அனுமன் வாக்கு - அகத்தியர் வாக்கு

by admin

#அனுமன்_பெருமை
#_அகத்தியர்_வாக்கு

ஸ்ரீராம சரிதையை வால்மீகி ஏழு காண்டங்களாக விவரித்துள்ளார் எனினும், இறையே இந்த சுந்தரகாண்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. நவகிரக தசை, திசா புக்தியில் சிரமப்படுகிறவர்கள், அப்படிப்பட்ட தாங்க முடியாத பிரச்சினைகளிலிருந்து விடுபட்டு இறைவன் திருவடியை சேர, இறைவனே காட்டிக்கொடுத்த மகா புண்ணிய வழி. கர்மாவுக்கு ஏற்றவாறு தண்டனையை இறைவனே கொடுத்தாலும், அதுவே மனம் விரும்பி திருந்தி வாழ நினைக்கும் மனிதர்களுக்கு, மாற்று வழியை காட்ட கால காலமாக யோசித்துக் கொண்டிருந்தது என்பது, சித்தர்களாகிய எங்களுக்கு இப்பொழுதுதான் புரிய வந்தது. இதை கைப்பற்றி, மனம் ஒன்றி, தன்னையே இறைவனுக்கு கொடுப்பவனுக்கு, விடுதலை நிச்சயம். நினைத்தது நிறைவேறும்.” என்றார்.

“அனுமனை பெருமைப்படுத்தவும், சுந்தரகாண்டம் உருவானது. ராமாயணத்தின் மற்ற காண்டங்களில், இறைவனே மனித அவதாரம் எடுத்தால் எப்படிப்பட்ட கர்ம வினையையும் தாங்கித்தான் கடந்து வரவேண்டும் என்று உணர வைத்த இறைவன், தன் தாசனை பணிந்து, அவர் செய்த அரிய விஷயங்களை பாராயணம் செய்வதின் மூலம், மனித இனத்தின் பிரச்சினைகளை விலக்க, வழிகாட்டியது.”

“எத்தனையோ பேர்கள் சீதையை தேடி பல திசைகளிலும் சென்ற பொழுது, அனுமனே, நிச்சயமாக நல்ல செய்தியை கொண்டு வருவான் என்று ராமனுக்கு தெரிந்திருந்தது. ஏன்? அனுமனின் தாச குணம், எதையும் தீர ஆராய்ந்து செயல்படுத்தும் குணம், இயற்கையாகவே அவருள் நிறைந்திருந்த தூதுவரின் திறமை, பெரியோரின் வாழ்த்துக்களை, ஆசிர்வாதத்தை, எப்பொழுதும் வேண்டிக்கொள்ளும் எண்ணம் போன்றவையே. அனுமன் லங்காபுரிக்கு கிளம்பும் முன் கூட, சூரியன், இந்திரன், வாயு போன்றோரின் வாழ்த்துக்களையும், ஆசீர்வாதத்தையும் பெற்றுத்தான் கிளம்பினார்.”

“எந்த நல்ல காரியத்தை செய்யும் முன்னரும், செய்யும் பொழுதும் இறைவன், பெரியவர்கள், மகான்கள், ஆச்சாரியர்கள் வாழ்த்து மனிதருக்கு கண்டிப்பாக தேவை. அருளின்றி இவ்வுலகில் எதுவும் நன்று கூடாது. அதை மறந்ததின் விளைவுதான், இன்றைய மனித குலத்தின் நிலைக்கு காரணம். இதை புரிந்து கொள்பவர்கள், அதன்படி நடந்து கொள்பவர்களுக்கு, இந்த கலியுகத்திலும், இப்புவியிலேயே, குறைந்தது நிம்மதியை இறை அருளும். இறைவனுக்கு, தன்னைவிட, தன் அடியவர்களை காப்பாற்றுவதிலேயே கருத்து அதிகம். ஆதலால், இறைவனின் அடியவர்க்கு அடியவர்களாக இருந்து, இறைவன் செய்ய வேண்டிய கடமைகளை செய்பவர்களுக்கு, அந்த இறையே இறங்கி வந்து அவர்கள் தேவையை நிறைவேற்றும்.”

You may also like

Translate »