Home ஆணவம் ஆணவம் வந்தால் என்னவாகும்?

ஆணவம் வந்தால் என்னவாகும்?

by admin

ஒருவன் அழிவிற்குக் காரணம் யார்? அவனே அழிவிற்குக் காரணம்.

வேறு யாரும் கிடையாது? இதுதான் நிதர்சனம்.

நம் வாழ்க்கையில் ஆணவம் மட்டும் எக்காரணத்தைக் கொண்டு வரக்கூடாது. வரவிடக்கூடாது.

அப்படி ஒருவருக்கு ஏதாவது ஒரு வகையில் ஆணவம் ஏற்பட்டால் அவனே அழிவது திண்ணம்.

அதாவது எதன் மூலம் ஆணவம் கொள்கிறானோ அதன் மூலமே அழிவிற்குக் காரணமாகிறான்.

இது பல புராணங்கள் வாயிலாக நாம் கண்டும் மற்றும் மற்றவர்களின் வாழ்க்கையில்  கண்டும் கேட்டும் உள்ளோம்.

*யார் யார் எந்தெந்த வகையில் ஆணவம் கொண்டால் கெடுகிறான் , எது பறிபோகிறது, எதை இழக்கிறான் , எதுபோகும்.  என்று பார்ப்போம்*

1. கல்வியில் ஆணவம் – அறிவு போகும்.

2. இசையில் ஆணவம் – குரல் போகும்.

3. வீரத்தில் ஆணவம் – கூட இருப்பவனே அழிவைத் தருவான்.

4 . தொழிலில் ஆணவம் – வியாபாரம் சரியும்.

5. செல்வம் கொண்டவனுக்கு (பணக்காரனுக்கு ) ஆணவம்- மெல்ல மெல்லச் செல்வம் அழியும்.

6. தலைவன் என்று ஆணவம் கொண்டால் – தகுதியை இழப்பான்.

7. அதிகாரி ஆணவம் கொண்டால் – பதவியை  இழப்பான்.

8. வேலையாள் ஆணவம் கொண்டால் – வேலையை இழப்பான்.

9. ஒரு பெண் தான் அழகு என்று ஆணவம் கொண்டால் – தனது அழகை ஏதாவது வகையில் இழப்பாள்.

10. ஒரு பிராமணன் ஆணவம் கொண்டால் – தவ வலிமையை இழப்பான் .

11. ஒரு வைசியன் ஆணவம் கொண்டால் – அவமானத்தை அடைவான்.

12. குரு ஆணவம் கொண்டால் – புத்தியை இழப்பார்.

13. தான் செய்யும் செயலில் ஆணவம் கொண்டால் – நிதானத்தை இழப்பான்.

14. தற்பெருமையினால் ஆணவம் கொண்டு பேசுபவன்- மதிப்பை இழப்பான்.

15. அரசன் ஆணவம் கொண்டால் – நாட்டை இழப்பான்.

ஆகவே ஒரு மனிதன் ஏதாவது வகையில் ஆணவம் கொண்டால் அவ்வழியே அழிவைச் சந்திப்பான்.

Translate »