Home ஆன்மீக செய்திகள் பைரவரை எந்த நேரத்தில் விரதம் இருந்து வழிபட்டால் என்ன பலன்?

பைரவரை எந்த நேரத்தில் விரதம் இருந்து வழிபட்டால் என்ன பலன்?

by admin
Bhairava-Viratham_பைரவரை எந்த நேரத்தில் விரதம் இருந்து வழிபட்டால் என்ன பலன்

பைரவப் பெருமானை விரதம் இருந்து காலையில் வழிபட சர்வ நோய்களும் நீங்கும்.

பகலில் வழிபட விரும்பியது யாவும் கிட்டும்.

மாலையில் வழிபட இதுவரை செய்த பாவம் யாவும் விலகும்.

இரவு அதாவது அர்த்த சாமத்தில் வழிபட வாழ்வில் எல்லா வளமும் பெருகி மன ஒருமைப்பாடும் கிடைத்து முக்திநிலை என்ற இறைப்பரம் பொருளான பைரவப் பெருமானை அடையும். சாகாக் கல்வியும், மரணமில்லாப் பெருவாழ்வும் கூட கிட்டும்.

பைரவப் பெருமானுக்கு சிறு துணியில் மிளகை சிறு மூட்டையாகக் கட்டி நல்லெண்ணெய் அகல் தீபத்தை ஏற்றி வழிபட எல்லா வளமும் பெருகும். தேங்காய் மூடியில் நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம். அதேபோல் பூசணிக்காயை மத்தியில் இரண்டாகப் பிளந்து அதனுள் எண்ணெய் அல்லது நெய் நிரப்பி தீபம் ஏற்றி வழிபடலாம்.

பைரவப் பெருமானுக்கு சர்க்கரைப் பொங்கல், தயிர் சாதம், தேன், செவ்வாழை, வெல்லப் பாயாசம், அவல் பாயாசம் நெய்யில் போட்டு எடுக்கப்பட்ட உளுந்து வடை, சம்பா அரிசி சாதம், பால் மற்றும் பல பழவகைகள் வைத்து வழிபாடு செய்வது மிகவும் உத்தமம்.

பிடித்த மாலைகள்

பைரவருக்கு தாமரைப்பூ மாலை, வில்வ மாலை, தும்பைப்பூ மாலை, சந்தன மாலை அணிவித்து மல்லிகைப்பூ தவிர்த்து செவ்வரளி, மஞ்சள், செவந்தி மற்றும் வாசனை மலர்களைக் கொண்டு அர்ச்சனை செய்வது உத்தமம்.

You may also like

Translate »