எல்லோரையும் காக்கும் தெய்வம் என்றும், தீயசக்திகள் எதையும் அண்டவிடாமல் காப்பவர் என்றும் காலபைரவரை சொல்வார்கள்.
கடுமையான கிரக தோஷம் உள்ளவர்கள் பைரவ வழிபாடு செய்தால், கிரக தோஷங்களில் இருந்து விடுபடலாம் என்பது ஐதீகம். எவராலும் தீர்க்க முடியாத பிரச்சனைகளை பைரவர் தீர்த்து வைப்பார் என்கிறார்கள்;.
64 பைரவர்கள் இருந்தாலும் சில குறிப்பிட்ட பைரவர்களைதான் வணங்கி வருகிறோம். பைரவருக்குள் நவகிரகங்களும் அடங்கி உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன. அனைத்து ராசியினரும் பைரவரை வணங்கினால் கிரக தோஷங்கள் நீங்கும் என்பது ஐதீகம்.
பைரவரை ஒவ்வொரு ராசியினரும் எப்படி வழிபட வேண்டும்? என்பதற்கு வழிமுறை உள்ளது. இவ்வாறாக ராசிக்கு ஏற்ப பைரவரை வணங்கினால் தோஷங்கள் தீர்ந்து, நல்வாழ்வு பெறுவார்கள் என்பது நம்பிக்கை.
தலை முதல் பாதம் வரை ஒவ்வொரு ராசியினரும், ஒவ்வொரு அம்சங்களை பார்த்து வழிபடுவது மிகவும் நல்லது. அவ்வகையில்,
▪மேஷ ராசிக்காரர்கள் பைரவருடைய உடலில் சிரசு எனப்படும் தலைப்பகுதியை பார்த்து வணங்குவது தோஷத்தை போக்கும்.
▪ரிஷப ராசிக்காரர்கள் கழுத்து பகுதியையும்,
▪மிதுன ராசிக்காரர்கள் தோல் பகுதியையும்,
▪கடக ராசிக்காரர்கள் மார்பையும்,
▪சிம்ம ராசிக்காரர்கள் வயிற்றுப் பகுதியையும்,
▪கன்னி ராசிக்காரர்கள் குறியையும்,
▪துலாம் ராசிக்காரர்கள் தொடை பகுதியையும்,
▪விருச்சிக ராசிக்காரர்கள் முட்டியையும்,
▪தனுசு ராசிக்காரர்கள் மற்றும்
▪மகர ராசிக்காரர்கள் முட்டியின் கீழ்ப்பகுதியையும்,
▪கும்ப ராசிக்காரர்கள் கணுக்காலையும்,
▪மீன ராசிக்காரர்கள் பாதம் பார்த்து வழிபட தோஷங்கள் நீங்கும்.
வேண்டிய வேண்டுதல்கள் நிறைவேற கால பைரவருக்கு அஷ்டமி திதிகளில் அல்லது ஞாயிற்றுக்கிழமைகளில் 8 முறை வலம் வந்து, செவ்வரளி மலரால் அர்ச்சனை செய்து, பைரவர் அஷ்டகம் வாசித்தால் நினைத்ததெல்லாம் நடக்கும்.
சிவாலயங்களில் முதல் வழிபாடு விநாயகருக்கு என்றால், இறுதி வழிபாடு பைரவருக்கு.
ஒருவகையில் ஆலயத்தின் காவல் தெய்வமாக கருதப்படும் சிவனுடைய அம்சமான பைரவர் எட்டு மற்றும் அறுபத்து நான்கு என்ற வகையில் அருள்புரிகிறார்.
அஷ்டமி தினத்தன்று அஷ்ட லட்சுமிகளும் பைரவரை வழிபடுவதாகவும், அதனால் அன்றைய தினம் பைரவரை வணங்குவோர் சகலவிதமான வளங்களையும் பெறுவர்.
ஓம் நமசிவாய 🙏