ஒவ்வொரு மாத ஏகாதசி விரதத்துக்கும் ஒரு பலன் உண்டு.
அந்த வகையில் இன்று (திங்கட்கிழமை) ஏகாதசி விரதம் குழந்தை பாக்கியம் தரும் மகத்துவம் உள்ளதாகும்.
இன்று இந்த விரதத்தை மேம்படுத்த வயதானவர்களுக்கு தானங்கள் செய்வது நல்லது.
திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்தில் இன்று கலிய நாயனார் குருபூஜை.
ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் கேட்டை நட்சத்திர தினத்தன்று அவரது குருபூஜை நடத்தப்படுகிறது.
மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இன்று சிறப்பு சோமவார வழிபாடு சர்வ ஏகாதசி, சங்கரன் கோவில் ஸ்ரீ கோமதியம்மன் ரதோற்சவம்.
கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சனம். திருமயிலை கற்பகாம்பாள் சமேத கபாலீசுவரருக்கு காலையில் சிறப்பு சோமவார வழிபாடு.
சேலம் செவ்வாய்ப்பேட்டை மாரியம்மன் கோவில் மின் விளக்கு அலங்கார வெள்ளி விமானத்தில் பவனி.
தருமாலிருஞ்சோலை ஸ்ரீ கள்ளழகர் காளிங்கநர்த்தனம். மதுரை மீனாட்சியம்மன் தீர்த்தம், கனக தண்டியலில் புறப்பாடு.
இன்றைய பஞ்சாங்கம் சுபகிருது ஆண்டு,
ஆடி-23 (திங்கட்ழமை) பிறை : வளர்பிறை.
திதி : ஏகாதசி மாலை 5.36 மணி வரை பிறகு துவாதசி.
நட்சத்திரம் : கேட்டை காலை 11.54 வரை பிறகு மூலம்.
யோகம் : சித்த / அமிர்தயோகம் ராகுகாலம் : காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம் : காலை 10.30 மணி முதல் 12 மணி வரை சூலம் : கிழக்கு நல்ல நேரம் : காலை 6 மணி முதல் 7 மணி வரை, மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்றைய ராசிப்பலன்
மேஷம்-பாராட்டு
ரிஷபம்-நற்செயல்
மிதுனம்-பரிசு
கடகம்-அன்பு
சிம்மம்-நன்மை
கன்னி-ஆர்வம்
துலாம்- உவகை
விருச்சிகம்-தனம்
தனுசு- பிரீதி
மகரம்-சுகம்
கும்பம்-போட்டி
மீனம்-புகழ்