🦢”சரஸ்” என்றால் பொய்கை என்று அர்த்தம்;
“வதி” என்றால் வசிப்பவள்.மனம் என்னும் பொய்கையில் வசிப்பவள்.
🦢#சரஸ்வதி என்றால் பேச்சின் அதிபதி அல்லது பேச்சை தருபவள் என்று பொருள்.சரஸ்வதி என்பதன் இன்னொரு அர்த்தம் ஈரத் தன்மை கொண்டவர் என்பதாகும்.
🦢பூஜை என்பது பூஜா என்பதில் இருந்து பிறந்தது.”பூ”என்றால் பூர்த்தி.”ஜா”என்றால் உண்டாக்குவது.
🦢தான் என்ற அகங்காரம்,அடுத்தவனை விட நன்றாக இருக்க வேண்டுமென்ற பொறாமை,உலகவாழ்வு நிரந்தரமானது என்ற எண்ணம் ஆகியவை மனிதனை ஆட்டி படைக்கின்றன.இதையே சைவ சித்தாத்தத்தில் கர்மா,மாயை என்கிறார்கள்.இதை அகற்றி ஞானத்தை உண்டாகச் செய்வதே பூஜை.
🦢சரஸ்வதி கல்வியாகிய ஞானத்தை தருபவள் என்பதால்,அவளது விழாவை மட்டும் பூஜை என்ற அடைமொழி இணைந்தது.
🦢சரஸ்வதி ஞான வடிவானவள்.ஞானம் எங்கிருக்கிறதோ அங்கே அடக்கம் இருக்கும்.பிரம்மனின் படைப்புகள் முதன் முதலில் பேசும் திறன் இல்லாமல் கிடந்தன.அதன் பின்னர் பிரம்மன் சரஸ்வதியை வேண்ட சரஸ்வதி அன்னை அருள்பாலித்தாள்.அதன் பின்னரே பிரம்மனின் படைப்புகள் பேசும் திறமையை பெற்றன.
⚪🌺⚪🌺⚪🌺⚪🌺⚪🌺⚪🌺⚪
🌻தூய்மையின் நிறம்🌻
🏳️சரஸ்வதி அணிந்துள்ள ஆடையின் நிறம் வெள்ளை.
🏳️வானவில்லின் 7வண்ணங்களில் சேராத வெள்ளையை சரஸ்வதிக்கு மட்டும் சாத்துவர்.
🏳️தூய வெள்ளை ஆடை அணிபவர்களுக்கு தனி மரியாதை உண்டு.கற்றவர்,மரியாதைக்குரியவர் என்பதை எடுத்துகாட்டவே,கல்வி தெய்வமான சரஸ்வதியும் வெள்ளை ஆடை அணிந்திருக்கிறாள்.
🏳️வெள்ளை என்பது மாசுமருவற்றது.ஒருவன் கற்ற கல்வியும்,மாசு மருவற்றதாக இருக்க வேண்டும் என்பதை இது காட்டுகிறது.
🏳️நன்மையும் தீமையும் கலந்து இருக்கும் இந்த உலகத்தில் அழுக்கே இல்லாத கல்வியைத் தேர்ந்தெடுத்து,கற்க வேண்டும் என்பதையே அவளுக்குரிய வெள்ளை நிறம் உணர்த்துகிறது.
🏳️வெள்ளை நிறத்தில் மட்டும் ஒளி ஊடுருவும்.இதனால் தான் சரஸ்வதி தேவி நிர்மலமான ஸ்படிகத்தால் ஆன மாலையை அணிந்திருக்கிறாள்.
🏳️சரஸ்வதிக்கு ‘கலைமகள்’ என்ற பெயர் உண்டு.கலை என்றால் வளர்வது.கல்வியும் படிக்க படிக்க வளர்ந்து கொண்டே போகும்.
🏳️படிப்பு தவிர பாடல்,நாடகம்,இசை போன்ற கலைகளையும் சரஸ்வதி தேவி நமக்கு சிறப்புற கிடைக்க அருள்பாவிக்கிறாள்.