Home ஆன்மீக செய்திகள் வாஸ்து சாஸ்திரம் சொல்லும் சமையலறை அமைக்கும் முறை

வாஸ்து சாஸ்திரம் சொல்லும் சமையலறை அமைக்கும் முறை

by admin
vastu-வாஸ்து சாஸ்திரம் சொல்லும் சமையலறை அமைக்கும் முறை

சமையலறையில் கட்டாயம் பாத்திரம் கழுவும் தொட்டி சிங் அமைக்க வேண்டும். இது சமையலறையில் வடகிழக்கில் அமையுமாறு பார்த்துக் கொள்ளவும். மாவு அரைக்கும் கிரைண்டர் பிரிட்ஜ் போன்றவை தென்மேற்கில் வைக்கலாம்.

சமையலுக்கு தேவைப்படும் மசாலா மளிகை பொருட்களை அடுக்கி வைக்கும் மாடத்தை அறையில் தெற்கு மேற்கு பக்கம் அமைக்கலாம். சமையல் அரை மேடை மேல் கருப்பு வண்ணம் இல்லாமல் பார்த்துக் கொள்ளவும். தென்கிழக்கு பகுதி சுக்கிரன் ஆட்சி பெற்ற பகுதி என்பர்.

எனவே சுக்கிரனுக்கு உகந்த வெளிர்மஞ்சள் ஐஓரி வண்ணத்தை சமையலறை சுவர்களுக்கு தீட்டலாம். சுக்கிரன் ஆட்சி உச்சம் ஜாதகத்தில் உடையவர்கள் வீட்டில் சமையலறையில் பூஜை அறையும் வைக்கலாம்.

அக்னி மூலையில் பொதுவாக நீர் தொட்டி கழிப்பறை போன்றவை இல்லாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தென்கிழக்கில் வீட்டின் பெரிய படுக்கையறை வேண்டாம். அதற்கு பதில் விருந்தினர்கள் தங்குமரை வைக்கலாம்.

You may also like

Translate »