Home ஆன்மீக செய்திகள் திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பரிகார பூஜை

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பரிகார பூஜை

by admin
Rahu-Ketu-Peyarchi-on-temples-திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோவிலில் ராகு-கேது பரிகார பூஜை

திருப்பாம்புரம் சேஷபுரீஸ்வரர் கோயில் தமிழ்நாடு திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருப்பாம்புரம் எனும் ஊரில் அமைந்துள்ள ஒரு சிவாலயம் ஆகும்.  இத்தலத்தில் ஆதிசேடன் வழிபட்டான் என்பது தொன்நம்பிக்கை. நாகதோஷம் நீங்கவும், மகப்பேறு வாய்க்கவும், ராகு, கேது போன்ற சந்தர்ப்ப தோஷங்கள் விலகவும் சிறந்த தலம் என வழிபடுவோரால் நம்பப்படுகிறது.

நாகராஜனான வாசுகியும், இன்னும் சில பாம்புகளும் ஒரு மகாசிவராத்திரி இரவில் முதல் காலத்தில் கும்பகோணம் நாகேஸ்வரர் கோயிலிலும், இரண்டாம் காலத்தில் திருநாகேஸ்வரத்திலும், மூன்றாம் காலத்தில் திருப்பாம்புரத்திலும், நான்காம் காலத்தில் நாகூரிலும் வழிபட்டு பலன் அடைந்ததாகத் தலபுராணங்கள் கூறுகின்றன.

இந்த கோவிலில் ராகு-கேது தோஷ பரிகார பூஜை நடந்தது. பூஜையை சிவாச்சாரியார் கவுரிசங்கர் நடத்தினார்.

இதில் ராகு-கேது தோஷம், நாக தோஷம், கால சர்ப்ப தோஷம் உள்ள பக்தர்கள், வெள்ளியால் ஆன நாகத்திற்கு பால், பன்னீர், தேன், திரவியங்கள், சந்தனம், இளநீர் ஆகியவற்றால் அபிஷேக, ஆராதனைகள் செய்து வழிபட்டனர்.

இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் முருகன், மேலாளர் வள்ளிகந்தன் ஆகியோர் செய்து இருந்தனர்.

You may also like

Translate »