Home ஆன்மீக செய்திகள் நவகிரக ஸ்லோகம்

நவகிரக ஸ்லோகம்

by admin
நவகிரக ஸ்லோகம்

வேயுறு தோளி பங்கன் விடமுண்ட கண்டன் மிக நல்ல வீணை தடவி

மாசறு திங்கள் கங்கை முடி மேல் அணிந்து என் உளமே புகுந்த அதனால்

ஞாயிறு திங்கள் செவ்வாய் புதன் வியாழன் வெள்ளி சனி பாம்பிரண்டும் உடனே

ஆசறு நல்ல நல்ல அவை நல்ல நல்ல அடியாரவர்க்கு மிகவே!

(_திருஞானசம்பந்தர் )

நவகிரக ஸ்லோகம்

ஆதாரே ப்ரதம: ஸஹஸ்ர கிரண: தாராதிப: ஸவாலயே

மா ஹேயோ மணிபூரகே ஹ்ருதிபுத கண்டேச வாசஸ்பதி:

ப்ருமத்யே ப்ருகு நந்தன: தினமணே: புத்ர த்ரிகூட ஸ்தலே

நாடீ மர்மஸு ராஹு கேது குளிகர: குர்யாத் ஸனோ மங்களம்.

பொதுப் பொருள்:

 மூலத்தில் கதிரவனும் ஸ்வாதிஷ்டானத்தில் சந்திரனும் மணிபூரகத்தில் சீலமிகு அங்காரகனும் அநாகத்தில் புதனும் விசுத்தியிலே குருவும் சுக்கிரபகவான் ஆக்ஞையிலும் சனிபகவான் சுழிமுனையிலும் நாடிதனில் ராகுவும் மர்மக் குறிதனில் கேதுபகவானும் நின்று எங்களுக்கு எப்போதும் நன்மைகளைப் பெருக்கட்டும்; எங்கள் துயரங்களை விலக்கட்டும்.

ஓம் சாந்தி சாந்தி சாந்திஹி….!

You may also like

Translate »