகத்தியர் காலம் கி.மு. 2000 ஆண்டுகள் வாக்கிளும்
புரோகித அகத்தியர் காலம் கி.மு 1900 ஆண்டு வாக்கில் திருப்பரங்குன்றத்து தமிழ் சங்க காலம்
இன்னும் பல அகத்தியர்கள் உண்டு
அகத்தியர், புரோகிதர் ஞானி.புலவர் போன்றவைகள் எல்லாம் பொது பெயர்கள்
அகத்தியர் என்றால் ஒருவர் அல்ல
அந்த பெயரில் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் வாழ்த்துள்ளார்கள்
நன்றி.
*வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர்*
******************************************
நாஸ்ட்ரடாமஸ் என்ற பெயர் ஆரூட உலகில் புகழ்பெற்ற ஒன்று. தான் வாழ்ந்த காலத்திலேயே, எதிர்காலத்தில் உலகில் என்னென்ன சம்பவங்கள் எந்தெந்த ஆண்டுகளில் நடக்குமென்று ஆரூடம் கணித்து எழுதி வைத்துவிட்டுப் போனார் அவர்.
அவர் எழுதிவைத்த சம்பவங்கள் பலவும், அப்படியே அவர் சொன்ன விதமே நடப்பதைப் பார்த்து இன்று உலகம் திகைக்கிறது. அவரது புத்தகங்களில் அடுத்தடுத்து என்னென்ன எழுதப்பட்டுள்ளன என்பதை அறிய ஒரு தனி ஆராய்ச்சியே நடக்கிறது.
சித்தர் உலகிலும் ஒரு நாஸ்ட்ரடாமஸ் உண்டு. ஆந்திர நாட்டைச் சேர்ந்த வீர பிரம்மேந்திரர் என்ற சித்த புருஷர் கி.பி. 1604-ல் பிறந்தவர். மண வாழ்வு மேற்கொண்டு மனைவியுடனும் குழந்தைகளுடனும் வாழ்ந்தவர். “காலக் ஞானம்’ என்ற அரிய நூலை எழுதியவர். அந்த நூலிலில் எதிர்காலத்தில் உலகில் என்னென்னவெல்லாம் நடக்குமென்று தெளிவாக எழுதப் பட்டுள்ளது தான் ஆச்சரியம்.
விஸ்வகர்மா பொற்கொல்லர் மரபில் வந்த பரிபூரண ஆசாரி, பிரகதாம்பாள் என்ற தம்பதிகளுக்கு மகனாய்ப் பிறந்தார் வீர பிரம்மேந்திரர். அவர் பிறந்த அன்றே அவர் தந்தை இறந்து விட்டார். அதனால் மிகுந்த கலக்கமெய்தினாள் பிரகதாம்பாள். ஒரு முனிவரிடம் குழந்தையை ஒப்படைத்த அவள், தான் வாழ விரும்பாமல் தன் உயிரை மாய்த்துக் கொண்டாள்.
முனிவர் அந்த அழகிய குழந்தையைக் கனிவோடு பார்த்தார். எவ்விதம் அந்த தெய்வீகக் குழந்தையை வளர்ப்பது என சிந்தனையில் ஆழ்ந்தார். இறைவன் கட்டளையேபோல, அவரைத் தேடிவந்தார்கள் இருவர். வீர போஜர், வீர பாப்பம்மா என்ற அவ்விருவரும் அந்தக் குழந்தையைத் தாங்கள் வளர்ப்பதாக உறுதி கூறி வாங்கிச் சென்றார்கள்.
வீரபிரம்மத்தைப் பதினான்கு வருடம் மிகப் பாசத்துடன் வளர்த்தார்கள் அவர்கள். அப்போது தான் அந்த சங்கடமான சம்பவம் நிகழ்ந்தது. வீரபிரம்மத்தின் வளர்ப்புத் தந்தை காலமாகிவிட்டார்.
பிறந்த போதே தந்தையையும் பின் தாயையும் இழந்தது, இப்போது வளர்ப்புத் தந்தையையும் இழந்தது வீரபிரம்மேந்திரரை சிந்தனையில் ஆழ்த்தின. தத்துவ ஞானத்தில் தோய்ந்தது அவர் மனம். தம் வளர்ப்புத் தாயிடம், தமக்கு வற்றாத ஆன்மிகத் தேடல் இருப்பதால் அந்த வழியில் வாழ்க்கை நடத்தப்போவதாகக் கூறி, பிரியாவிடை பெற்று வீட்டை விட்டு வெளியேறினார்.
கால்போன போக்கில் நடந்தார். எங்கெல்லாம் கோவில்கள் இருக்கின்றனவோ அங்கெல்லாம் அமைதியாக நெடுநேரம் தியானம் செய்தார். இந்த வாழ்வின் பொருள் என்ன என்றறியும் தீராத ஆவல் அவருக்கிருந்தது. அவர் போகாத கோவில் இல்லை.
ஒருநாள் இரவு… நடந்து நடந்து கால்கள் வலிலித்தன. வீரபிரம்மேந்திரர் பனகானபள்ளி என்ற அழகிய சிறு கிராமத்திற்கு வந்து சேர்ந்தார். அங்கே அச்சம்மா என்பவளின் வீட்டுத் திண்ணை காலியாக இருந்தது. அதில் படுத்து ஆனந்தமாக உறங்கினார்
காலை கதவைத் திறந்து வெளியே வந்து திண்ணையைப் பார்த்தாள் அச்சம்மா. யாரோ ஒரு பையன் உறங்குகிறானே? உறங்கும்போதும் அவன் முகத்தில் தென்பட்ட ஒளி அச்சம்மாவை வசீகரித்தது. அந்தப் பையன் மேல் அவளுக்குத் தாயன்பு பெருகியது.
அவன் எழுந்ததும் “யாரப்பா நீ’ என்று விசாரித்தாள் அவள். அவன் தான் ஓர் அநாதை என்றும், ஊர் ஊராகச் சுற்றி வருவதாகவும் தெரிவித்தான். “எனக்கு நான் வளர்க்கும் மாடுகளை மேய்க்க ஒருவன் தேவை. கண்ட இடங்களில் சுற்றுவானேன்?
இனி இங்கேயே இரு!’ என்று கண்டிப்பு கலந்த பிரியத்தோடு சொல்லி அவனுக்கு உணவளித்தாள் அச்சம்மா. இப்படியாக வீரபிரம்மேந்திரர் அச்சம்மாவின் மாடுகளை மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தப்பட்டார்.
வீரபிரம்மேந்திரர் மாடுகளைச் சுற்றி ஒரு மிகப்பெரிய வட்டக் கோடு வரைந்து விடுவார். மாடுகள் அந்தக் கோட்டுக்குள்ளிருந்து புல் மேய்ந்து கொண்டிருக்கும். அதைக் கடந்து செல்லாது. மாடுகள் அவரைப் பெரிதும் நேசித்தன. மாடுகள் புல்மேயும் தருணத்தில் வீரபிரம்மேந்திரர் காலக் ஞானம் என்ற எதிர்காலத்தைப் பற்றிச் சொல்லும் நூலை எழுதலானார். பனையோலையில் முட்களால் எழுதப்பட்டதே அந்த நூல். ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக அந்த நூலை எழுதிவந்தார் அவர்.
இப்படியாகக் காலம் போய்க்கொண்டிருந்தபோது, ஒருநாள் மாடுகளை அடித்துச் சாப்பிடும் எண்ணத்தில் காட்டிலிலிருந்து ஒரு புலி அங்கு வந்தது. ஆனால் வீரபிரம்மம் கிழித்த கோட்டினுள்ளே செல்ல இயலாமல் புலி தத்தளித்துத் திரும்பிச் சென்றது.
இதைப் பார்த்தார்கள் சில இடையர்கள். அவர்கள் அச்சம்மாவிடம் சென்று இந்தத் தகவலைச் சொன்னார்கள். அச்சம்மா வியப்படைந்தாள். ஏற்கெனவே வீரபிரம்மேந்திரரின் முகத்தில் தென்பட்ட தெய்வீக ஒளி அவளை ஆச்சரியத்தில் ஆழ்த்திக் கொண்டிருந்தது. தவிர அவர் ஏதோ தொடர்ந்து எழுதி வருவதையும் அவள் அறிவாள்.
அன்று வீரபிரம்மேந்திரர் வீடு திரும்பியதும், அச்சம்மா அவரிடம் தன்னை மன்னிக்குமாறு வேண்டினாள். அவர் பெரிய மகான் என்பதைத் தாம் இப்போதுதான் அறிந்ததாகவும், அவரை மாடு மேய்க்கும் தொழிலிலில் ஈடுபடுத்தியது பெரும் தவறு என்றும் அவள் கண்ணீர் உகுத்தாள்.
“ஏதோ ஒரு தொழில் செய்து எல்லாரும் வாழவேண்டியதுதான். கண்ணனே மாடு மேய்த்தவன் தான். அது ஒன்றும் இழிவான தொழில் அல்ல!’ என்று கூறி அவளை சமாதானப் படுத்தினார் வீரபிரம்மேந்திரர்.
அச்சம்மா அவர் எழுதிவரும் நூல் என்னவென்று விசாரித்தாள். எதிர்காலத்தில் நடக்கப்போவதைத் தான் கணித்து எழுதி வருவதாக அவர் தெரிவித்தார். “எதிர்காலத்தில் என்னென்ன நடக்குமென்று எனக்கு ஓரளவாவது சொல்ல இயலுமா’ என்று அச்சம்மா கேட்டாள். வீரபிரம்மம் நகைத்துக்கொண்டே சில விஷயங்களைச் சொன்னார். அவற்றில் சில:
“புண்ணிய நதிகள் வற்றிவிடும். கடல் பொங்கி நகருக்குள் நுழையும். அதனால் அதிகம் பேர் உயிரிழப்பார்கள். கணவனை மட்டுமே மணந்து வாழும் பத்தினிப் பெண்களின் எண்ணிக்கை குறையத்தொடங்கும். ஆண்கள்- பெண்கள் இரு தரப்பாரிடமும் ஒழுக்கம் கெடும். இந்தியா இரண்டாகவும் பின்னர் மூன்றாகவும் பிரியும். இந்தியாவில் ஜனத்தொகைப் பெருக்கம் அதிகமாவதால் குழந்தை பிறப்பதை செயற்கை முறையில் தடுக்கப் பார்ப்பார்கள். பெரியோருக்கு அடங்கி சிறியோர் நடந்ததுபோக, சிறியோருக்கு அடங்கி பெரியோர் நடக்க நேரிடும். புண்ணியத் தலங்களில் வாழ்பவர்கள் ஆண்டவனுக்கு அஞ்சி வாழாமல், ஆண்டவன் பெயரால் மோசடி செய்து வஞ்சித்து வாழ்வார்கள்.’
இதையெல்லாம் கேட்ட அச்சம்மா மிகுந்த வியப்படைந்தாள். அவரையே தன் குருவாக ஏற்றாள் அச்சம்மா. தனக்கு உபதேசம் வழங்குமாறு வேண்டினாள்.
வீரபிரம்மேந்திரர் அவளுக்குச் சிவ மந்திரத்தை உபதேசித்து, அதை ஓயாமல் ஜெபித்து வருமாறு பணித்தார். பொருள் மேல் உள்ள ஆசையை விட்டு விட்டு ஆன்மிகப் பணிகளில் நாட்டம் கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.
அச்சம்மாவின் மனம் வீரபிரம்மேந்திரரின் உபதேசங்களால் ஞானம் அடைந்தது. மெல்ல மெல்லப் பற்றுகள் அவளை விட்டு விலகத் தொடங்கின. இல்லறத்தைத் துறந்து துறவியானாள் அவள். தன் சொத்தையெல்லாம் செலவிட்டு ஏகாந்த மடம் என்றொரு மடம் நிறுவினாள். அதில் வாழ்ந்தபடி வீரபிரம்மேந்திரரின் கொள்கைகளை மக்களிடையே பரப்பிவரலானாள்.
அச்சம்மாவின் வாழ்க்கை இனி அவ்விதமே தொடரும் என அறிவித்த வீரபிரம்மேந்திரர், அவளிடம் விடைபெற்று மீண்டும் பல்வேறு தலங்களுக்கு யாத்திரை செல்லலானார்.
போலேரம்மா என்ற புகழ்பெற்ற அம்மன் கோவில் ஆந்திரத்தில் உண்டு. அந்தக் கோவிலுக்குச் சென்றார் அவர். அங்கு சிலர் போலேரம்மா தொடர்பான புனித யாத்திரைக்கு அவரிடம் நன்கொடை கேட்டனர். நன்கொடை தருவது கட்டாயமென்று அவரை அச்சுறுத்தினர். இந்த மிரட்டலுக்கெல்லாம் அஞ்சுபவரா பிரம்மேந்திரர்? அவர் நகைத்துக் கொண்டார். “இப்போது என்னிடம் பணம் எதுவுமில்லையே, பிறகு கிடைத்தால் தருகிறேன்’ என்றார்.
பின் தன் சுருட்டுக்கு நெருப்புக் கேட்டார் அவர்களிடம். அவர்கள் நன்கொடை தராத அவருக்கு நெருப்புத் தர மறுத்தனர். அவர் போலேரம்மா கோவிலுக்கு வெளியே வந்துநின்றார். உள்ளே சந்நிதியை உற்றுப் பார்த்தார். “போலேரம்மா, என் சுருட்டுக்குக் கொஞ்சம் நெருப்பு கொடு’ என்று கேட்டார். மறு நிமிடம் போலேரம்மா சந்நிதியிலிருந்து ஒரு தணல் காற்று வெளியில் புறப்பட்டு வந்தது! அவரது சுருட்டைக் கொளுத்தியது! “சரி சரி நெருப்பு போதும்’ என்று அவர் சொன்னதும் மீண்டும் கருவறைக்கே சென்று மறைந்தது அந்தத் தணல்!
இந்த அதிசயத்தைப் பார்த்தவர்கள் வியப்பின் உச்சிக்கே சென்றார்கள். அவரது காலில் விழுந்து மன்னிப்பு வேண்டினார்கள்.
அவர்கள் அனைவருமே அவரின் அடிய வர்களானார்கள். இப்படி மெல்ல மெல்ல வீரபிரம்மேந்திரரின் அடியவர் எண்ணிக்கை நாள் தோறும் பெருகத் தொடங்கியது.
காலப்போக்கில் அவர் தமது பொற்கொல்லர் மரபில் தோன்றிய கோவிந்தம்மா என்ற பெண்ணை மணந்தார். இல்லறம், துறவறம் இரண்டும் சம மதிப்புடையவை தான் என்று அவர் அடிக்கடிச் சொல்வது வழக்கம். தம் இல்லற வாழ்வில் ஐந்து மகன்களையும் ஒரு மகளையும் பெற்றார். தம் குடும்ப உறுப்பினர் அனைவரையும் ஆன்மிகவாதிகளாக மாற்றினார். அனைவருடனும் இணைந்து ஆன்மிகப் பணியாற்றி வந்தார்.
தாம் ஜீவசமாதி அடைய எண்ணி குடும்பத்தாரிடம் அறிவித்தார் வீரபிரம்மேந்திரர். குடும்பத்தார் கண்கலங்கினர். “யாக்கை நிலையற்றது; இதன் மேல் பற்று வைக்காதீர்கள்’ என்று போதித்தார். பின் சமாதிக்குழியில் இறங்கி நிஷ்டையில் அமர்ந்தார். “எனக்கு இறப்பில்லை என்பதால், என் மனைவி தன் சுமங்கலிலிக் கோலத்தை மாற்றத் தேவையில்லை’ என்று அறிவித்தார். சமாதியின் மேலே பலகை போட்டு சமாதி மூடப்பட்டது.
பத்து மாதங்கள் சுழன்றோடின. “இன்னுமா அவர் உயிரோடிருப்பார்? அவர் மனைவிக்கேன் சுமங்கலிலிக் கோலம்?’ என்று சிலர் விமர்சித்தனர். இத்தகைய விமர்சனங்கள் அந்தக் காலத்தில் எழுவது சகஜம்தானே?
மூத்த பிள்ளை மனம் நொந்து தாயிடம் விளக்கம் கேட்டார். “மக்களுக்கு அறிவில்லை. அவர்களின் அழிவுக்காலம் நெருங்கிவிட்டதால் இப்படியெல்லாம் பேசுகிறார்கள். என் கணவர் எனக்கிட்ட கட்டளைப்படியே நான் சுமங்கலிலிக் கோலத்தில் இருந்து வருகிறேன்’ என்றார் தாயார்.
மகனுக்குச் சமாதானம் ஏற்படவில்லை
அவன் ஆக்ரோஷத்தோடு ஒரு கடப்பாரையை எடுத்துவந்து சமாதியை இடித்துத்திறந்துபார்த்தான். என்ன ஆச்சரியம்! அங்கே சலனமே இல்லாமல் யோக நிஷ்டையில் கம்பீரமாக வீற்றிருந்தார் வீரபிரம்மேந்திரர். சமாதியை இடித்த மூத்த மகனின் கைகள் நடுக்கத்தில் வெலவெலத்தன.
அவனை கண்திறந்து பார்த்த வீரபிரம்மேந்திரர், சமாதியைத் திறந்த தோஷம் விலகப் பரிகாரம் செய்யச் சொல்லிலி, மீண்டும் சமாதியை மூடச் சொன்னார்.
இந்த அதிசயத்தைப் பார்த்த ஊர்க்காரர்கள் வீர பிரம்மேந்திரரின் மனைவியிடம் மன்னிப்புக் கேட்டனர். மனைவியையும் பக்தியோடு கும்பிடத்தொடங்கினார்கள்.
ஆந்திராவில் கடப்பை ரயில் நிலையத்திலிருந்து அறுபது கிலோமீட்டர் தொலைவில், கந்தி மல்லையபள்ளி என்ற இடத்தில் இருக்கிறது சித்த புருஷரான வீரபிரம்மேந்திரரின் ஜீவசமாதி. இன்றும் தன்னை நாடிவரும் அடியவர்களுக்கு அவர் சூட்சும உருவில் அருள்புரிந்து வருகிறார். நாள்தோறும் அந்த இடத்திற்குச் செல்வோர் எண்ணிக்கை பெருகிவருகிறது