290
திண்டிவனத்திலிருந்து மயிலம் வழியாகப் புதுவை செல்லும் சாலையில் பெரும்பாக்கம் என்னும் இடத்திலிருந்து தெற்கிலும் விழுப்புரத்திலிருந்து திருக்கனூர் வழியாகப் புதுவை செல்லும் சாலையில் திருக்கனூருக்கு வடக்கிலும் உள்ளது திருவக்கரை.
இங்கு எழுந்தருளியுள்ள சந்திரளெலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள வக்கிர காளியம்மனைப் பவுர்ணமி நாள்களில் தொடர்ந்தோ அல்லது மூன்று மாதப் பவுர்ணமி தினத்தில் தரிசனம் செய்தால் நினைத்த காரியங்கள் கை கூடும். மனசாந்தி கிடைக்கும்.
பவுர்ணமி நாளில் நள்ளிரவு நேரத்தில் சந்தனக் காப்பு அலங்காரத்துடன் இருக்கும் காளியம்மனை வணங்கும்போது அம்மனின் சாந்த சொரூப தரிசனத்தைக் காணலாம். இதனால் தாயின் பூரண கடாட்சம் பெற்று பல சவுகரியத்தை அடையலாம்.