எளிய பரிகாரம்.
உங்களின் வீட்டில் கதவு திறந்து இருக்கும் போது கருப்பு வௌவால் வீட்டிற்குள் வந்து செல்கிறது எனில் நாம் அறிந்து கொள்ள வேண்டியது . உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் யாரோ கெடுதல் செய்ய ஆர்ரம்பித்து ஒரு வாரம் ஆகியுள்ளது என அர்த்தம்.
கருப்பு நிற குளவி வீட்டில் வந்து கூடு கட்டினால் முதலில் செய்ய ஆரம்பித்த கெடுதலை நேர்த்தியாக செய்ய ஆரம்பித்து விட்டார்கள் என்பதை அறிக.
பரிகாரம்:
உப்பு என்பது உணவு பொருள். ஆனால் அந்த உப்பே முழுமையான உணவாகாது. விருந்துக்கு இலை போட்ட உடன் இடது பக்கத்தில் மூலையில் சிறிது உப்பு வைப்பார்கள்.
அப்படிப்பட்ட கல் உப்பை வைத்து தீய சக்திகளை ஓட ஓட விரட்டலாம்.
வீட்டிற்கு உப்பினை வெள்ளி கிழமையன்றோ அல்லது தமிழ் மாதத்தின் முதல் நாளிலோ வாங்க வேண்டும்.
முகூர்த்த நாட்களில் உப்பு வாங்கி வைத்து பழகுங்கள் உங்கள் வீட்டில் பொன்னும் பொருளும் பெருகும்.
பரிகாரம் செய்யும் முறை:
தீய சக்திகளை ஓட ஓட விரட்டப் பயன்படுவது கல் உப்பு.
நான்கு சிறிய ஜாடியை எடுத்து அவை ஒவ்ஒன்றிலும் சிறிது உப்பை கொட்டுங்கள். பின்பு ஜாடியை மூடி உங்கள் வீட்டின் கிழக்கு வடக்கு , மேற்கு, தெற்கு என நான்கு மூலையிலும் வைத்துவிடவும்.
கீழேயோ அல்லது பரணிலோ உங்கள் வசதிக்கு தக்க இடத்தில் வைக்கவும்.
வாரம் ஒரு முறை அந்த ஜாடிகளை திறந்து பார்க்கும் போது உப்பு கரையாமல் இருந்தால் உங்களுக்கு யாரும் எந்த தீங்கும் செய்யவில்லை என பொருள்.
மாறாக உப்பு கரைந்து இருந்தால் உங்களுக்கு யாரோ கடுதல் செய்து உள்ளார்கள் எனவும் அந்த கெடுதலை அந்த உப்பானது தாங்கிக் கொண்டு உங்களை தீமை அண்டாமல் தடுக்கிறது என பொருள்.
எந்த திசையில் உள்ள கல் உப்பு கரைந்து உள்ளதோ அந்த திசையில் இருந்து கெடுதல் வந்துள்ளது என பொருள்.
அந்த ஜாடியில் உள்ள உப்பினை கழுவி சுத்தம் செய்துவிட்டு மீண்டும் புதிதாக உப்பினை கொட்டி வையுங்கள்.
வீட்டில் இவ்வாறு வைக்கும் உப்பானது கெடுதல்களை தாங்கிக் கொண்டு நீராகும். தீமைகள் வந்தடையாமல் எப்போதும் பார்த்துக் கொள்ளும். இது அனுபவ உண்மை.