Home ஆன்மீக செய்திகள் அதிக மதிப்பெண் பெற உதவும் விரத வழிபாடு

அதிக மதிப்பெண் பெற உதவும் விரத வழிபாடு

by admin
Viratham-Hayagriva-Saraswati_அதிக மதிப்பெண் பெற உதவும் விரத வழிபாடு

ஓருவர் ஜாதகத்தில் சந்திரம் பலம் பெற்றிருந்தால் தான் நினைவாற்றல் நன்றாக இருக்கும். நிகழ்கால தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இயலும். மேலும் ஜாதகத்தில் ஞானக்காரகன் கேதுவும், வித்யாகாரகன் புதனும் படிப்பு ஸ்தானத்தோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்.

அப்பொழுது தான் கல்வியிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்க முடியும். மறதி இல்லாத மனிதராக வாழ்ந்து மகத்தான சாதனைகளை படைக்க முடியும். சில பிள்ளைகளுக்கு மறதி அதிகமாக இருக்கும். எதை சொன்னாலும் அடுத்த நிமிடமே மறந்து விடுவார்கள். பெரிவர்கள் கூட ஒரு காரியத்தை செய்ய சொல்லியபோது செய்யாமல் விட்டுவிட்டால் ஆஹா மறந்து மறந்து போய்விட்டது. நாளை செய்கின்றேன் என்பார்கள்.

மறதி என்ற மூன்றெழுத்துக்குள்ளேதான் மதி என்ற இரண்டெழுத்தும் இருக்கிறது. மதி என்றால் சந்திரன் என்று பொருள். படிப்பில் அதிக மதிப்பெண் பெற கல்வி வளம்பெற கலைகளில் தேர்ச்சி பெற ஹயக்ரீவர் வழிபாடு உகந்தது. சரஸ்வதி படம் வைத்து கசலகலாவல்லி மாலை பாடி வழிபாடு செய்வத மிகவும் உகந்தது.

You may also like

Translate »