Home ஆன்மீக செய்திகள் மகாசங்கடஹர சதுர்த்தி: கட்டாயம் விரதம் இருந்து விநாயகரை வழிபடுங்கள்

மகாசங்கடஹர சதுர்த்தி: கட்டாயம் விரதம் இருந்து விநாயகரை வழிபடுங்கள்

by admin
sankatahara-sathurthi-viratham-மகாசங்கடஹர சதுர்த்தி கட்டாயம் விரதம் இருந்து விநாயகரை வழிபடுங்கள்

சதுர்த்தி தினத்தில் சந்திரனை ஆட்டிப் படைத்தவர் விநாயகப் பெருமான். எனவே சங்கடஹர சதுர்த்தி நாளில் விரதம் இருந்து விநாயகரை வணங்குபவர்களுக்கு சந்திர தோஷம் ஏற்படாது என்பது நம்பிக்கை.

 தேய்பிறை சதுர்த்தியை சங்கடஹர சதுர்த்தி என்று அதாவது நமக்கு ஏற்படக்கூடிய சங்கடங்கள் அனைத்தையும் போக்கும் சதுர்த்தி என்று போற்றுகின்றன ஞானநூல்கள்.

அன்றைய நாளில் விரதம் இருந்து செய்யும் விநாயகர் வழிபாடு நம் சங்கடங்கள் எல்லாவற்றையும் போக்கும் என்பது நம்பிக்கை. சங்கடஹர சதுர்த்திகளில் தலையாயது மகா சங்கடஹர சதுர்த்தி.

விநாயகர் சதுர்த்திக்கு முன்பாக வரும் தேய்பிறை சதுர்த்தியையே நாம் மகாசங்கடஹர சதுர்த்தி என்று அழைக்கிறோம். இன்று (திங்கட்கிழமை) மகா சங்கடஹர சதுர்த்தி தினமாகும். இன்று விநாயகரைக் கட்டாயம் விரதம் இருந்து வழிபட வேண்டும்.

 ஓராண்டு முழுவதும் வரும் 11 சங்கட ஹர சதுர்த்தி அன்று விரதம் இருந்து வழிபாடு செய்ய இயலாதவர்கள் இன்று மகா சங்கடஹர சதுர்த்தி அன்று விரதம் இருப்பது விசேஷம்.

அவ்வாறு விரதம் இருந்தாலோ மாலையில் விநாயகரை வழிபட்டாலோ ஓராண்டு முழுவதும் சங்கடஹர சதுர்த்தி விரதம் அனுஷ்டித்த பலன் கிடைக்கும். மகாசங்கடஹர சதுர்த்தி நாளில் செய்யும் விநாயகர் விரத வழிபாடு பல்வேறு வரங்களை வழங்கும்.

 குறிப்பாகக் கடன் பிரச்சினைகளில் திண்டாடுபவர்கள் மகாசங்கடஹர சதுர்த்தி அன்று மாலை சந்திர உதயநேரத்தில் வீட்டிலேயே விநாயகப்பெருமானை நினைத்து ஒரு மலர் சாத்தி விநாயகப் பெருமானுக்குப் பிரியமான விநாயகர் அகவல் போன்ற துதிகளைப் பாடிப் போற்றினால் வீட்டில் வறுமை நீங்கிச் செல்வ வளம் சேரும் என்பது நம்பிக்கை.

You may also like

Translate »