Home ஆன்மீக செய்திகள் பிரச்சனை தீர பிரார்த்தனை சீட்டு எழுதும் பக்தர்கள்

பிரச்சனை தீர பிரார்த்தனை சீட்டு எழுதும் பக்தர்கள்

by admin
Vekkaliamman-Pariharam_பிரச்சனை தீர பிரார்த்தனை சீட்டு எழுதும் பக்தர்கள்

திருச்சி நகரின் மேற்கு பகுதியில் மத்திய பஸ் நிலையத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவிலும், சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிலும் அமைந்துள்ளது உறையூர். இங்குள்ள வெக்காளியம்மன் வடக்கு நோக்கி அமர்ந்து பக்தர்களின் மனக்குறைகளை நிவர்த்தி செய்து காவல் தெய்வமாகவும், கருணை மிகுந்தவளாகவும் அவர்களது மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்து இருக்கிறாள்.

தொழில் நஷ்டம், கடன் பிரச்சினை, குடும்ப பிரச்சினை போன்ற பல்வேறு பிரச்சினைகள் நீங்கவும், நோய், நொடியின்றி நலமாக வாழவும், கல்வி, பொருளாதார நிலைகளில் மேம்பாடு அடையவும், தங்களின் தீராத பிரச்சினைகளை நிறைவேற்றிட வேண்டி சூலத்தில் பக்தர்கள் தங்களது பிரார்த்தனை சீட்டுகளை எழுதி, கட்டுவதுதான் இன்றைக்கும் வழக்கமாக இருக்கிறது. தங்களின் பிரார்த்தனை நிறைவேறியதும், பக்தர்கள் கோவிலுக்கு தாங்கள் வேண்டியதை காணிக்கையாக செலுத்துவதுடன் அம்மனுக்கு புடவை எடுத்து, தேங்காய், பழம் உடைத்து பொங்கல் வைத்து வழி படுகிறார்கள்.

தீராத நோயால் அவதிப்படுபவர்கள் வெக்காளியம்மனை மனமுருகி வழிபட்டால் அவர்களது நோய் தீருவதாக கூறப்படுகிறது. இதையடுத்து, பக்தர்கள் மாடு, ஆடு, கோழி ஆகியவற்றை கோவிலுக்கு நேர்ந்து விடுவார்கள். சில பக்தர்கள் வெக்காளியம்மனுக்கு கோவில் வெளியே ஆடு, கோழிகளை பலியிட்டு தங்களது நேர்த்திக்கடன்களை செலுத்துவார்கள்.

You may also like

Translate »