Home ஆன்மீக செய்திகள் கிழமைகளும்… விரத பலன்களும்…

கிழமைகளும்… விரத பலன்களும்…

by admin
weeks-viratham-benefits_கிழமைகளும்... விரத பலன்களும்...

ஆன்மிக ரீதியாக கடைப்பிடிக்கப்படும் விஷயங்களில் விரதம் என்பது, அறிவியல் மற்றும் மருத்துவ ரீதியாக உடல் செல்கள் புத்துயிர் அடைய உதவும் ஒரு செயல்முறையாக கண்டறியப்பட்டுள்ளது.

ஞாயிற்றுக்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் நீடித்த நோயில் இருந்து விடுதலை பெறுவதுடன், நோய்கள் வராமல் தடுத்துக் கொள்ளலாம்.

திங்கட்கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடும்பத்தில் பரஸ்பர அன்பும், அமைதியும் நிலவும்.

செவ்வாய்க்கிழமை விரதம் இருப்பதன் மூலம் குடும்ப உறவுகளுக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் விலகி ஒற்றுமை ஏற்படும்.

புதன்கிழமைகளில் விரதம் இருப்பதன் மூலம் கல்வி, கேள்விகளில் தேர்ச்சி ஏற்படும்.

வியாழக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் புத்திர பாக்கிய தடைகள் நீங்கி சத்புத்திர பாக்கியம் கிடைக்கும்.

வெள்ளிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் தம்பதியர்களுக்கு ஆயுள் தோஷங்கள் விலகப்பெறும்.

சனிக்கிழமை விரதம் இருப்பதன் மூலம் வேலை, தொழில் ஆகியவை விருத்தி பெற்று செல்வம் பெருகும்.

You may also like

Translate »