Home ஆன்மீக செய்திகள் ஶ்ரீ அனுமன் ஜெயந்தி !!

ஶ்ரீ அனுமன் ஜெயந்தி !!

by admin
anjanayar-ஶ்ரீ அனுமன் ஜெயந்தி

ராம ராம ராம ராம !!

எங்கெல்லாம் ராம நாமம் ஒலிக்கிறதோ, அங்கெல்லாம் பக்திப் பரவசத்துடன் கண்களில் நீர் மல்க எவன் கானப்படுகிரானோ, அவனே மாருதி எனும் வாயுபுத்திரன்’ என்ற வாசகங்களால் ஆஞ்சநேயன் எனும் ஹனுமனுக்கு அடையாளம் காட்டபடுகிறது. ராம ஸேவை ஒன்றையேலட்சியமாகக் கொண்டு, ராமநாமத்தையே யுகம் யுகமாக ஜபித்துக் கொண்டு இருப்பவன் சிரஞ்சீவியான அனுமன்.

ராம நாமத்தை உச்சரித்தால் கோடான கோடி நன்மைகள் ஏற்படும். அதில் முக்கியமானது பிரிந்த தம்பதியர் ஒன்று சேருவர்.

ஸ்ரீ ராமர் வழிபாடு செய்தால் குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிப்பதோடு, நாம் எந்த முயற்சி எடுத்தாலும் அதில் வெற்றியும், மன நிம்மதியும் ஏற்படும்.

ஸ்ரீ ராம ஜெயம் எழுதி வேண்டிக் கொண்டால் நாம் இழந்த பதவியை அடையலாம். இழந்ததை செல்வம் திரும்ப கிடைக்கும்.

ஒருவரின் வாழ்க்கையில் மிக முக்கியமான தருணமாக அமைவது திருமணம். திருமணத்திற்குப் பிறகு ஒருவன் மகிழ்ச்சி, மன நிறைவு, நிம்மதியுடன் இருக்க வேண்டுமானால் அவர்களின் துணையின் அன்பு, ஆதரவு, புரிதல் மிகவும் அவசியம்.

ஒருவருக்கு நிம்மதியான நல்ல துணை அமைந்து விட்டால் அவன் வாழ்வில் எல்லா இன்பங்களையும் பெற்று வாழ்வான். சிலரின் திருமண வாழ்வில் துணையுடனான கருத்து வேறுபாடுகளால் தம்பதிகள் பிரியும் நிலை ஏற்படுகிறது.

அப்படி பிரிந்த தம்பதியர் ஒன்று சேரவும், குடும்பத்தில் சகோதர, சகோதரிகளிடையே ஒற்றுமை மேம்பட இனிதே சொல்ல வேண்டிய மந்திர ராம மந்திரம்.

ராமனின் வாழ்க்கையை, ‘ஒரு வில், ஒரு இல், ஒரு சொல்’ என வாழ்ந்து காட்டியவர். அதனால் தான் இன்றளவும் ராமாயணம் போற்றி கொண்டாடப்பட்டு வருகிறது.

ராம நாமத்தை நாம் முழு பக்தியுடன் ஜெபித்தால் நமக்கு மோட்சம் உண்டு. “ராம நாமம் எல்லா நாம ஜபங்களை விட இனிமையானது.

ராம நாமம் மற்ற மூல மந்திரங்களுக்கெல்லாம் மூத்த மந்திரம் என கம்பரால் புகழப்படுகிறது. ராம நாமத்தை உச்சரித்தால் நம் உடலில் மின்சாரம் பாய்வது போன்ற உணர்வு, இன்பதை தரும்.

கதிரவனைக் காணக் கைவிளக்கு தேவையா? 

நமக்கு எப்பொழுதெல்லாம் சோர்வு ஏற்படுகிறதோ அப்பொழுதெல்லாம் அதாவது உடலும் உள்ளமும் துவளும் போதெல்லாம் வாயுபுத்திரன்

அனுமன் புஷ்டியை அளித்துக் காப்பான்.

சங்கடங்கள், ஆபத்துகள் நிறைந்த நேரங்களில் மனம் நிலைகுலையாது செயலாற்றும் நிர்பயத்துவம் என்ற பயமின்மை தரும் மகிமை அனுமனை வணங்கினால் கிடைக்கும் .

ஒரே பகலில் கதிரவனிடமிருந்து ஆயகலைகள் அறுபத்து நான்கினையும் கற்ற, அனுமான் என்கிற புத்திமான். புத்தி வளர்வதற்கு அவனடி பற்றுவோம்.

புத்தியின் வலிமையும் அறிவின் கூர்மையும் மிகுந்தவன், அனுமன். தோல்வியின் தொடர்ச்சியில் மனம் கலங்கிய நிலையில் எதிலும் முடிவெடுக்காமல், எதைக் கண்டாலும் தடுமாறும் நிலை மாற்றி நமக்கு வெற்றித்திருமகளின் கருணை பொழியும் பார்வையைப் பெற்றுத்தருவான் ராமதூதன் அனுமான் …

அனுமனை அணுகி அவனடி பணிந்து வேண்டினால் இம்மையிலும் மறுமையிலும், சதுர்வித புருஷார்த்தங்களும், புத்தி, வித்தை, வீரம், தைரியம், வாக்கு போன்ற அஷ்டலக்ஷ்மியின் அருளும்,

நிச்சயம் கிடைக்கும்.

யார் யாருக்கு, என்ன என்ன எப்பொழுது எங்கெங்கே எப்படியெல்லாம் வேண்டுமோ, அவையெல்லாம் கிட்டும். அவனிடமில்லாத்து ஒன்றில்லை. ஆகவே அவனை வேண்டினால் அனைத்தும் கிட்டும்.

பலவானுக்கெல்லாம் பலவான் என்று நாம் நினைக்கும் பீமனுக்கும் பெரிய பலவான்  வாயு புத்திரனை வணங்குவோம். வலிமை மிகப் பெறுவோம்.

அநுமனை வணங்கினால் நாளும் கோளும் நம்மை வாட்டாது.

சோகமும் துரோகமும் நம்மை அண்டாது..

அஞ்சனா கர்ப்பஸம்பூதம் குமாரம் ப்ரும்ம சாரிணம்,

துஷ்டக்ரஹ வினாசாய ஹனுமந்தம் உபாஸ்மஹம்மஹே

அனைத்து அலுவல்களையும் ஆனைமுகனின் ஆதரவில் தொடங்குகிறோம். முயற்சிகள் முழுமையாக முடியும்போது மும்மூர்த்திகளின் முழுமையாம் மாருதியின் திருவடி பணிகிறோம்.

முடியாத பணிகளையும் முடித்து வைப்பவன் ஜெய மாருதி.

அசாத்தியத்தைச் சாதிப்பவன். இராமதூதன்,

அஸாத்ய ஸாதக ஸ்வாமின்; அஸாதயம் தவகிம் வத

ராமதூத தயாஸிந்தோ மத் கார்யம் ஸாதய ப்ரபோ

காற்று ஈன்ற காவியமாம் நாவரசை நாளும் நம்பி நாமும், தொழுவோம்.

நமோஸ்து ராமாய ஸ லக்ஷ்மணாய

தேவ்யைச தஸ்ய ஜனகாத்மஜாயை

நமோஸ்து ருத்ர இந்தர யம அநிலேப்யக

நமோஸ்து சந்தராக்க மருத் கணேப்ய:

என்ற அனுமனின் மஹா மந்திரம் உடலில் அயர்ச்சியையும்  உள்ளத்தில் தளர்ச்சியையும் ஒருங்கே அகற்றி புத்துணர்ச்சியும் ,

தெளிவும் ,தைரியமும் அளிக்கும் மாமருந்தாக திகழ்கிறது..

ராமநாமம் நினைப்போம்! 

ராமநாமம் துதிப்போம்! ! 

ராமநாமம் பற்றி நிற்போம் நாளும்!

You may also like

Translate »