Home கரிய வெற்றி உண்டாகும் கரிய
வெற்றி உண்டாகும்-சரஹணபவ

கரிய
வெற்றி உண்டாகும்-சரஹணபவ

by admin

எந்த காரியத்திற்காக கிளம்பும் முன் இதை ஜெபித்து

திருநீறு அணிந்து செல்ல கரிய
வெற்றி உண்டாகும்.

ஷண்முக சடாட்சரம்,
ஆறெழுத்து மந்திரம்
எனப்படும் சரஹணபவ
மந்திரத்தின் பிரயோகம்:

1. சரஹணபவ

என தொடர்ந்து ஜெபித்து வர

சர்வ வசீகரம் உண்டாகும்.

2. ரஹணபவச

என தொடர்ந்து ஜெபித்து வர

செல்வம், செல்வாக்குடன் கூடிய

வளவாழ்வு உண்டாகும்.

3. ஹணபவசர

என தொடர்ந்து ஜெபித்து வர

பகை, பிணி நோய்கள் தீரும்.

4. ணபவசரஹ

என தொடர்ந்து ஜெபித்து வர

எதிர்ப்புகள், எதிரிகளால்

வரும் துன்பங்கள் நீங்கும்.

5. பவசரஹண

என தொடர்ந்து ஜெபித்து வர

உலகத்து உயிர்கள் யாவும் மனிதர்கள்

முதல் ஜீவ ஜந்துக்கள் வரை நம்மை விரும்பும்.

6. வசரஹணப

என தொடர்ந்து ஜெபித்து வர

எதிரிகளின் சதி, அவர்களால் வரும்

தீமைகள் யாவும் செயலற்றுப்போகும்.

அவரவருக்கு தேவை என்னவோ
அதற்குண்டான மந்திரத்தை தேர்ந்தெடுத்து ஜெபிக்கவும்.

ஜெபம் ஆரம்பம் செய்யும் நாள் வளர்பிறை காலத்தில் விசாகம் அல்லது கார்த்திகை நட்சத்திரத்தன்றோ,
செவ்வாய்க்கிழமை அன்றோ இருந்தால் சிறப்பு. 90 நாட்கள் குறைந்தது 108
அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் ஜெபிக்கலாம்.

முதல் நாளும், ஜெபம் முடிக்கும் நாளும் வெற்றிலை, பாக்கு, திணை
மாவு, பழங்கள் வைத்து வழிபடவும்.
மற்றைய நாட்களில் இயன்றதைப் படைக்கலாம். டைமண்ட் கல்கண்டு கூட படைக்கலாம்.

ஒரு செம்புத் தட்டில் விபூதி பரப்பி அதில் அறுகோணசக்கரம் வரைந்து அதில் முதல் கோணத்திலிருந்து (அதாவது மேலே முதலாவது கோணம்) நாம் ஜெபிக்கும் மந்திரத்தை வரிசையாக ஆறுகோணத்திலும் எழுதி அறுகோண நடுவில்

”றீங்”

என்று எழுதி ஜெபம் செய்து அந்த
விபூதியை அணிந்து வர விரைவான சிறந்த பலன் உண்டாகும்.

மேற்கண்ட மந்திரங்களை வெறுமனே ஜெபிப்பதை விட முன்னால் * ஓம் றீங் *, எனச் சேர்த்து ஜெபித்தால் அதிக வீரியமாய் மந்திரம் பலன் தரும்.

உதாரணமாக :

சர்வ வசீகரம் வேண்டி ”சரஹணபவ”

என ஜெபிக்கவேண்டும்

அதை ”ஓம் றீங் சரஹணபவ”

என ஜெபிக்க வேண்டும்.

திருச்சிற்றம்பலம்
🙏🌸🙏

You may also like

Translate »