Home ஆன்மீக செய்திகள் வறுமையை போக்கும் திருவானைக்காவல் குபேர லிங்கம்

வறுமையை போக்கும் திருவானைக்காவல் குபேர லிங்கம்

by admin
thiruvanaikaval-kubera-lingam_வறுமையை போக்கும் திருவானைக்காவல் குபேர லிங்கம்

திருவானைக்காவல் ஜம்புகேஸ்வரர் ஆலயத்தின் கிழக்கு கோபுரம் வழியாக உள்ளே நுழைந்ததும், குபேர லிங்கத்தை தரிசிக்கலாம். தன்னிடம் இருக்கும் சங்கநிதி, பதுமநிதிகள் நீங்காதிருக்க ஈசனை நோக்கி குபேரன் இங்கு தவமியற்றினான். ஈசனோ, ‘உன் நிதிகள் உன்னிடமே நிலைத்திருப்பது என்பது, மகாலட்சுமியின் அருளால்தான் சாத்தியம்’ என்று சொல்லி மறைந்தார்.

இதையடுத்து குபேரன் மகாலட்சுமியை நோக்கி தவமியற்றி திருமகளின் திருக்கரத்தால் சுயம்பு லிங்கத்தை பெற்று இத்தலத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட்டான். இங்குள்ள குபேர லிங்கத்தை, சுக்ர ஓரையில் வெண் பட்டாடை சாத்தி வழிபாடு செய்தால், வறுமை நீங்கி செல்வம் பெருகும் என்பது ஐதீகம்.

You may also like

Translate »