Home ஆன்மீக செய்திகள் சித்திரை மாத கார்த்திகை விரதத்தின் பலன்கள் என்ன?

சித்திரை மாத கார்த்திகை விரதத்தின் பலன்கள் என்ன?

by admin
Karthigai-Viratham-Murugan_சித்திரை மாத கார்த்திகை விரதத்தின் பலன்கள் என்ன

முருகப் பெருமானை வழிபடுவதற்குரிய சிறப்பான ஒரு தினமாக சித்திரை கிருத்திகை தினம் இருக்கிறது. இன்று சித்திரை கிருத்திகை. இந்த கிருத்திகை நட்சத்திரம் சூரிய பகவானுக்கு உரிய நட்சத்திரம் ஆகும். சித்திரை மாதம் வருகின்ற கிருத்திகை தினத்தில் விரதம் மேற்கொள்வதால் நவகிரகங்களில் சூரிய பகவானின் தோஷங்கள் நீங்கி அவரின் முழுமையான அருளும் கிடைக்கப் பெறுகிறது.

முருகனின் அருளாற்றல் அனைவருக்கும் கிடைக்கும் இத்தினத்தில் அதிகாலை எழுந்து குளித்து முடித்து விட்டு விரதத்தை ஆரம்பிக்க வேண்டும். பின்னர் பூஜையறையில் முருகப்பெருமான் படத்திற்கு பூக்கள் சாற்றி, தீபம் ஏற்றி காலை முதல் மாலை வரை உணவு ஏதும் உண்ணாமல் விரதம் இருந்து, மாலையில் முருகன் கோயிலுக்கு சென்று முருகனை வழிபட்ட பின்பு பால், பழம் சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

வீட்டில் இருப்பவர்கள் கந்த சஷ்டி கவசம், ஷண்முக கவசம், முருக மந்திரங்கள் போன்றவற்றை பாராயணம் செய்து முருகனுக்கு சர்க்கரை பொங்கல், கேசரி போன்றவற்றை நைவேத்தியம் செய்து வணங்க வேண்டும். வீட்டில் மாலை வேளைகளில் தீபமேற்றி, முருகப்பெருமானின் படத்திற்கு, செண்பகம், செம்பருத்தி, செவ்வரளி, சிவப்பு ரோஜா மலர்ககளில் ஏதாவது ஒரு வகையினை சாற்றி, தூபங்கள் காட்டி வழிபாடு செய்ய வேண்டும்.

இந்த சித்திரை மாத கிருத்திகை வழிபாடு மற்றும் விரதம் மேற்கொள்வதால் உங்களுக்கு ஏற்படுகின்ற சூரிய கிரக தோஷங்கள் நீங்கும். எதிரிகளின் தொல்லை, காரியங்களில் ஏற்படும் தடை, தாமதங்கள் நீங்கும். பூமி லாபம் ஏற்படும். சொந்த வீடு கட்டுவதில் ஏற்படும் பிரச்சனைகள், தடைகள் நீங்கும்.

கிருத்திகை நட்சத்திர விரத பலன்கள்:

கிருத்திகை நட்சத்திரத்தன்று விரதம் இருந்து முருகப்பெருமானை வழிபடுபவர்கள் நிறைவான அறிவு, நிலையான செல்வம், நீண்ட ஆயுள், அன்பும் பண்பும் நிறைந்த வாழ்க்கைத்துணை, நல்ல குணமுள்ள குழந்தைகள் ஆகிய பேறுகளைப் பெற்று சிறப்பாக வாழ்வார்கள்.

மேலும், இரவில் நித்திரை செய்யாமல் விழித்திருந்து கந்த மந்திரங்களை ஜெபித்து மறுநாள் ரோகிணி நட்சத்திரத்தன்று காலையில் மீண்டும்  நீராடி நித்திய வழிபாடுகளை புரிந்து கந்தன் அடியார்களுக்கு அன்னதானம் செய்து அவர்களுடன் கூடி உணவுண்ண வேண்டும். இதனால் வாழ்வில் கஷ்டங்கள் இன்றி நிம்மதி கிடைக்கும்.

You may also like

Translate »