வைணவ திருத்தலங்களில்,பெருமாள் பள்ளிக் கொண்டிருக்கும் கோலத்தைத் தரிசித்திருக்கிறோம்.
அதேபோல் ஸ்ரீகிருஷ்ணர் சயன கோலத்தில் அருளும் தலம் துவாரகை. இந்த தலத்தில் கோவில் கொண்டிருக்கும் கண்ணனுக்கு துவாரகீசன் என்று திருநாமம்.
ஐகத் மந்திர் எனப்படும் இங்குள்ள கோவிலின் பிரதான வாயிலை சொர்க்க துவாரம் என்பர்கள்.
எப்போதும் திறந்தே இருக்கும். இந்த வாயிலைக் கடந்தால் மோட்ச துவாரம். இதையும் தாண்டிச் சென்றால் கண்ணனின் திவ்விய தரிசனம் கிடைக்கும்.