Home ஆன்மீக செய்திகள் பெண் சாபத்தால் ஏற்படும் விளைவுகள்

பெண் சாபத்தால் ஏற்படும் விளைவுகள்

by admin
dosha-pariharam_பெண் சாபத்தால் ஏற்படும் விளைவுகள்

பெண் சாபம் உள்ளவர்களுக்கு தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்காமல் இளவயதில் தாயை இழக்கும் அல்லது பிரியும் நிலை ஏற்படும். காதல் தோல்வி, மனைவியால் சித்ரவதை அல்லது அடங்காத மனைவியுடன் வாழ வேண்டிய கட்டாயம். கணவன், மனைவி பிரிவினை. விவாகரத்து, ஆரோக்கிய குறைபாடு போன்ற விளைவுகள் உண்டாகும்.

குழந்தை பாக்கியமின்மை, திருமணத் தடை அல்லது சிலருக்கு திருமணமாகாமல் போவது ஏற்படும். இன்றைக்குத் திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண்களுக்குப் மணப்பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது.

திருமணத் தடையை சந்திப்பதில் ஆண்களே முதலிடம் வகிக்கிறார்கள். பெண் குழந்தை வேண்டாம் என்று பல பெற்றோர்கள் செய்த பாவம், இன்றைக்கு பெண்களே இல்லையோ என பயப்படும் நிலையை ஏற்படுத்தி விட்டது. இதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது.

இன்று பல மேட்ரி மோனி சென்டரில் திருமணத்திற்கு பதியும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதே இதற்கு சாட்சி.

You may also like

Translate »