உலகில் கோடான கோடி நபர்கள் வாழ்கிறார்கள். பல கோடி நபர்களுக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோஷ பாதிப்பு உள்ளது. இதில் பலர் சர்பத்தை நேரில் கூட பார்த்து இருக்க மாட்டார்கள். பின் எவ்வாறு சர்ப்ப தோஷம் ஏற்பட்டது என்பதை சிந்திக்க வேண்டும். இவைகள் கர்ம வினை ஊக்கிகள் என்பதால் ஒருவரின் செயல்பாடுகளால், கீழ் வரும் காரணங்களால் மட்டுமே ஒருவருக்கு சர்ப்ப, கால சர்ப்ப தோஷம் ஏற்படுகிறது.
ராகு மற்றும் கேது என்பது முன்னோர்கள் வழிவழியாய் தொடர்ந்து செய்து வரும் பாவங்களை உணர்த்தும் கிரகங்கள். ராகு தந்தை வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும், கேது தாய் வழி முன்னோர்கள் செய்த பாவங்களையும் காட்டுகிறது.
தோஷம் பரம்பரையாக தொடர்ந்து வரும். ஜாதகருக்கு பழி வாங்கும் உணர்வு இருந்து கொண்டே இருக்கும். அடுத்தவர்கள் மீது பழி சுமத்தி தப்பித்து விடுவார்கள். குற்ற உணர்வு குறைவுபடும். யாரையும் எளிதில் நம்ப மாட்டார்கள். நம்பியவர்களை சார்ந்தே வாழ்வார்கள்.
மன குழப்பம் அல்லது பய உணர்வு இருந்து கொண்டே இருக்கும். தானும் குழம்பி மற்ற வர்களையும் குழப்புவார்கள். ஜீரணக் கோளாறு மிகுதியாக இருக்கும். எந்த முடிவையும் உடனடியாக எடுக்க மாட்டார்கள் அல்லது முடிவு எடுக்கும் திறன் குறைவாக இருக்கும் கூண்டுக்கிளியாக வீட்டில் அடைபட்டு இருப்பதை விரும்புவார்கள்.