#ஆண்மலட்டுதன்மையைபோக்கசிறந்த_வழி
வணக்கம் நண்பர்களே ஆண் மலட்டுதன்மை என்பது ஒரு நோயெ இல்லை அது ஒரு தற்காலிக குறை அதையும் நம்மால் முழுமையாக நாமே சரி செய்துக்கொள்ள முடியும்.
அப்படியே மீறிப்போனால் உங்களுக்கு என்ன பிரச்னை இருக்கபோகிறது…..?
ஆண் உறுப்பு விறைப்புத்தன்மை அடையாமை,
இல்வாழ்க்கையில் ஈடுபட முடியாத நிலை,
இப்படி பல நோய்களின் தொகுப்பு.
ஒரு மனிதனுக்கு மூன்று விஷயங்கள் இன்றியமையாததாக சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளன.
இவைகளை “த்ரயோ உபஸ்தம்பங்கள்” என்று ஆயுர்வேதப் பெரியோர்களால் கூறப்படுகின்றன.
* உணவு – இது பித்தத்தை நிலைநிறுத்தும் செயல்.
*உறக்கம் – இது கபத்தை நிலைநிறுத்தும் செயல்.
*அப்பிரம்மச்சரியம் – முறைப்படுத்தப்பட்ட இல்வாழ்க்கை. இது வாதத்தை நிலைநிறுத்தும் செயல்.
இந்த மூன்று விஷயங்களும் எந்த ஒரு மனிதனுக்கு இன்றியமையாததாக கருதப்படுகின்றன.
இல்வாழ்க்கை குறைபாடுகள் எனும்போது ஆண்மையின்மை, விறைப்புத்தன்மை இன்மை, இச்சையின்மை, விந்து முந்துதல் என்று பல நுண்பிரிவுகள் உள்ளன. ஒருவனுக்கு இல்வாழ்க்கை குறைபாடுகள் உடல் நோய்களாலோ, மனக் குறைபாடுகளாலோ அல்லது இரண்டின் ஏதாவது ஒரு காரணமாகவோ ஏற்படலாம்.
இன்றைய சூழ்நிலையில் வாழும் முறை, தவறான உணவுப் பழக்கம், படபடப்பு, பயம், மனஅழற்சி எனும் மன அழுத்தம், மனம் பல்வேறு திசைகளில் கண்ட படி அலையும் தேவையற்ற ஆசைகள் போன்றவைகள் தான் ஆண்மைக் குறைவுக்குக் காரணமாகின்றன.
ஒருவர் தாம்பத்திய உறவில் முழுமையாக ஈடுபட முடியாமல் போகும்போது,
அது மேலும் மனத்துயரத்தை ஏற்படுத்துகிறது.
விறைப்புத்தன்மை இல்லாமை என்பது ‘மேட்ரஸ்தப்ததா’ என சித்த மருத்துவத்தில் அழைக்கப்படுகிறது.
ஒரு சிலருக்கு விந்து வெளியே வராமல் சிறுநீர்ப்பைக்கு உள்ளே சென்றுவிடும் இப்படியும் சிலருக்கு பிரச்னை உண்டு இதற்கு Retrograde ejaculation என்று பெயர்.
பொதுவாக சித்தர்கள் காம சூத்ரமும் திருக்குறளின் காமத்துப்பால் ஆகியவற்றை எல்லாம் பார்க்கும்போது, மலட்டுத்தன்மை சார்ந்த சிகிச்சையைக் கூச்சப்படாமல் எடுத்துக்கொள்ள வேண்டும் என்பதை தான் நமக்கு மறைமுகமாக கூறுகின்றது.
புனிதமான இடம் கோவில் அந்த கோவில்களில் கூட இந்த காமம் இடம்பெற்ற நிலையில் தான் உள்ளது.
நண்பரகளே இதேநேரம் இந்த காமம் சார்ந்த மருத்துவ சிகிச்சையை பற்றிய முறையற்ற ஆலோசனைகள்,
போலி விளம்பரங்களைக் கண்டு ஏமாற வேண்டாம்.
அனுபவமுள்ள, அறிவியல்பூர்வமான ஆயுர்வேத அல்லது சித்தமருத்துவர்களின் நவீன மருத்துவரையே அணுக வேண்டும்.
அதை விட பரம்பரை மருத்துவருக்கு அதிகமான அனுபவம் இருக்கும்
இங்கே ஒரு விஷயத்தை கவனித்தால் மனப்பதற்றம் உடைய ஆண்களுக்கு சீக்கிரத்தில் விந்து முந்திவிடும்.
இது இருவருக்கும் அதிருப்தியை ஏற்படுத்தும். அதாவது முழு திருப்தி இல்லாமல் போகும்
இதற்கு பரம்பரை வைத்திய முறையில் தகுந்த சிகிச்சை அளிக்க முடியும்.
ஒரு மனிதனுக்கு உடலில் ஏழு தாதுக்கள் உள்ளன அதாவது
நான் முன்பு தாது லேகியம் என்றால் என்ன என்கிற பதிவில் எழுதிய அதே செய்தி தான்
அந்த ஏழாவது தாது சுக்ர தாதுவாகும். இந்த சுக்ர தாது குழந்தை பிறப்புக்குக் காரணமாக இருக்கிறது.
இது ஆரோக்கியமாக இருக்க வேண்டும்.
அன்ன ரஸம், சுக்ர தாதுவாக மாறுகிறது. இந்த சுக்ர தாது உடலுக்கு வலுவையும் தருகிறது
அது என்ன அன்ன ரஸசம்.? நாம் சாப்பிடும் உணவுகளில் கிடைக்கும் சத்துக்கள் நிறைந்த சாறுதான் அன்னரஸசம் இந்த சுக்ர தாதுவைப் பலப்படுத்த நல்ல உணவு வகைகளை உண்ணுதல், வாரந்தோறும் எண்ணெய் குளித்தல், தினமும் நடைப்பயிற்சி, யோகா, 20 நிமிடம் தியானம், மனப் பதற்றத்தை தவிர்த்தல் போன்ற அம்சங்களுடன், சிறப்பான சில மூலிகை மருந்துகளையும் உட்கொள்ளலாம்.
அமுக்குரா கிழங்கு சூரணம் 10 கிராம் பாலில் கலந்து காலை, மாலை சாப்பிடலாம்,
அல்லது
அமுக்குரா கிழங்கு, நிலப்பனை கிழங்கு, சதாவரி, சாலாப்மிசிரி, முருங்கை விதை, பூனைக்காலி விதை, தாமரை விதை, அதிமதுரம், நெல்லி வற்றல், முருங்கைப் பிசின், நீர்முள்ளி விதை, மதனகாமப்பூ, திராட்சை, எள், தேற்றான்கொட்டை, அத்திப் பழம், பூமி சர்க்கரை கிழங்கு, பருத்திக் கொட்டை, பிஸ்தா, அக்ரோட் பருப்பு, வெள்ளரி விதை, பாதாம் பருப்பு, சாரைப் பருப்பு, பூசணி விதை, பசும் பால் போன்றவை ஆண்மையை அதிகரிக்கும்.
இவைகளும் மருத்துவ அனுபவங்களை கொண்டவர்களிடம் எப்படி சாப்பிட வேண்டும்….? அவைகளை எவ்வளவு அளவு எப்படி சாப்பிட வேண்டும் என்ற ஆலோசனை பெற்று தான் சாப்பிட வேண்டும்.
ஜாதிக்காய் மனஅழுத்தத்தைப் போக்கும், பாலுணர்வைத் தூண்டும். ஜாதிக்காயை ஊறுகாய் போலவோ, சூரணமாகவோ சாப்பிடலாம்,
மாதுளம் பூவைப் பசும் பாலில் வேகவைத்து, சிறிது தேன் கலந்து அருந்தினால் சுக்ர பலம் பெறும்.
முருங்கைப் பூவின் பொடியை தேனில் கலந்து சாப்பிட்டு வரலாம்.
வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும்பால் சாப்பிடலாம்.
அத்திப்பழம் தினமும் சாப்பிட்டுவரலாம்.
இன்னும் மூலிகைகள் உண்டு அவைகளை கல்வத்தில் போட்டு இடித்து பொடி செய்து சலித்து
லேகியம், மாத்திரைகள் போன்று செய்தும் சாப்பிடலாம்
அப்படி சாப்பிட்டால் ஆண் மலட்டு தன்மையில் இருந்து முழுவதுமாக விடுபட்டு மகிழ்ச்சியான இல்வாழ்க்கையை வாழலாம் நன்றி.
Category: